மட்டக்களப்பு மாவட்டத்தில் பயண அனுமதி பத்திரங்கள் மற்றும் சூழலுக்கு குந்தகம் உண்டாக்கும் எரிபொருள் பாவனை தொடர்பில் பேருந்துகளில் விசேட சோதனை நடத்தப்பட உள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயண அனுமதி பத்திரங்கள் மற்றும் சூழலுக்கு குந்தகம் உண்டாக்கும் எரிபொருள் பாவனை தொடர்பில் பேருந்துகளில் விசேட சோதனை நடத்தப்பட உள்ளதுடன் வீதி விபத்துக்களை குறைக்கவும் விசேட நடவடிக்கை- கந்தசாமி பிரபு.MP தலைமையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்துக் குழுக் கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் JS. அருள்ராஜ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது போக்குவரத்து ஒழுங்கமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் மாவட்டத்தை ஊடறுத்தும் நெடுந்தூர பயண சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் பயண அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், குறித்த சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் சிலவற்றில் சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் வகையிலான எரிபொருட் பாவனை குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதால் அது தொடர்பான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சட்டவிரோத பயண செயற்பாட்டை கட்டுப்படுத்தி பொது மக்களின் தேவைக்கு ஏற்ப புதிய பேருந்து பயண அனுமதிப்பத்திரங்களை விநியோகம் செய்வதற்கான கேள்வி அனுமதி பத்திரம் கோரல் என்பன தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே வேளை, போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எச்.கே.டி.பி. ரத்நாயக்க அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதம பொறியியலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது விபத்துக்களை குறைக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பயணிகள் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயண அனுமதி பத்திரங்கள் மற்றும் சூழலுக்கு குந்தகம் உண்டாக்கும் எரிபொருள் பாவனை தொடர்பில் பேருந்துகளில் விசேட சோதனை நடத்தப்பட உள்ளது
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 16, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 16, 2026
Rating:

கருத்துகள் இல்லை: