தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன் பட்டலந்த வைக்கும் வரலாற்றுச் சோதனை! அரசியல் எல்லைகளைத் தாண்டிய உண்மை!
பல தசாப்தங்களாக மௌனமாகத் துடிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகளுக்கு நீதி வழங்குவது, அரசியல் வெற்றிகளைத் தாண்டிய மனிதநேயக் கடமையாகும்.
அரசியல் அதிகாரத்தின் செல்வாக்குகள் எத்தகையதாக இருப்பினும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதைப் பட்டலந்த புதிய விசாரணைகள் மூலம் நாட்டுக்கு நிரூபிக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
"காலம் கடந்தாலும் நீதி கிடைக்கும்" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பட்டலந்த விவகாரத்தின் ஊடாக இந்த அரசு நிலைநாட்டுமா என்பதே தற்போது ஒட்டுமொத்த இலங்கையர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் சில சம்பவங்கள் காலத்தால் மறைக்கப்படாத வடுக்களாகவே இருந்து வருகின்றன. மாறாக, அவை வெளிப்படுத்தப்பட வேண்டிய உண்மைகளாகவும், நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் ஆறாத காயங்களாகவும் தொடர்கின்றன. அவ்வாறான இருண்ட வரலாற்றுப் பக்கங்களில் ஒன்றுதான் பியகம- பட்டலந்த சித்திரவதைக் குற்றச்சாட்டுகள்.
1987-1990 காலப்பகுதியில் பட்டலந்தையின் அமைதியான வீடமைப்பு வளாகத்திற்குள், ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த மண்ணில், மனிதகுலத்தின் மீதான கொடுமையின் கறையாக ஒரு கறுப்பு அத்தியாயம் எழுதப்பட்டது.இளைஞர்களின் மூச்சுக் காற்றைக்கூடப் பயத்தால் உறைந்துபோகச் செய்த அந்த சித்திரவதை முகாம், முதாலித்துவ அதிகாரத்தின் அசிங்கமான முகத்தைப் பிரதிபலித்தது.
நாட்டை உலுக்கிய அந்த வன்முறைகள், சட்டவிரோதக் கைதுகள், காணாமலாக்கல்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்படும் பட்டலந்த விவகாரம், இன்று மீண்டும் இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை விவாதங்களின் மையத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அரசியல் தொடர்புகளை ஆராய்வதோடு முடிவடைவதில்லை. பியகம தொகுதியின் அதிகார மையமாகத் திகழ்ந்த அவருக்கு, தன் கண்ணெதிரே, தன் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிய அந்த வதைமுகாமில் அரங்கேறிய கொடூரங்கள் அனைத்தும் அணுவணுவாகத் தெரிந்தே இருந்தாக கூறப்படுகின்றது
ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தின் நிழலில் பாதுகாப்புப் படையினருக்கு மறைமுக வழிகாட்டியாக அவர் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்டது. அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், அரசியல் கிளர்ச்சியை அடக்குவது என்ற போர்வையில் மனித உரிமைகளை முற்றாக மிதித்துத் துவைத்தது.
மேலும், வரலாற்றில் கறுப்புப் பக்கமாகப் பதிவான பட்டலந்த சித்திரவதைக் முகாமுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டக்லஸ் (Duglus Piries) பீரிஸ் மற்றும் அப்போதைய அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் விவகாரம், நாட்டின் மனசாட்சியை மீண்டும் உலுக்கியுள்ளது. ஜே.வி.பியின் அரசியல் கிளர்ச்சிக் காலத்தில் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்குத் தலைமை தாங்கி, அரசியல் பாதுகாப்போடு துரித பதவியுயர்வுகளைப் பெற்ற டக்லஸ் பீரிஸ், 1994 ஆட்சி மாற்றத்தின் பின்னர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் போலிக் கடவுச்சீட்டுகள் மூலம் நாட்டை விட்டுத் தப்பியோடிதாகவும் கூறப்படுகின்றது.
இறந்து விட்டதாக வதந்திகள் பரப்பப்பட்ட போதிலும், அவர் மரணமடைந்ததாக நாடகமாடி இலங்கையிலேயே தலை மறைவாக வாழ்வதாக எழும் விவாதங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. எனவே, அதிகார பின்னணியுடன் நடந்த இந்தக் கொடூரக் குற்றங்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்து, டக்லஸ் பீரிஸைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்டோரின் கண்ணீருக்கு நீதி வழங்க முடியும் என்பது தற்போது அதிகாரத்திற்கு அப்பாற்று செயற்படும் சட்டத்தின் ஆட்சியை பார்த்து கேட்கும் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வியாக உள்ளது.
அந்த வகையில், உண்மையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா? அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா? என்பதே இந்த விவகாரத்தின் அடிப்படையான கேள்விகளாகும்.
1987 முதல் 1990 வரையிலான காலப்பகுதி இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் மிகுந்த வன்முறையும் அச்சமும் நிறைந்த காலமாகும். மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான அரசியல் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக அரச பாதுகாப்புப் பிரிவுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கல்கள், சட்டவிரோதக் கைதுகள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அக்காலத்தை இரத்தக் கறை படிந்த வரலாறாக மாற்றின என்பது வரலாற்றில் அழிக்க முடியா பதியப்பட்ட உண்மைகளாக உள்ளது.
அந்த இடங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தன? அங்கு யார் தடுத்து வைக்கப்பட்டனர்? அந்தச் செயல்களுக்கு யார் உத்தரவிட்டனர்? என்பன அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்விகளாகின. பட்டலந்த என்பது வெறுமனே ஒரு கட்டடத் தொகுதியின் பெயரல்ல. அரச அதிகாரத்தின் எல்லைகள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்த இலங்கையின் வரலாற்று விவாதத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒரு விவகாரமாகும்.
1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது, கடந்த காலத்தில் இடம் பெற்ற கொலைகள் மற்றும் காணாமலாக்கல்கள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவானது. அதன் தொடர்ச்சியாக, 1988–1990 காலப்பகுதியில் பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதத் தடுப்பிடங்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஆணைக்குழுவின் விசாரணைகள் 1996ஆம் ஆண்டு தொடங்கி, சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் ஆராயப்பட்ட பின்னர், 1998ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதன் அறிக்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
அந்த அறிக்கை, பட்டலந்த வளாகத்தில் சட்டவிரோதத் தடுப்பிடங்கள் பேணப்பட்டமை, சில அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் செயற்பாடுகள், காவல்துறையின் நடவடிக்கைகளில் தலையீடுகள் ஆகியவை தொடர்பில் முக்கியமான கண்டறிதல்களையும், முடிவுகளையும் முன்வைத்தது.
குறிப்பாக, அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரப் பயன்பாடு மற்றும் சில வீடுகள் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து ஆணைக்குழு கடுமையான கேள்விகளை எழுப்பியது. அறிக்கையின் முடிவுகளின்படி, சில சட்டவிரோதத் தடுப்பிடங்கள் பேணப்படுவதற்கு அவர் மறை முகமாகப் பொறுப்புடையவர் என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. அத்துடன், காவல்துறையின் பணிகளில் சட்டபூர்வ அதிகாரமின்றித் தலையிட்டதாகவும் அதன் முடிவுகள் சுட்டிக்காட்டின.
இந்தக் கண்டறிதல்கள் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எனினும், விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை என்பது குற்றவியல் நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானதல்ல. அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் கண்டறிதல்களும் முறையான விசாரணை, ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்கள், சட்ட நடைமுறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் உரிய முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். ஆகவே, அதில் சுட்டிக்காட்டப்பட்ட உண்மைகளைச் சட்டத்தின் அடிப்படையில் நிரூபிப்பதே முக்கியமானதாகும்.
ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, சில வீடுகள் சட்டவிரோதத் தடுப்பிடங்களாகப் பயன்படுத்தப்பட்டமைக்கும், அவற்றை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்பு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன், காவல்துறையின் வழக்கமான பணிகளில் அவருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லாத நிலையில் அவர் தலையிட்டதாகவும் ஆணைக்குழு முடிவுகளை முன்வைத்தது.
மறுபுறம், ரணில் விக்கிரமசிங்க இந்த அறிக்கையின் கண்டறிதல்களை நிராகரித்துள்ளார். 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த அறிக்கை அரசியல் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும் அதன் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இங்கு முக்கியமானது அவர் குற்றவாளி என்று முன்கூட்டியே தீர்மானிப்பதோ, அவரது மறுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதோ அல்ல. மாறாக, ஆணைக்குழுவின் அறிக்கை, சாட்சியங்கள், கிடைக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் புதிய தடயங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சட்டத்தின் முன் உண்மையை நிரூபிப்பதே அவசியமாகும்.
மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டியது ஏன்?
++++++++++++++++
பல தசாப்தங்களாக வெளியிடப்படாமல் அல்லது கவனத்தில் கொள்ளப்படாமல் முடக்கப்பட்டிருந்த பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்தோடு, 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 5ஆம் திகதி வெளியான செய்தியின்படி, பட்டலந்த சித்திரவதைக் கூடத்துடன் தொடர்புபடுத்தப்படும் கொலைக் குற்றச்சாட்டுகள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள சாட்சியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது என்பதையும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனடிப்படையில், பட்டலந்தா விவகாரம் முடிவடைந்து விட்டது என்பதல்ல பொருள். மாறாக, குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சாட்சியங்களைச் சட்டரீதியாகச் சேகரித்து உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதாகும்.
இது நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு முக்கியமான ஒரு தருணமாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமல் வாழும் பெற்றோர்கள், திரும்பி வராத உறவினர்களுக்காகக் காத்திருக்கும் குடும்பங்கள், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாமல் தவிக்கும் மக்கள் ஆகியோரின் வேதனையை காலம் அழித்துவிட முடியாது.
புதிய விசாரணைகள் வெறுமனே அரசியல் அறிவிப்புகளாக முடிந்துவிடக் கூடாது. சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவணங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும். உயிருடன் இருக்கும் சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்புடன் வாக்கு மூலம் வழங்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சாட்சிகளின் வாக்கு மூலங்கள் ஒன்றோடொன்று ஒப்பிடப்பட வேண்டும்.
கிடைக்கக்கூடிய தடயவியல் மற்றும் பிற ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும். விசாரணைகளைப் பாதிக்கக்கூடிய அரசியல் அல்லது நிர்வாகத் தலையீடுகள் தடுக்கப்பட வேண்டும். சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை அச்சுறுத்துதல் அல்லது விசாரணைகளைத் தாமதப்படுத்துதல் போன்ற செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
குறிப்பாக, பட்டலந்த விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைவரும் தமது பதவி, அரசியல் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூற வேண்டும். அதேவேளை, ஆதாரங்கள் போதுமானவையாக இல்லாத இடங்களில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகச் சித்தரிக்கக் கூடாது.
"நீதி என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிப்பது மட்டுமல்ல; நிரபராதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதும், உண்மையான குற்றவாளிகள் தப்பிச் செல்லாதிருப்பதை உறுதிப்படுத்துவதுமாகும்".
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன் நிற்கும் வரலாற்றுப் பொறுப்பு என்ன.?
ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டத்தை வளைத்தல் ஆகியவற்றுக்கு எதிராகவும் செயற்படுவதாகவும் அவற்றை முழுமையாக ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு, பட்டலந்த விவகாரம் ஒரு முக்கியமான இலக்காகவும், சோதனையாகும் உள்ளது.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களை அரசியல் ரீதியாக விமர்சிப்பது மட்டும் போதாது. அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளைச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிப்பதற்கான நடைமுறைச் சூழலை உருவாக்குவதே உண்மையான மாற்றத்தின் அடையாளமாகும்.
35 வருடங்கள் கடந்தாவது அரசியல் அழுத்தங்களின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஆகையால்,
விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயற்படுவதையும், காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் தேவையான ஆதாரங்களைச் சேகரிப்பதையும், சாட்சிகள் பாதுகாக்கப்படுவதையும், வழக்குத் தொடர்வதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பட்டலந்த விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்படுவது, கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதோடு மட்டுப்படுவதில்லை. எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை மீற முடியாது என்ற நம்பிக்கையையும் அது உருவாக்கும்.
ஒரு நாட்டின் ஜனநாயக வலிமை தேர்தல்களில் மட்டும் அளவிடப்படுவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறார்களா என்பதில்தான் அது உண்மையாக வெளிப்படுகிறது.
அந்த வகையில், பட்டலந்த விவகாரம் ஒரு கட்சியின் வெற்றிக்காகவோ மற்றொரு கட்சியின் தோல்விக்காகவோ பயன்படுத்தப்பட வேண்டிய அரசியல் கருவியல்ல. அது மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியல் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுடன் தொடர்புடைய தேசியப் பிரச்சினையாகும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். சட்டவிரோதக் கைதுகள், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக மௌனமாகக் காத்திருக்கும் குடும்பங்களிடம் “இத்தனை காலம் கடந்து விட்டதே, இப்போது என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியினை அரசாங்கத்தினால் கேட்க முடியாது.
“உண்மையை வெளிக்கொண்டு வர நாம் இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்பதே அரசாங்கம் கேட்கும் கேள்வியாக இருக்க வேண்டும். காலம் கடந்து விட்டது என்பதற்காக நீதி வழங்குவதற்கான கடமை முடிவுக்கு வருவதில்லை.
பட்டலந்த விவகாரத்தில் புதிய விசாரணைகள் தொடங்கப்படுவது மட்டும் போதாது. அவை வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், முடிவுகளை எட்டும் வரை உறுதியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து மக்களுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசியல் வாக்குறுதிகளால் மீண்டும் ஏமாற்றப்படக் கூடாது.
பட்டலந்தவில் என்ன நடந்தது என்பதை வரலாற்றின் இருளில் புதைத்துவிடாமல், ஆதாரங்களின் வெளிச்சத்தில் உண்மையை நிலை நாட்டுவதே இலங்கை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியாகும். அந்த நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு, இனியும் அரசியல் வாக்குறுதிகள் அல்ல — நம்பகமான விசாரணைகளும், சட்டபூர்வமான முடிவுகளுமே தேவை என்பதை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலம் கடந்தாவது நிறைவேற்றும் என்ற நம்பிக்கை சர்வதேசத்திலும் அலசப்படும் விடயமாக மாறியுள்ளது.
அஹ்மட் இர்ஷாத்.
16-10-2026.
ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුව පටලන්ද දමා ඉතිහාසගත පරීක්ෂණයක්!
දේශපාලන සීමාවෙන් එහා ඇත්ත!
දශක ගණනාවක් නිහඩව සිටින වින්දිතයන්ගේ පවුල්වල සබඳතාවලට යුක්තිය ඉටු කිරීම දේශපාලන ජයග්රහණ ඉක්මවා ගිය මානුෂීය යුතුකමකි.
දේශපාලන බලයේ බලපෑම කුමක් වුවත් නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන බව නව නඩු විභාග තුළින් රටට ඔප්පු කිරීමේ ඓතිහාසික වගකීම වත්මන් ජාතික ජනබල ආණ්ඩුවට පැවරී ඇත.
"කාලය ගෙවී ගියත් යුක්තිය ඉටුවේවි" යන නොසැලෙන විශ්වාසය මේ රජය ලන්දේසි නඩුව හරහා තහවුරු කරයිද යන්න සමස්ත ශ්රී ලාංකිකයන්ගේ අපේක්ෂාවයි.
ශ්රී ලංකාවේ දේශපාලන ඉතිහාසයේ ඇතැම් සිදුවීම් කාලය ආවරණය නොකළ කැළැල් ලෙස පවතී. ඒ වෙනුවට ඒවා දිගටම හෙළිදරව් කළ යුතු සත්යයන් සහ යුක්තිය අපේක්ෂාවෙන් සිටින මිනිසුන්ගේ සුව නොකළ තුවාල ලෙස පවතී. ඉතිහාසයේ එවන් අඳුරු පිටුවක් වන්නේ බියගම - බත්තලන්ද වධ බන්ධන චෝදනාවයි.
1987-1990 කාලය තුළ මිනිසුන් දහස් ගණනක් ජීවත් වූ පාතලන්ත සාමකාමී නිවාස සංකීර්ණය තුළ මනුෂ්යත්වයට කෲරත්වයේ පැල්ලමක් ලෙස අඳුරු පරිච්ඡේදයක් ලියැවී ඇත. තාරුණ්යයේ හුස්ම පවා බියෙන් කැටි කළ පීතෘමූලික බලයේ කැත මුහුණුවර වද කඳවුරෙන් පිළිබිඹු විය.
රටම කැළඹූ ප්රචණ්ඩත්වය, නීතිවිරෝධී අත්අඩංගුවට ගැනීම්, අතුරුදහන් කිරීම් සහ මිනීමැරුම් චෝදනාවලට සම්බන්ධ බටලන්ද නඩුව අද ශ්රී ලංකාවේ දේශපාලන හා අධිකරණ විවාදයේ කේන්ද්රය වෙත නැවත පැමිණ තිබේ.
මේ කාරණයේ වැදගත්කම හිටපු ජනාධිපති රනිල් වික්රමසිංහගේ දේශපාලන සම්බන්ධතා විමර්ශනය කිරීමෙන් අවසන් වන්නේ නැත. බිගම් මැතිවරණ කොට්ඨාශයේ බල කේන්ද්රය වන ඔහු තම පාලනය යටතේ තිබූ වධක කඳවුරේ සිදු වූ සියලු සාහසික ක්රියා ගැන දැන සිටි බවද පැවසේ.
රනිල් වික්රමසිංහ මහතා බලයේ සෙවණේ සිටිමින් ආරක්ෂක අංශවලට රහසිගත මාර්ගෝපදේශකයකු ලෙස ක්රියා කළ බවට එල්ල වූ චෝදනාව විපතට පත් වූවන්ගේ පපුවේ සුව නොවූ කැළලක් ඇති කර තිබේ. එවකට ජනාධිපති රණසිංහ ප්රේමදාස මහතා ප්රමුඛ එක්සත් ජාතික පක්ෂ රජය දේශපාලන කැරැල්ල මර්දනය කිරීමේ මුවාවෙන් මානව හිමිකම් සම්පූර්ණයෙන්ම පාගා දැමුවේය.
එමෙන්ම ඉතිහාසයේ කළු පිටුවක් ලෙස සටහන් වූ බටලන්ද වද කඳවුරට සම්බන්ධ යැයි කියන හිටපු ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරී ඩග්ලස් පීරිස් සහ එවකට අමාත්ය රනිල් වික්රමසිංහගේ සිද්ධිය යළිත් වරක් රටේ හෘද සාක්ෂිය සසල කර තිබේ. ජනතා විමුක්ති පෙරමුණේ දේශපාලන කැරලි සමයේ නීති විරෝධී ඝාතන සහ වධහිංසා පැමිණවීම්වලට මුල පිරූ ඩග්ලස් පීරිස් 1994 පාලන වෙනසෙන් පසු රනිල් වික්රමසිංහගේ උපදෙස් මත ව්යාජ විදේශ ගමන් බලපත්ර මත රටින් පැන ගිය බව පැවසේ.
මිය ගිය බවට කටකතා පැතිර ගියද ඔහු මියගිය බව හඟවමින් ලංකාවේ සැඟවී ජීවත්වීම පිළිබඳ වාද විවාද කම්පන සහගතය. එබැවින් බලයේ පසුබිම සහිත මේ සාහසික අපරාධ පිටුපස ඇති සම්පූර්ණ තතු හෙළි කර ඩග්ලස් පීරිස් අත්අඩංගුවට ගෙන අධිකරණයට ඉදිරිපත් කිරීමෙන් වින්දිතයන්ගේ කඳුළුවලට සාධාරණය ඉටු කළ හැකි ද යන්න නීතියේ ආධිපත්යය බලාධිකාරය ඉක්මවා ක්රියා කරන අයුරු දකින වින්දිතයන්ගේ ප්රශ්නයයි.
එහෙම බැලුවම වින්දිතයන්ට ඇත්තටම සාධාරණයක් ඉටු වුණාද? රාජ්ය බලය අවභාවිත කරනවාද? චෝදනාවලට වගකිවයුත්තන් අධිකරණයට ඉදිරිපත් කළාද? මේ කාරණයේ මූලික ප්රශ්න මේවාය.
1987 සිට 1990 දක්වා කාලය ශ්රී ලංකාවේ නූතන දේශපාලන ඉතිහාසයේ වඩාත්ම ප්රචණ්ඩකාරී හා බියකරු කාල පරිච්ඡේදයකි. ජනතා විමුක්ති පෙරමුණ (ජවිපෙ) නායකත්වය දුන් දේශපාලන කැරැල්ල මැඩපැවැත්වීම සඳහා රාජ්ය ආරක්ෂක අංශ විසින් දේශපාලන පළිගැනීම්, නීතිවිරෝධී අත්අඩංගුවට ගැනීම් සහ අතුරුදන් කිරීම් පිළිබඳ චෝදනා යුගය ලේ තැවරුණු ඉතිහාසයක් බවට පත් කර ඇත.
එම අවකාශයන් භාවිතා කළේ කෙසේද? ඔවුන් පාලනය කළේ කාගේද? එහි රඳවා සිටියේ කවුද? එම ක්රියාමාර්ගවලට අණ දුන්නේ කවුද? මේ සියල්ල විමර්ශනය කළ යුතු ප්රශ්න ය. පටලන්ද යනු ගොඩනැඟිල්ලක නමක් පමණක් නොවේ. රාජ්ය බලයේ සීමාවන් මානව හිමිකම් සහ නීතියේ ආධිපත්යය පිළිබඳ ශ්රී ලංකාවේ ඓතිහාසික විවාදයේ ප්රමුඛ වූ කාරණයකි.
1994 දී චන්ද්රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මහත්මිය ජනාධිපතිනිය ලෙස තේරී පත් වූ විට පසුගිය කාලයේ සිදුවූ ඝාතන සහ අතුරුදන් කිරීම් සම්බන්ධයෙන් සාධාරණයක් ඉටුවනු ඇතැයි ජනතාව තුළ අපේක්ෂාවක් තිබුණා. ඉන් අනතුරුව, බංග්ලාදේශ නිවාස ව්යාපෘතියේ 1988-1990 කාලය තුළ නීතිවිරෝධී රැඳවුම් මධ්යස්ථාන සහ වධක කඳවුරු පිහිටුවා පවත්වාගෙන ගිය බවට එල්ල වූ චෝදනා විමර්ශනය කිරීම සඳහා ජනාධිපති විමර්ශන කොමිසමක් පත් කරන ලදී.
කොමිසමේ විමර්ශන 1996 දී ආරම්භ වූ අතර, සාක්ෂි සහ ලේඛන පරීක්ෂා කිරීමෙන් අනතුරුව එහි වාර්තාව 1998 මාර්තු මාසයේදී ජනාධිපති චන්ද්රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මහත්මිය වෙත ඉදිරිපත් කරන ලදී.
විශේෂයෙන්ම එවකට අමාත්ය රනිල් වික්රමසිංහ මහතාගේ බලය පාවිච්චි කිරීම සහ ඇතැම් නිවාස වෙන් කළ ආකාරය පිළිබඳව කොමිසම බරපතළ ප්රශ්න මතු කළේය. වාර්තාවේ සොයාගැනීම්වලට අනුව ඇතැම් නීතිවිරෝධී මුරපොලවල් නඩත්තු කිරීම සම්බන්ධයෙන් ඔහු වක්රව වගකිව යුතු බව කොමිසම සඳහන් කර තිබුණි. එසේම එහි සොයාගැනීම්වලින් පෙනී ගියේ නීත්යානුකූල බලයකින් තොරව පොලිසියේ වැඩකටයුතුවලට බාධා කර ඇති බවයි.
මෙම සොයාගැනීම් විශාල දේශපාලන හා නීතිමය වැදගත්කමක් දරයි. කෙසේ වෙතත්, විමර්ශන කොමිෂන් සභා වාර්තාව අපරාධ අධිකරණයේ තීන්දුවට සමාන නොවේ. වාර්තාවේ ඇති චෝදනා සහ සොයාගැනීම් නිසි විමර්ශනයක්, පිළිගත හැකි සාක්ෂි, නීතිමය ක්රියාපටිපාටි සහ අධිකරණ තීන්දු හරහා නිසි සැලකිල්ලක් දැක්විය යුතුය. එබැවින් එහි දක්වා ඇති කරුණු නීතියට අනුව ඔප්පු කිරීම වැදගත් වේ.
එම කොමිෂන් සභා වාර්තාවට අනුව ඇතැම් නිවාස නීති විරෝධී මුරපොලවල් ලෙස භාවිත කිරීම සහ ඒවා වෙන් කිරීමට කටයුතු කිරීම සම්බන්ධයෙන් රනිල් වික්රමසිංහ මහතා සම්බන්ධ වී ඇත. ඔහු නීත්යානුකූල බලයකින් තොරව පොලිසියේ සාමාන්ය වැඩකටයුතුවලට මැදිහත් වී ඇති බවද කොමිසම අනාවරණය කළේය.
අනෙක් අතට රනිල් වික්රමසිංහ වාර්තාවේ සොයාගැනීම් ප්රතික්ෂේප කළේය. 2025 මාර්තු මාසයේදී ඔහු පවසා ඇත්තේ වාර්තාව දේශපාලන අරමුණු සහිතව සකස් කර ඇති බවත් එහි නිගමන පිළිගත නොහැකි බවත්ය.
මෙහිදී වැදගත් වන්නේ ඔහු වැරදිකරුවෙක් ලෙස පූර්ව නිගමනය කිරීම හෝ ඔහුගේ ප්රතික්ෂේප කිරීම මත පමණක් ප්රශ්නය අවසන් කිරීම නොවේ. ඒ වෙනුවට, කොමිෂන් සභා වාර්තාව, සාක්ෂි, පවතින ලේඛන සහ නැවුම් සාක්ෂි මත පදනම්ව නීතිය ඉදිරියේ සත්යය ඔප්පු කිරීම අවශ්ය වේ.
පරීක්ෂණය නැවත පැවැත්විය යුත්තේ ඇයි?
*******************
දශක ගනනාවක් ප්රකාශනයකින් හෝ අවධානයකින් තොරව පල්වෙමින් තිබූ බ්රිතාන්ය විමර්ශන කොමිසමේ වාර්තාව ජාතික ජනබල රජය හරහා නිල වශයෙන් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කරන ලදී.
මීට අමතරව, 2026 ඔක්තෝම්බර් 05 දිනැති ප්රවෘත්ති නිවේදනයට අනුව, නීතිපති දෙපාර්තමේන්තුව විසින් පතලන්ද වධකාගාරයට අදාළ ඝාතන චෝදනා සම්බන්ධයෙන් නව පරීක්ෂණ පවත්වන ලෙස නිර්දේශ කර ඇත. කොමිෂන් සභා වාර්තාවේ ඇති සාක්ෂි මත පමණක් සැකකරුවන්ට එරෙහිව චෝදනා පත්ර ගොනු කළ නොහැකි බවද නීතිපතිවරයා පෙන්වා දුන්නේය.
ඒ අනුව බටලන්ට ප්රශ්නය ඉවරයි කියන එක නෙවෙයි. ඒ වෙනුවට, එයින් අදහස් කරන්නේ අපරාධ නඩු කටයුතු කරගෙන යාමට අවශ්ය සාක්ෂි නීත්යානුකූලව එකතු කර තහවුරු කිරීමේ අවශ්යතාවයක් පවතින බවයි.
යුක්තිය අපේක්ෂාවෙන් සිටින ජනතාවට මෙය වැදගත් මොහොතකි. වසර ගණනාවකට පෙර අතුරුදහන් වූ තම දරුවන්ගේ ඉරණම නොදැන ජීවත් වන දෙමාපියන්, නැවත නොඑන ඥාතීන් එනතුරු බලා සිටින පවුල්, තම ආදරණීයයන්ට සිදුවූයේ කුමක්දැයි සොයා බැලීමට වෙහෙසෙන මිනිසුන්ගේ වේදනාව කාලයට මකා දැමිය නොහැක.
නව විමර්ශන හුදු දේශපාලන ප්රකාශයන් ලෙස අවසන් නොවිය යුතුය. සිදුවීම් සම්බන්ධ සියලුම ලියකියවිලි සංරක්ෂණය කළ යුතුය. ජීවමාන සාක්ෂිකරුවන් හඳුනාගෙන ආරක්ෂිතව ඡන්දය ප්රකාශ කළ හැකි පරිසරයක් නිර්මාණය කළ යුතුයි. සාක්ෂිකරුවන්ගේ සාක්ෂි මූලාශ්ර එකිනෙකා සමඟ සැසඳිය යුතුය.
පවතින අධිකරණ වෛද්ය සහ අනෙකුත් සාක්ෂි පරීක්ෂා කළ යුතුය. විමර්ශනවලට බලපෑම් කළ හැකි දේශපාලන හෝ පරිපාලන මැදිහත්වීමක් වැළැක්විය යුතුය. එමෙන්ම සාක්ෂි විනාශ කිරීම, සාක්ෂිකරුවන් බිය ගැන්වීම හෝ පරීක්ෂණ ප්රමාද කිරීම වැනි ක්රියා සිදු නොවීමට වග බලා ගැනීම රජයේ වගකීමකි.
විශේෂයෙන්ම පාටලන්ද සම්බන්ධය සම්බන්ධයෙන් එල්ල වී ඇති මිනීමැරුම් චෝදනා නීත්යානුකූලව ඔප්පු වුවහොත් තරාතිරම, දේශපාලන පසුබිම හෝ සමාජ තරාතිරම නොබලා ඊට සම්බන්ධ සියලු දෙනාම නීතිය ඉදිරියේ වගකිව යුතුය. කෙසේ වෙතත්, සාක්ෂි ප්රමාණවත් නොවන තැන චෝදනා ඔප්පු කළ යුතු කරුණු ලෙස නිරූපණය නොකළ යුතුය.
"යුක්තිය යනු විත්තිකරුවන්ට දඬුවම් කිරීම පමණක් නොව, අහිංසකයන්ගේ අයිතිවාසිකම් ආරක්ෂා කිරීම සහ සැබෑ අපරාධකරුවන් ගැලවී නොයෑම සහතික කිරීම".
ජාතික ජන බලය ආණ්ඩුවේ ඓතිහාසික වගකීම කුමක්ද?
********************
දූෂණයට, බලය අවභාවිතයට සහ දේශපාලන බලපෑම් මත නීතිය නැමීමට එරෙහිව සටන් කරන බවට පොරොන්දු වී බලයට පැමිණි ජනාධිපති අනුර කුමාර දිසානායකගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගයේ (NPP) ආණ්ඩුවට පැටලන්ද සිද්ධිය වැදගත් ඉලක්කයක් හා පරීක්ෂණයක් වී තිබේ.
පසුගිය කාලයේ බලයේ සිටි අය දේශපාලන වශයෙන් විවේචනය කළාට මදි. තමන්ට එල්ල වන බරපතළ චෝදනා නීතියට අනුව විමර්ශනය කිරීමට ප්රායෝගික පරිසරයක් නිර්මාණය වීම සැබෑ වෙනසක ලකුණකි.
වසර 35කට පසු දේශපාලන බලපෑම්වලින් තොරව පරීක්ෂණ සිදුවේවි යැයි ජනතාව තුළ බලාපොරොත්තුවක් තිබෙනවා. එබැවින්,
විමර්ශන ආයතන ස්වාධීනව ක්රියාකරයි, පොලිසිය සහ නීතිපති දෙපාර්තමේන්තුව අවශ්ය සාක්ෂි එකතු කරයි, සාක්ෂිකරුවන් ආරක්ෂා කරයි, නඩු පැවරීමට ප්රමාණවත් සාක්ෂි හමු වුවහොත් නීතිමය ක්රියාමාර්ග ගනු ඇතැයි බලාපොරොත්තුවක් සහ අපේක්ෂාවක් ඇත.
පැට්ලන්ද නඩුවේ යුක්තිය අතීතයේ වින්දිතයින්ට යුක්තිය ඉටු කිරීමට පමණක් සීමා නොවේ. ඒ වගේම අනාගතයේ කිසිම රජයකට රාජ්ය බලය පාවිච්චි කරලා ජනතා අයිතීන් කඩ කරන්න බෑ කියන විශ්වාසයත් ඇති වෙනවා.
රටක ප්රජාතන්ත්රවාදී ශක්තිය මැතිවරණවලින් පමණක් මනින්නේ නැත. බලයේ සිටින අය පවා නීතියට කීකරු වන්නේද යන්නෙන් එය සැබවින්ම ප්රකාශ වේ.
ඒ අනුව බලන විට පතලන්ද ප්රශ්නය එක් පක්ෂයක ජයග්රහණයට හෝ තවත් පක්ෂයක පරාජයට යොදා ගත හැකි දේශපාලන මෙවලමක් නොවේ. එය මානව හිමිකම්, නීතියේ ආධිපත්යය සහ දේශපාලන වගවීම සම්බන්ධ ජාතික ගැටලුවකි. වින්දිතයන්ගේ පවුල්වල ඇත්ත දැනගත යුතුයි. නීතිවිරෝධී අත්අඩංගුවට ගැනීම්, වධහිංසා පැමිණවීම් සහ ඝාතන චෝදනා සාධාරණ ලෙස විභාග කළ යුතුය. අපරාධ ඔප්පු වුණොත් වැරදිකරුවන්ට නීතියෙන් දඬුවම් දිය යුතුයි.
"මෙච්චර වෙලා, දැන් මොකද කරන්න පුළුවන්?" වසර ගණනාවක් නිහඬව බලා සිටි පවුල්වලට. ආණ්ඩුවට ප්රශ්නය අහන්න බැහැ.
"සත්යය හෙළි කිරීමට අප තව කුමක් කළ යුතුද?" ආණ්ඩුව අසන ප්රශ්නය එය විය යුතුය. යුක්තිය ඉටු කිරීමේ යුතුකම කාලය ගෙවී ගිය පමණින් නතර නොවේ.
පාටලන්ද ප්රශ්නය ගැන අලුතින් පරීක්ෂණ පටන් ගත්තට මදි. ප්රතිඵල ලැබෙන තුරු ඒවා විනිවිදභාවයෙන්, ස්වාධීනව සහ තීරණාත්මකව සිදු කළ යුතුය. විමර්ශනවල ප්රගතිය පිළිබඳව ජනතාවට අවශ්ය තොරතුරු ලබාදිය යුතුයි. විපතට පත් පවුල් යළි දේශපාලන පොරොන්දුවලට නොරැවටිය යුතුයි.
ශ්රී ලංකාවාසී ජනතාවට ඉටුවිය යුතු යුක්තිය වන්නේ ඉතිහාසය අඳුරේ වළලනු නොව සාක්ෂි ආලෝකයෙන් සත්යය තහවුරු කිරීමය. ඒ යුක්තිය, තවදුරටත් දේශපාලන පොරොන්දු - විශ්වාසනීය විමර්ශන සහ නීතිමය තීන්දු - බලා පොරොන්දම් බලා සිටින පවුල්වල සත්යතාව අවසානයේ අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය ඉටු කරනු ඇතැයි යන බලාපොරොත්තුව ජාත්යන්තර විග්රහයකට ලක්ව තිබේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
16-102026.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன் பட்டலந்த வைக்கும் வரலாற்றுச் சோதனை! அரசியல் எல்லைகளைத் தாண்டிய உண்மை!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 16, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 16, 2026
Rating:



கருத்துகள் இல்லை: