සිංහල පරිවර්තනය සමග)நீதித்துறையிலும் உயர்வாக நாட்டில் எதுவுமே இல்லை. ஞானசார தேரர் மீதான தீர்ப்பு நிரூபிக்கும் உண்மைகள்.
அதிகார துஷ்பிரயோகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் சமமான நீதியை நிலைநாட்டுவதே நாட்டின் உண்மையான ஜனநாயக வளர்ச்சிக்கு அடிப்படையாகும். மதம், பதவி அல்லது அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும், சட்டத்திற்கு மேலாக எவரும் இருக்க முடியாது என்ற உண்மையை ஞானசார தேரரின் நீதிமன்ற விவகாரம் நிரூபித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரசியல் தலையீடுகளற்ற சுயாதீனமான நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சி வலுப்பெற்று வருவது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.
ஞானசார தேரரைப் பார்த்து மக்கள் பரபரப்டன் நோக்கிய ஒருகாலம் முன்னர் இருந்தது. இன்று நிலைமை மாறியுள்ளது—சட்டத்தையும் நீதித்துறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை அவருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல் அதிகாரத்தின் ஆதரவு, பாதுகாப்பு, சொகுசு வசதிகள் என செல்வாக்குடன் இயங்கியவர்களாக இருந்தாலும், இன்று அந்தக் கவசங்கள் இல்லாமல் சட்டத்தின் முன் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இது ஒருவருக்கு எதிரான பழிவாங்கல் அல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால நீதிக்கான நம்பிக்கையின் வெளிப்பாடு. அதிகாரம், பதவி, மத ஆடை அல்லது அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே உண்மையான நீதியின் அடையாளமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நீதித்துறையும் சட்ட அமுலாக்கமும் அரசியல் தலையீடின்றி செயற்பட வேண்டும் என்ற புதிய அரசியல் கலாச்சாரம் வலுப்பெற்று வருகின்ற நிலையில், அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “நமக்கும் நீதி கிடைக்கும்” என்ற நம்பிக்கை உருவாக தொடங்கியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 வருட சிறைத்தண்டனையை 2026 ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் மீண்டும் அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டவிரோதமானது என கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனையை உடனடியாக அமுல்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், சட்டத்தின் முன் எவரும் சிறப்புச் சலுகைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையும், நீதிமன்றத் தீர்ப்புகள் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கின்றது.
மேலும், கடந்த காலங்களில் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம் பெற்ற இனவாத வன்முறைகளும், பொதுபல சேனா போன்ற அமைப்புகளின் சர்ச்சைக்குரிய செயற்பாடுகளும், ஞானசார தேரரின் கடுமையான கருத்துகளும் நாட்டில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. குறிப்பாக, இத்தகைய செயற்பாடுகளைத் தடுக்க அன்றைய அரசாங்கங்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அரசியல் ஆதரவு அல்லது அனுசரணை இருந்திருக்கலாம் என்றும் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் ஒரு நாட்டின் உண்மையான ஜனநாயக வலிமை, பெரும்பான்மையினருக்கு மட்டுமல்ல; சிறுபான்மை மக்களும் அச்சமின்றி வாழ முடிகின்றதா என்பதில்தான் அளவிடப்படுகிறது. மதம், இனம், அரசியல் செல்வாக்கு எதுவாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலத்தின் காயங்கள் மீண்டும் திறக்கப்படாமல், எந்த சமூகமும் அநீதிக்கு உள்ளாகாத இலங்கையை உருவாக்குவதே மக்களின் நம்பிக்கைக்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் அடித்தளமாக அமையும்.
அதிகாரம் யாருடைய கைகளில் இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் ஒரே அளவுகோலில் நடைமுறைப்படுத்தப்படும் போதுதான் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை உண்மையாக வலுப் பெறும்.
பதவி, அரசியல் செல்வாக்கு, சமூக அந்தஸ்து, பொருளாதார பலம் அல்லது மத அடையாளம் எதுவாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாகும்.
பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் அதிகாரம் கொண்டவர்களுக்கு ஒரு விதமான அணுகுமுறையும், சாதாரண மக்களுக்கு வேறொரு விதமான அணுகுமுறையும் இருந்து வந்துள்ளைமை ஜனநாயகம் என்ற பெயரில் மக்களை அடிமைச் சங்கிலியில் வைத்திருந்தமைக்கு சமனான ஒன்றாகவே இருந்தது.
அரசியல் தொடர்புகள் இருந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமும், செல்வாக்கு இருந்தால் வழக்குகளை தாமதிக்கலாம் என்ற நம்பிக்கையும் நிலவின. ஆனால், ஒரு நாட்டில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், முதலில் மாற வேண்டியது இப்படியான அரசியல் கலாச்சாரமாகும்
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் செயல்பட முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவர் மதத் தலைவராக இருந்தாலும், அரசியல் செல்வாக்கு கொண்டவராக இருந்தாலும், சமூகத்தில் பிரபலமானவராக இருந்தாலும், சட்டத்திற்கு மேலாக எவரும் இருக்க முடியாது என்பதே இதன் அடிப்படைச் செய்தியாகும்.
இங்கு முக்கியமானது தனிநபர் அல்ல; சட்டத்தின் கொள்கைதான். சட்டம் ஒருவரை அவரது அதிகாரத்தால் அளவிடுவதில்லை. அவர் செய்த செயல்கள், சட்டத்தின் விதிகள் மற்றும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் உண்மைகளின் அடிப்படையிலேயே பொறுப்பு தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதுவே, நீதித்துறையானது சுயாதீனத்தின் அர்த்தமாக இருக்கின்றது. இதனால்தான் நீதித்துறை அரசியலிலிருந்து சுயாதீனமாக இருப்பதற்கான அவசியம் பற்றி பேசப்படுகின்றது. நீதிபதிகள் அரசியல் அழுத்தத்திற்கு உட்படாமல் தீர்ப்பளிக்க வேண்டும். பொலிசார் அரசியல் உத்தரவுகளுக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.
விசாரணைகள் தனி நபரின் அரசியல் தொடர்புகளைப் பார்த்து தொடங்கவோ, நிறுத்தவோ கூடாது.
விசாரணைகள் தனிநபரின் அரசியல் தொடர்புகளைப் பார்த்து தொடங்கவோ நிறுத்தவோ கூடாது. குற்றச்சாட்டு இருந்தால் விசாரணை நடைபெற வேண்டும்; ஆதாரம் இருந்தால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்; இறுதித் தீர்ப்பை வழங்குவது நீதிமன்றத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். இதுவே புதிய அரசியல் கலாச்சாரத்தின் முக்கியமான அடையாளமாகும்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை ஆதரிப்பவராக இருந்தாலும், எதிர்ப்பவராக இருந்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், மதத் தலைவராக இருந்தாலும், சாதாரண குடிமகனாக இருந்தாலும் — சட்டத்தின் முன் அனைவருக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும் என்பதே புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் இலக்காக உள்ளது.
ஆட்சியாளர்களுக்கும் அதே சட்டம்; எதிர்க்கட்சிக்கும் அதே சட்டம்; அதிகாரம் உள்ளவர்களுக்கும் அதே சட்டம்; அதிகாரமற்றவர்களுக்கும் அதே சட்டமேயாகும். அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தை வளைப்பது ஜனநாயகம் அல்ல. சட்டத்தை மதித்து அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடத்தில்தான் ஜனநாயகம் உதயமாகின்றது.
அதேபோல், நீதிமன்றத் தீர்ப்புகளை அரசியல் வசதிக்கேற்ப ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் ஜனநாயகப் பண்பாக மாறிவிடப் போவதில்லை. தீர்ப்பு தமக்கு சாதகமாக இருந்தால் நீதித்துறையைப் புகழ்வதும், பாதகமாக இருந்தால் நீதித்துறையின் மீது சந்தேகம் எழுப்புவதும் மக்களின் நம்பிக்கையை மேலும் பாதிக்கும்.
நீதித்துறை மீது உள்ள நம்பிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தின் மீது உள்ள நம்பிக்கை அல்ல. அது நாட்டின் அரசியலமைப்பு, சட்ட நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் மீது உள்ள நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை வலுப்பெற வேண்டுமெனில், பழைய அரசியல் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம், திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து அரசியல் நிறம் பார்க்காமல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, குற்றமற்றவர்கள் பாதுகாக்கப்படுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
இதுதான் நீதியின் உண்மையான அர்த்தம்.
இது யாரையும் பழிவாங்குவதற்கான அரசியல் அல்ல. மாறாக, யாரையும் சட்டத்திற்கு மேலாக நிறுத்தாத அரசியல் கலாச்சாரத்தை உருவாக்வதற்கான உயரிய முயற்சியாகும்.
அழகிய எமது இலங்கை நாடு எதிர்பார்க்கும் மாற்றம் வெறுமனே ஆட்சி மாறுவதல்ல. அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம் மாற வேண்டும். சட்டத்தை அணுகும் விதம் மாற வேண்டும். நீதித்துறையை மதிக்கும் அரசியல் பண்பாடு உருவாக வேண்டும். மக்கள் தங்கள் உரிமைக்காக அரசியல் செல்வாக்கைத் தேட வேண்டிய அவசியமில்லாத நிலை உருவாக வேண்டும்.
இதற்காகத்தான் எண்ணிலடங்காத தியாகங்களுக்கு மத்தியில் பயணித்து வந்த மக்கள் விடுதலை முன்னணியானது இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் அரசாங்கத்தினால் நாட்டில் குறித்த மாற்றத்தினை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
ஒரு சாதாரண குடிமகன் நீதிமன்றத்தின் கதவைத் தட்டும்போது கிடைக்கும் நீதி, அதிகாரம் கொண்ட ஒருவருக்கு கிடைக்கும் நீதியுடன் ஒரே தரத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் “இந்த நாட்டில் சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.” என மக்கள் உண்மையை பகிரங்கமாக கூறுவதற்கு முன்வருவார்கள்.
இதுவே தேசிய மக்கள் சக்தியானது இலங்கையில் நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் புதிய அரசியல் கலாச்சாரதிற்கான அடித்தளமாக இருக்கின்றது. சட்டத்தின் ஆட்சி வலுப்பெறும்போது நீதித்துறை மீதான நம்பிக்கை வலுப் பெறும், நீதித்துறை மீதான நம்பிக்கை வலுப் பெறும் போது ஜனநாயகம் வலுப்படும், ஜனநாயகம் வலுப் பெறும் போது மக்களின் இறையாண்மை உண்மையான அர்த்தத்தைப் பெறும்.
அதிகாரம் யாருடைய கைகளில் இருந்தாலும் பரவாயில்லை.
சட்டம் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
நீதி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். அதுவே புதிய அரசியல் கலாச்சாரத்தின் வெற்றியாக அமையும். இதுவே ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள்சக்தி அரசாங்கமானது இந்த நாட்டில் நிலைநாட்ட முன்னெடுத்து வரும் இலக்காகவும் உள்ளது.
அதனடிப்படையில், சர்வதேச அளவில் ஒரு நாட்டின் ஜனநாயக நம்பகத்தன்மை என்பது அதன் சட்டங்களால் அளவிடப்படுவதில்லை; அந்தச் சட்டம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதாலேயே அளவிடப்படுகிறது. ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை, அதிகாரம் சட்டத்திற்கு மேலானதல்ல என்பதையும், அரசியலமைப்பின் வரம்புக்குள் ஜனாதிபதி அதிகாரமும் உட்பட்டதே என்பதையும் மீண்டும் முன்னிறுத்தி உள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.
இலங்கை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அரசியல் அல்லது மதச் செல்வாக்குகளை கடந்து சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுவது, நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்த சர்வதேச நம்பிக்கைக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், முக்கியமான சர்வதேச செய்தியாகவும் மாறியுள்ளது.
இந்தப் பின்னணியில், தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் “புதிய அரசியல் கலாச்சாரம்” என்பது அதிகாரத்தைப் பாதுகாப்பதல்ல; சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே அதன் மையக் கருத்தாக இருக்கின்றது. பதவி, அரசியல் செல்வாக்கு, மத அடையாளம் என எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நடைமுறை உருவாகும் போதுதான் மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை கொள்வார்கள்.
அப்பொழுதுதான் சர்வதேச சமூகமும் இலங்கையை பொறுப்புள்ள ஜனநாயக நாடாக மதிப்பிடும் அதே இடத்தில், சகல துறைகளுக்குமான இலங்கை குடிமகனுக்குறிய அங்கீகாரமானது சர்வதேச நாடுகளில் அதிகரிக்கும் . இந்த மாற்றத்தின் உண்மையான அர்த்தம், “அரசியலை விட அரசியலமைப்பு உயர்ந்தது; அதிகாரத்தை விட சட்டம் உயர்ந்தது; அனைவருக்கும் நீதி ஒன்றே” என்பதைக் தேசிய மக்கள் சக்தி கண்முன்னே நிரூபித்துகாட்ட தொடங்கியிருக்கின்றது என்பது வெளிப்படையான விடயமாகியுள்ளது. .
எதுவாக இருந்தாலும், நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆறு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த மன்னிப்பு சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியாகாதது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அவரது ஆறு வருட சிறைத்தண்டனையில் எஞ்சிய பகுதியை மீண்டும் அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரமும், அரசியலமைப்பும் சட்டமும் வரையறுத்துள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே செயற்பட முடியும் என்ற முக்கியமான சட்டக் கோட்பாட்டை மீண்டும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அஹமட் இர்ஷாட்.
11-10-2026
තරම් උසස් දෙයක් රටේ නැත.
ඥානසාර හිමි පිළිබඳ තීන්දුවෙන් ජනතාවට ඇත්ත කියනවා.
බලය අයුතු ලෙස භාවිත කිරීම නතර කර සැමට සමාන යුක්තිය තහවුරු කිරීම රටේ සැබෑ ප්රජාතන්ත්රවාදී සංවර්ධනයේ පදනමයි. ආගම, තරාතිරම, දේශපාලන බලපෑම් නොසලකා කිසිවකුට නීතියට ඉහළින් සිටිය නොහැකි බව ඥානසාර හිමියන්ගේ නඩු විභාගයෙන් ඔප්පු වේ.
ජාතික ජනබල රජය යටතේ දේශපාලන මැදිහත්වීම්වලින් තොර ස්වාධීන අධිකරණයක් සහ නීතියේ ආධිපත්යය ශක්තිමත් කිරීම තුළින් ජනතා විශ්වාසය යළිත් තහවුරු වී තිබේ.
++++++++++++++++
ඥානසාර හාමුදුරුවෝ බලන්න මිනිස්සු රොක් වෙන කාලයක් තිබුණා. අද තත්ත්වය වෙනස් වී ඇත - ඔහුට දැන් නීතියට හා අධිකරණයට මුහුණ දීමට සිදු වී ඇත. එදා ඔවුන්ට දේශපාලන බලය, රැකවරණය, සුඛෝපභෝගී පහසුකම් තිබුණත් අද ඒ පලිහවල් නැතිව නීතිය ඉදිරියේ පෙනී සිටීමට සිදුව තිබෙනවා.
එය යමෙකුගෙන් පළිගැනීමක් නොවේ; පීඩාවට පත් ජනතාවගේ දිගුකාලීන යුක්තිය පිළිබඳ බලාපොරොත්තුවේ ප්රකාශනයකි. සැබෑ යුක්තියේ ලක්ෂණය වන්නේ බලය, තරාතිරම, ආගමික ඇඳුම හෝ දේශපාලන බලපෑම් නොසලකා නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන වීමයි.
ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ අධිකරණය සහ නීතිය ක්රියාත්මක කිරීම දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොරව ක්රියාත්මක විය යුතුය යන නව දේශපාලන සංස්කෘතිය ශක්තිමත් වෙමින් පවතින අතර අසාධාරණයට ලක්වන ජනතාව "අපටත් සාධාරණය ඉටුවේවි" යැයි විශ්වාස කරන්නට පටන් ගෙන තිබේ.
අධිකරණයට අපහාස කිරීමේ නඩුවකට අදාළව බුදුබල සේනා සංවිධානයේ මහලේකම් කලගොඩඅත්තේ ඥානසාර හිමියන්ට පනවා තිබූ වසර 6 ක සිරදඬුවම 2026 ඔක්තෝම්බර් මස 05 වැනිදා සිට යළි ක්රියාත්මක කිරීමට අභියාචනාධිකරණය නියෝග කර ඇත. හිටපු ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා ලබාදුන් ජනාධිපති සමාව නීති විරෝධී බවට මහාධිකරණය පසුගිය සැප්තැම්බර් 10 වැනිදා තීන්දු කිරීමෙන් අනතුරුව මෙම නියෝගය නිකුත් කර ඇත.
මහාධිකරණ තීන්දුව පදනම් කරගනිමින් ඥානසාර හිමියන්ගේ ඉතිරි සිර දඬුවම වහාම ක්රියාත්මක කරන ලෙස අභියාචනාධිකරණය බන්ධනාගාර කොමසාරිස් ජනරාල්වරයාට නියෝග කළේය. ඉන් අනතුරුව බන්ධනාගාර නිලධාරීන් විසින් ඔහුව වැලිකඩ බන්ධනාගාරයට රැගෙන යනු ලැබුවා. කිසිවකු නීතියට ඉහළින් නොසිටින බවත් අධිකරණ තීන්දු සැමට එකසේ ක්රියාත්මක විය යුතු බවත් මෙම සිදුවීම යළිත් අවධාරණය කරයි.
එපමණක් නොව ශ්රී ලංකාවේ සුළු ජාතික ප්රජාවන්ට එරෙහි පසුගිය වාර්ගික ප්රචණ්ඩත්වය, පොදුපල සේනා වැනි සංවිධානවල ආන්දෝලනාත්මක ක්රියාකාරකම් සහ ඥානසාර හිමියන්ගේ කර්කශ අදහස් රට තුළ විශාල සංවාදයක් හා භීතියක් ඇති කළේය. විශේෂයෙන්ම මෙවැනි ක්රියා වැළැක්වීමට එවකට පැවති රජයන් ප්රමාණවත් පියවර නොගත් බවටත් දේශපාලන අනුග්රහය හෝ අනුග්රහයද තිබෙන්නට ඇති බවට විවිධ පාර්ශ්වවලින් චෝදනා එල්ල විය.
එහෙත් රටක සැබෑ ප්රජාතන්ත්රවාදී ශක්තිය පවතින්නේ බහුතරය තුළ පමණක් නොවේ; ඒක මනින්නේ සුළු ජාතික ජනතාවට බය නැතිව ජීවත් වෙන්න පුළුවන්ද කියලා. ආගම, කුලය, දේශපාලන බලපෑම් නොසලකා නීතිය සැමට එක හා සමානව ක්රියාත්මක විය යුතුයි. රටේ ජනතාවගේත් අනාගතයේත් බලාපොරොත්තුව අතීතයේ තුවාල යළි විවර නොවන, කිසිදු ජන කොටසකට අසාධාරණයක් නොවන ශ්රී ලංකාවක් ගොඩනැගීමයි.
බලය කාගේ අතේ තිබුණත් නීතිය සැමට එකසේ ක්රියාත්මක වූ විට පමණක් අධිකරණය කෙරෙහි ජනතා විශ්වාසය සැබෑ ලෙසම ශක්තිමත් වන්නේය. තරාතිරම, දේශපාලන බලපෑම්, සමාජ තරාතිරම, ආර්ථික ශක්තිය, ආගමික අනන්යතාව කුමක් වුවත් නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමාන බව සැබෑ ප්රජාතන්ත්රවාදයේ පදනමයි.
දශක ගණනාවක් තිස්සේ ශ්රී ලංකාවේ දේශපාලන සංස්කෘතිය බලවතුන්ට එක් ආකාරයක් වන අතර සාමාන්ය ජනතාවට තවත් ආකාරයක් වී ඇති අතර එය ප්රජාතන්ත්රවාදයේ නාමයෙන් ජනතාව වහල්භාවයට පත් කිරීමට සමාන ය.
දේශපාලන සබඳතා පැවැත්වීම නීතියේ ග්රහණයෙන් ගැලවීමට සහ නඩු පැවරීම ප්රමාද කිරීමට බලපෑම් කිරීමට ඉඩ සැලසේ යැයි විශ්වාසයක් තිබුණි. නමුත් රටක සැබෑ වෙනසක් වීමට නම් මුලින්ම වෙනස් විය යුත්තේ දේශපාලන සංස්කෘතියයි
නීතියේ ආධිපත්යය ප්රායෝගිකව ක්රියාත්මක විය හැකි බව යළිත් අවධාරණය කරන වැදගත් සිදුවීමක් ලෙස කලකොඩඅතේ ඥානසාර හිමියන්ට ලබාදුන් අධිකරණ තීන්දුව සැලකේ. එහි මූලික පණිවිඩය වන්නේ ආගමික නායකයෙකු වේවා, දේශපාලනික වශයෙන් බලගතු වේවා, සමාජයේ ජනප්රිය වේවා කිසිවකුට නීතියට ඉහළින් සිටිය නොහැකි බවයි.
නීතියේ ආධිපත්යය ප්රායෝගිකව ක්රියාත්මක විය හැකි බව යළිත් අවධාරණය කරන වැදගත් සිදුවීමක් ලෙස කලකොඩඅතේ ඥානසාර හිමියන්ට ලබාදුන් අධිකරණ තීන්දුව සැලකේ. එහි මූලික පණිවිඩය වන්නේ ආගමික නායකයෙකු වේවා, දේශපාලනික වශයෙන් බලගතු වේවා, සමාජයේ ජනප්රිය වේවා කිසිවකුට නීතියට ඉහළින් සිටිය නොහැකි බවයි.
මෙහිදී වැදගත් වන්නේ පුද්ගලයා නොවේ; එය නීතියේ මූලධර්මයයි. නීතිය මිනිසෙකු මනින්නේ ඔහුගේ අධිකාරියෙන් නොවේ. ඔහු විසින් කරන ලද ක්රියාවන්, නීතියේ ප්රතිපාදන සහ උසාවියේ ඔප්පු කළ යුතු කරුණු මත වගකීම තීරණය කළ යුතුය.
එනම් අධිකරණය යනු ස්වාධීනත්වයේ අර්ථයයි. අධිකරණය දේශපාලනයෙන් ස්වාධීන වීමේ අවශ්යතාව ගැන කතා කරන්නේ මේ නිසාය. විනිසුරුවරුන් දේශපාලන බලපෑම්වලින් තොරව තීන්දු දිය යුතුයි. පොලිසිය දේශපාලන නියෝගවලට වඩා නීතිය මත ක්රියා කළ යුතුයි.
විමර්ශන ආරම්භ කළ යුත්තේ හෝ අවසන් විය යුත්තේ පුද්ගලයකුගේ දේශපාලන සම්බන්ධතාවලින් නොවේ.
පුද්ගලයෙකුගේ දේශපාලන සබඳතා දෙස විමර්ශන ආරම්භ කිරීම හෝ නතර කිරීම නොකළ යුතුය. චෝදනාවක් තියෙනවා නම් පරීක්ෂණයක් පැවැත්විය යුතුයි; සාක්ෂි තිබේ නම් නීතිමය පියවර ගත යුතුය; අවසාන තීරණය ගැනීම අධිකරණයේ වගකීම විය යුතුයි. මෙය නව දේශපාලන සංස්කෘතියේ වැදගත් සලකුණකි.
පාලකයන්ට ද එම නීතිය අදාළ වේ; විපක්ෂයට ද එම නීතිය අදාළ වේ; අධිකාරියේ සිටින අයට එම නීතියම අදාළ වේ; බලය නැති අයටත් ඒකම නීතියක්. බලය යොදාගෙන නීතිය නැමීම ප්රජාතන්ත්රවාදය නොවේ. ප්රජාතන්ත්රවාදය බිහිවන්නේ නීතියට ගරු කරන සහ බලය ක්රියාත්මක වන තැනයි.
එලෙසම දේශපාලන පහසුව අනුව අධිකරණ තීන්දු පිළිගැනීම සහ ප්රතික්ෂේප කිරීම ප්රජාතන්ත්රවාදී වන්නේ නැත. තීන්දුව තමන්ට වාසිදායක නම් අධිකරණයට ප්රශංසා කිරීමත්, අයහපත් නම් අධිකරණය ගැන සැක කිරීමත් ජනතා විශ්වාසයට තවදුරටත් බලපානවා.
අධිකරණය කෙරෙහි ඇති විශ්වාසය යනු රජයක් කෙරෙහි ඇති විශ්වාසය නොවේ. එය රටේ ආණ්ඩුක්රම ව්යවස්ථාව, නීති ආයතන සහ ප්රජාතන්ත්රවාදී ආයතන කෙරෙහි ඇති විශ්වාසයයි. එම විශ්වාසය ශක්තිමත් කිරීමට නම් පැරණි දේශපාලන මැදිහත්වීම්වලට තිත තැබිය යුතුය.
දූෂණ, බලය අයුතු ලෙස භාවිත කිරීම, සංවිධානාත්මක අපරාධ සහ නීතිවිරෝධී ක්රියා පිළිබඳ විමර්ශන දේශපාලන පාට නොබලා සිදු කළ යුතුයි. දීර්ඝ කාලීනව පවතින නඩු කඩිනමින් විභාග කර අහිංසකයින් ආරක්ෂා කළ යුතු අතර වැරදිකරුවන්ට නීතියෙන් දඬුවම් දිය යුතුය.
යුක්තියේ සැබෑ අර්ථය මෙයයි.
මේක කාගෙන්වත් පළිගන්න දේශපාලනය නෙවෙයි. ඒ වෙනුවට එය කිසිවකු නීතියට ඉහළින් නොතබන දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීමේ උසස් උත්සාහයකි.
අපේ සුන්දර රට ශ්රී ලංකාව සොයන වෙනස ආණ්ඩු වෙනසක් පමණක් නොවේ. බලය පාවිච්චි කරන ආකාරය වෙනස් විය යුතුයි. නීතියේ ප්රවේශය වෙනස් විය යුතුය. අධිකරණයට ගරු කරන දේශපාලන සංස්කෘතියක් ගොඩනැගිය යුතුයි. මිනිසුන් තම අයිතීන් වෙනුවෙන් දේශපාලන බලපෑම් සොයා යා යුතු නැත.
අපමණ කැපකිරීම් මධ්යයේ ගමන් ගත් ජනතා විමුක්ති පෙරමුණ අද අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමාගේ ජාතික ජනතා ආණ්ඩුවේ නායකත්වය යටතේ රට තුළ වෙනසක් ඇති කිරීමට උත්සාහ දරන්නේ ඒ නිසාය.
සාමාන්ය පුරවැසියකුට අධිකරණයේ දොරට තට්ටු කළ විට ලැබෙන සාධාරණත්වය බලයේ සිටින පුද්ගලයකුට ලැබෙන යුක්තිය හා සම විය යුතුය.
එතකොට තමයි එතුමා කිව්වේ "මේ රටේ නීතියක් තියෙනවා. ඒ නීතිය හැමෝටම එකයි" කියලා. මොකද ප්රසිද්ධියේ ඇත්ත කියන්න මිනිස්සු ඉදිරිපත් වෙයි.
ජාතික ජන බලවේගය ශ්රී ලංකාව තුළ ක්රියාත්මක කිරීමට උත්සාහ කරන නව දේශපාලන සංස්කෘතියේ පදනම මෙයයි. නීතියේ ආධිපත්යය ශක්තිමත් වූ විට අධිකරණය කෙරෙහි විශ්වාසය ශක්තිමත් වන අතර අධිකරණය කෙරෙහි විශ්වාසය ශක්තිමත් වූ විට ප්රජාතන්ත්රවාදය ශක්තිමත් වන අතර ප්රජාතන්ත්රවාදය ශක්තිමත් වූ විට ජනතා පරමාධිපත්යයේ සැබෑ අර්ථය ලැබෙනු ඇත.
බලය කාගේ අතේ තිබුණත් කමක් නැහැ.
නීතිය උත්තරීතර විය යුතුය.
යුක්තිය සැමට සමාන විය යුතුය. එය නව දේශපාලන සංස්කෘතියේ ජයග්රහණය වනු ඇත. ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව මේ රටේ පිහිටුවීමේ අරමුණ එයයි.
ඒ අනුව ජාත්යන්තර වශයෙන් රටක ප්රජාතන්ත්රවාදී විශ්වසනීයත්වය මනිනු ලබන්නේ එහි නීති මගින් නොවේ; එම නීතිය මනිනු ලබන්නේ එය බලයේ සිටින අයට අදාළ වන ආකාරය අනුව ය. ඥානසාර හිමියන් සම්බන්ධ අධිකරණ ක්රියාමාර්ගය පෙනෙන්නේ බලය නීතියට ඉහළින් නොමැති බවත් ජනාධිපතිවරයාගේ බලය ආණ්ඩුක්රම ව්යවස්ථාවේ සීමාව තුළ බවත් යළි තහවුරු කිරීමක් ලෙසයි.
දේශපාලන හෝ ආගමික බලපෑම් නොතකා ශ්රී ලංකාවේ අධිකරණවල තීන්දු නීතියේ පදනම මත ක්රියාත්මක වීම වැදගත් ජාත්යන්තර ප්රවෘත්තියක් බවට පත්ව ඇති අතර රටේ නීතියේ ආධිපත්යය පිළිබඳ ජාත්යන්තර විශ්වාසයේ ජයග්රහණයක් බවට පත්ව ඇත.
මෙවන් පසුබිමක ජාතික ජන බලවේගය විසින් ඉදිරිපත් කරන “නව දේශපාලන සංස්කෘතිය” බලය රැකගැනීම නොවේ; එහි කේන්ද්රීය අදහස වන්නේ නීතියේ ආධිපත්යය ආරක්ෂා කිරීමයි. තරාතිරම, දේශපාලන බලපෑම්, ආගම් භේදයකින් තොරව නීතිය ඉදිරියේ සියල්ලෝම එක හා සමානව ක්රියා කරන ක්රමයක් ඇති වූ විට පමණක් අධිකරණය කෙරෙහි ජනතාවට විශ්වාසයක් ඇති වන්නේය.
ශ්රී ලංකාව වගකිවයුතු ප්රජාතන්ත්රවාදී රටක් ලෙස ජාත්යන්තර ප්රජාව අගය කරන අතර ශ්රී ලාංකික පුරවැසියන්ට සෑම ක්ෂේත්රයකම පිළිගැනීම ජාත්යන්තරය තුළ ඉහළ යනු ඇත්තේ එවිටය. “දේශපාලනයට වඩා ව්යවස්ථාව උසස්, බලයට වඩා නීතිය උසස්, සාධාරණය සැමට එක හා සමානයි” යන්න ජාතික ජන බලය ප්රදර්ශනය කිරීමට පටන් ගෙන තිබීම මෙම වෙනසෙහි සැබෑ අරුත බව පසක් වී තිබේ. .
කෙසේ වෙතත්, අධිකරණයෙන් වරදකරු වී වසර 6ක සිර දඬුවම් නියම වූ ඥානසාර හිමියන් නිදහස් වූයේ හිටපු ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා විසින් ලබාදුන් ජනාධිපති සමාවක් මගිනි. එහෙත් එම සමාව ආණ්ඩුක්රම ව්යවස්ථාවට පටහැනි සහ වලංගු නොවන බවට ශ්රේෂ්ඨාධිකරණය තීන්දු කිරීමෙන් පසු ඔහුගේ වසර හයක සිර දඬුවමේ ඉතිරි කාලය යළි ක්රියාත්මක කිරීමට අභියාචනාධිකරණය නියෝග කළේය.
ජනාධිපතිවරයාගේ බලය ක්රියාත්මක කළ හැක්කේ ආණ්ඩුක්රම ව්යවස්ථාවෙන් සහ නීතියෙන් නිර්වචනය කර ඇති අධිකරණ බලයේ සීමාව තුළ පමණක් යන වැදගත් නෛතික මූලධර්මය එකී තීන්දුවෙන් යළි යළිත් අවධාරණය කෙරේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
11-10-2026
සඟරාවට දිනකරන්.
සිංහල පරිවර්තනය සමග)நீதித்துறையிலும் உயர்வாக நாட்டில் எதுவுமே இல்லை. ஞானசார தேரர் மீதான தீர்ப்பு நிரூபிக்கும் உண்மைகள்.
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 11, 2026
Rating:



கருத்துகள் இல்லை: