Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பாலமுனையைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னாவுக்கு Talent Media Forum மூலம் மகத்தான கௌரவம்!


(ஊடகப் பிரிவு - 
Talent Media Forum)

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் ஊடகவியலாளர்களில் ஒருவராக, மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனையைச் சேர்ந்த முகம்மது ஹூசைன் பாத்திமா ஹஸ்னாவுக்கு Talent Media Forum அமைப்பினால் மகத்தான கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.


Talent Welfare Foundation, Talent கலை இலக்கியக் கழகம் மற்றும் Talent Media Forum ஆகிய அமைப்புகள் இணைந்து, இளம் தலைமுறையினருக்கு ஊடகத்துறை சார்ந்த வழிகாட்டல்களையும் தொழில்சார் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன.


இந்த அமைப்புகளின் ஏற்பாட்டில், காத்தான்குடி NAS Campus பிரதான மண்டத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், ஊடகத்துறைப் பயிற்சிகளைத் தொடர்ந்து கற்றுவரும் மாணவியான முகம்மது ஹூசைன் பாத்திமா ஹஸ்னா கௌரவிக்கப்பட்டார்.

Talent Welfare Foundation, Talent கலை இலக்கியக் கழகம் மற்றும் Talent Media Forum ஆகிய அமைப்புகளின் நிறுவுனர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக செயற்பாட்டாளரும் Faleel Stores நிறுவனத்தின் உரிமையாளருமான எம்.ஐ.எம். பழீல் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதிகளாக Ritha International பாலர் பாடசாலையின் நிறுவுனர் திருமதி பீ.எம்.யூ. மஸாகீன் ஆசிரியை மற்றும் ஊடகவியலாளர் என். எம். எம். அஜ்மல்கான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாத்திமா ஹஸ்னாவுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், அவரது ஊடகத்துறை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பழீல் ஹாஜியார் அவர்களால் நிதி அன்பளிப்பும் வழங்கப்பட்டது.

அத்துடன், ஊடகத்துறைப் பாடநெறியைத் தொடர்ந்து கற்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில், திருமதி மஸாகீன் ஆசிரியை அவர்களால் மூன்று மாதங்களுக்கான பாடநெறிக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான பண வவுச்சரும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடகக் கற்கைநெறியைத் தொடரும் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, பாத்திமா ஹஸ்னாவுக்குத் திருமதி மஸாகீன் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், பழீல் ஹாஜியார் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டது. ஊடகவியலாளர் என். எம். எம். அஜ்மல்கான் அவர்களால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வை ஊடகக் கற்கைநெறியைத் தொடரும் மாணவி சாதா சப்ரின் சம்ராஸ் தொகுத்து வழங்கினார்.

இளம் வயதிலேயே ஊடகத்துறையில் ஆர்வத்துடன் பயணித்து வரும் பாத்திமா ஹஸ்னாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கௌரவம், அவரது எதிர்கால ஊடகப் பயணத்துக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
பாலமுனையைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னாவுக்கு Talent Media Forum மூலம் மகத்தான கௌரவம்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 16, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.