Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக் குழுக் கூட்டம் பிரபு MP தலைமையில்.


கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக் குழுக் கூட்டம் பிரபு MP தலைமையில். කෝරළෙයිපත්තු මධ්‍යම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ සංවර්ධන සැලසුම් කමිටු රැස්වීම ප්‍රබු එම්.පී.


கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக் குழுக் கூட்டம் 15-09-2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் ஜனாப் முபாறக்கின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில்,


பிரஜாசக்தி வேலைத்திட்டம்.
மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டம்.
கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம்.
பிரதேச செயலக மேம்பாட்டுத் திட்டம்.
அனர்த்தத் தணிப்பு வேலைத்திட்டம்.
நிலசென வேலைத்திட்டம்.
மாகாண சபை ஒதுக்கீட்டு வேலைத்திட்டம்.


அத்தனை வேலைத்திட்டத்தின் கீழும் இடம்பெற வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக உரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மேலதிக அறிவுரைகளும் அபிவிருத்திக் குழுத் தலைவரினால் வழங்கப்பட்டது.


மிக முக்கிய பேசுபொருளாக, கொழும்பு பிரதான வீதியில் உள்ள அரசுக்குச் சொந்தமானதும், தற்போது குறுகிய காலக் குத்தகை அடிப்படையில் வாழைச்சேனை ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகம் கையகப்படுத்தி உள்ள பத்து ஏக்கர் காணி சம்பந்தமாகவும், அதில் சர்வதேச உதைப்பந்தாட்ட மைதானம் அமைப்பது தொடர்பாகவும் ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஹலால்தீனால் முன்மொழியப்பட்டதுடன், அது சம்பந்தமான இறுதி முடிவினை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரால் தீர்மானம் எடுக்கப்பட்டது.


அத்தோடு,

எல் நினோ சம்பந்தமான காலநிலைத் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மக்களை விழிப்பூட்டும் விடயங்கள் சம்பந்தமாக தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.


குடிநீர் தட்டுப்பாடு, விவசாய நிலங்களுக்கான நீர் தட்டுப்பாட்டிலிருந்து மக்களை பாதுகாத்தல். பாடசாலைகள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் நீரினை வீண் விரயம் செய்வதிலிருந்தும் மக்களைத் தடுத்தல்.


கால்நடைகளைப் பாதுகாத்தல், சுகாதாரம் சம்பந்தமான விடயங்களில் ஏற்பட இருக்கும் தாக்கங்களைக் குறித்த விடயங்களைக் கண்டறிந்து பிரதேச பொதுச் சுகாதார பணிமனையை உசார் நிலையில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


வறட்சி காரணமாக திடீர் தீ விபத்துகளில் இருந்தும் மக்களைப் பாதுகாத்தல். அது சம்பந்தமாகவும், முக்கியமான சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களில் தனிநபர்களை உசார் நிலையில் வைத்தல்.

மனிதனால் உணரக்கூடிய வெப்பநிலையிலிருந்தும், வருகின்ற காலங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்குத் தயாராக இருக்க வேண்டிய முன்னேற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மேலும், போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச எல்லைக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையத்துக்கான பத்து மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் சுற்றுமதில்கள் அமைக்கும் வேலைகள், மற்றும் போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு விற்பனையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவுரையும் வழங்கப்பட்டது.

தியாவட்டவான் பிரதேசத்துக்கான குடிநீர் தட்டுப்பாடுகளுக்கான தேவையை உரிய முறையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தல்.

அதே பிரதேசத்தில் இரு மருங்கிலும் வடிகான் மேல் மதகுகள் அமைத்துக் கட்டப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றுக்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர், வாகரை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், திணைக்கள அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தார்கள்.
Ahmed Irshad
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒழுங்கமைப்புக் குழுக் கூட்டம் பிரபு MP தலைமையில். Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.