பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்
பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதைத் தொடர்ந்து, மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் ஓடினர்.
தெற்கு பனாமாவை, அக்டோபர் 9 தேதியன்று 7.7 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதிலும் பல கட்டடங்கள் சேதமடைந்தன. இதில் சிலர் காயமடைந்திருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கட்டடங்கள் சரிந்ததில் பல வாகனங்களில் உருத்தெரியாமல் நசுங்கின.
நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் இறங்கி ஓடினர். இதனால் பனாமா நகரத்தின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பணியாற்றிய ஊழியர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இருப்பினும், பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இதற்கிடையே அதிபர் ராவுல் முலினோ, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பேனோனோமே நகரத்திற்கு விரைந்தார். அங்கு சில கட்டடங்கள் இடிந்து விழுந்திருந்தன, ஒரு தேவாலயமும் சேதமடைந்திருந்தது. தலைநகரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ. தொலைவில் குறைந்த மக்கள்தொகை கொண்ட பகுதியில் 12.6 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 10, 2026
Rating:

கருத்துகள் இல்லை: