Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஒரு கல்விச் சேவையின் சிற்பியின் நூல் வெளியீட்டு விழா தொடா்பான ஊடக மாநாடு


(எம்.ஐ.அப்துல் நஸாா்)

அதிபர் எம்.ஐ.சின்னலெப்பை –ஒரு கல்விச் சேவையின் சிற்பி” நூல் வெளியீட்டு விழா தொடா்பான ஊடக மாநாடு சனிக்கிழமை (10) ஊர் வீதி சபா மண்டபத்தில் நடைபெற்றது.


மேற்படி நூல் வெளியீட்டு விழா குழு சாா்பாக காத்தான்குடியை தளமாகக் கொண்டியங்கும் இன்ஸ்பிரேசன் நிறுவனத்தின் பணிப்பாளா் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர், பன்னூலாசிரியா் ஓய்வுநிலை அதிபா் எம்.எம்.எம்.மஃறூப் கரீம் ஆகியோா் விளக்கமளித்தனா்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றிய பிரபல கல்வியாளர் அதிபர் எம்.ஐ.சின்னலெப்பை அவர்களின் வாழ்வியலையும் கல்விப் பணியையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட “அதிபர் எம்.ஐ.சின்னலெப்பை – ஒரு கல்விச் சேவையின் சிற்பி” எனும் நூல் வெளியீட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.


இவ்விழா எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் பீச்வே மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.


சமூக சேவை மற்றும் கல்வி அபிவிருத்தி அமைப்பான "ஃபோரம்ஸ் பவுண்டேஷன்" (Forums Foundation) இப் பிரம்மாண்டமான நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.


இந்நிகழ்வில் விஷேட அதிதியாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. கே.ஜீ. அருளானந்தம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்தின் நீதி அமைச்சின் நிதிப் கட்டுப்பாட்டாளரான ஜனாப். ஆகிப் சின்னலெப்பை நூலின் அறிமுக உரையை நிகழ்த்தவுள்ளார்.


நிகழ்ச்சியின் விஷேட உரைகளை பல முக்கிய கல்வியாளர்களும் சான்றோர்களும் ஆற்றவுள்ளனர்.


அதனடிப்படையில் பலாங்கொடை ஜெய்லானி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் ஜனாப். எம்.ஜே.எம்.மன்சூர் (MA,SLPS 1) காத்தான்குடி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் பன்னூலாசிரியருமான அல்ஹாஜ். எம்.எம்.எம்.மஹ்ரூஃப் கரீம் (MA) மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பதில் தலைவர் அல்ஹாஜ். எம்.சீ.எம்.ஏ. சத்தார் (BSc), ஓய்வுபெற்ற காத்தான்குடி பிரதேச செயலாளரும் கிழக்கு மாகாண சபைச் செயலகத்தின் முன்னாள் செயலாளருமான ஜனாப். எம். சீ.எம்.ஷரீஃப் (BA, SLAS) மற்றும் அல்ஹாஜ். எம்.எம்.எம். பஸ்லுல் ஹக் (Eng) ஆகியோரும் விஷேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.


வெளியீடு செய்யப்படவுள்ள இந்நூலின் திறனாய்வு மற்றும் நூல் ஆய்வுரையை ஓய்வுபெற்ற இலங்கை கல்வியியல் நிருவாக சேவை அதிகாரியான ஜனாப். எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் (MA, SLEAS) நிகழ்த்தவுள்ளார்.   


நூலின் பிரதிகள் இலவசமாக வழங்கப்படவுள்தோடு QR மூலமாகவும் இணைய தளத்திலும் வாசிக்க முடியும்.


நூல் வெளியீட்டுடன் சேர்த்து சுமாா் 15 பிரமுகா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சிகளையும் ஃபோரம்ஸ் பவுண்டேஷன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஒரு கல்விச் சேவையின் சிற்பியின் நூல் வெளியீட்டு விழா தொடா்பான ஊடக மாநாடு Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.