Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புனருதயே புரவர" “புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் – 2026 நடமாடும் சேவையுடன் கூடிய அங்குரார்ப்பண நிகழ்வு வெகுசிறப்பாக ஆரம்பம்!


காத்தான்குடி நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “புனருதயே புரவர – புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் – 2026 அங்குரார்ப்பண நிகழ்வும், நடமாடும் மக்கள் சேவையும் இன்றைய தினம் (14.09.2026) திங்கட்கிழமை காலை மிகச் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்ற இந்நிகழ்வு, நகர முதல்வர் அல்ஹாஜ் SHM. அஸ்பர் (JP, UM) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


மேலும் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், நகர சபையின் கௌரவ துணை முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, நகர சபைச் செயலாளர் திருமதி ரினோஸா முப்லிஹ், கணக்காளர் ஜனாப் MBM. இத்ரீஸ் ஆகியோருடன் நகர சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும்  கலந்துகொண்டனர்.


பொதுமக்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

பொதுமக்களின் அன்றாடப் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் நேரடியாகப் பெறப்பட்டு நகர முதல்வரால் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டன.


ஆதனவரி அறவீடு, ஆதனப் பெயர் மாற்றங்கள், வியாபார வரி செலுத்துகை, புதிய கட்டட விண்ணப்பங்கள் கையளித்தல் உள்ளிட்ட சேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டன.

தெரு மின்விளக்குப் பராமரிப்பு, வீதிச் சேதங்களைச் சீரமைத்தல் மற்றும் வடிகான் துப்பரவுப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.


 தாய்-சேய் நலம், இலவச கண் பரிசோதனை, பல் மருத்துவம் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் கால்நடைகளுக்கான விசேட மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டன.

பிரதேச செயலகத்தின் பிரத்தியேக மக்கள் சேவைப் பிரிவு மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.






























புனருதயே புரவர" “புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் – 2026 நடமாடும் சேவையுடன் கூடிய அங்குரார்ப்பண நிகழ்வு வெகுசிறப்பாக ஆரம்பம்! Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.