436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நாளை
கனிஷ்ட சேவைத் தரத்தில் 436 சுகாதார சேவை பணி உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்விற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
நாட்டில் சுதந்திர சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்துவதி மக்களுக்கு உயர்தரத்திலான, வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான சேவை வழங்கலை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் ஆளணி வள விருத்தி வேலைத் திட்டத்தை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
அதன்படி சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நாளை 11 (ஞாயிற்றுக்கிழமை) மருதானை டவர் மண்டபத்தில் (Tower Hall) அந்த 436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 10, 2026
Rating:

கருத்துகள் இல்லை: