Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) சட்டத்தின் முன் அனைவரும் சமம்! ஊழல்வாதிகளுக்கும் அதிகார துஷ்பிரயோகிகளுக்கும் இனி இடமில்லை!


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, "சட்டம் அனைவருக்கும் சமம்" என்பதை உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

"இது எவரையும் பழிவாங்கும் அரசியல் அல்லாமல், நாட்டைச் சுரண்டிய கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான நிர்வாகத்தை வழங்கும் ஜனநாயகப் பயணமாகும்"

ஊழலற்ற, இனவாதமற்ற நாட்டை உருவாக்கி, எதிர்கால சந்ததிக்காக வளமான இலங்கையைக் கட்டியெழுப்பும் புதிய அரசியல் கலாச்சாரம் தற்போது இலங்கையில் விடியத் தொடங்கியுள்ளது.


ஊழல்வாதிகளுக்கும், கள்வர்களுக்கும், அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்கும் எதிராக சட்டத்தை அமுல்படுத்தி, அவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியுடனேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் ஆறு மாதங்கள் கடந்தபோதும், ஒரு வருடம் நிறைவடைந்தபோதும் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், மக்களை ஏமாற்றியும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும் ஆட்சியை கைப்பற்றியதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.அத்தோடு, அரசாங்கத்தை மக்களின் மனங்களில் இருந்து அகற்றிவிடலாம் என்ற தப்புக்கணக்கிலும் அவர்கள் அரசியல் செய்தனர்.

ஆனால், இன்று அவர்கள் வரைந்த கணக்குகள் ஒவ்வொன்றாகத் தவறானவை என்பதை காலமே நிரூபித்து வருகின்றது.

மஹிந்தானந்த அளுத்கமகே தொடங்கி, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ, சுரேஷ் சாலே, ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்தியமை, பிள்ளையான் கைது, நாமல் ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகள், கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் என, கடந்த காலங்களில் சட்டத்தின் பிடிக்கு அப்பாற்பட்டவர்கள் என்று மக்கள் நினைத்த பலருக்கும் சட்டத்தின் கதவு திறக்கப்பட்டுள்ளது.

இன்று முன்னாள் ஜனாதிபதியின் துணைவியார் சிரந்தி ராஜபக்ச தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் இடம் பெறுகின்றன. அதிகாரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், சட்டத்தை விட பெரியதாக அது இருக்க முடியாது என்பதனை இவை அனைத்தும்  தெளிவாகக் கூறுகின்றன.

கடந்த காலங்களில் அரசியல் அதிகாரம், பதவி, செல்வாக்கு, குடும்பப் பின்னணி அல்லது சமூக அந்தஸ்து ஆகியவை சட்டத்தின் முன் ஒரு பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தப்பட்டதாக மக்கள் உணர்ந்திருந்தனர். ஆனால் அந்த அரசியல் கலாச்சாரம் படிப்படியாக மாற்றமடைந்து வருகின்றன.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு நீதித்துறையும் சட்டவாக்கத்துறையும் சுயாதீனமாகச் செயற்படுவதற்கான சூழல் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த கால அரசாங்கங்களைப் போன்று அரசியல் தலையீடுகளுக்கு உட்பட்டு சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டிய நிலைமையிலிருந்து நாடு வெளியேறி வருகின்றது.இதன் காரணமாகவே கடந்த கால அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தியவர்களிடையே அச்சம் உருவாகியுள்ளது.

எந்த நேரத்திலும் சட்டமும் நீதியும் தங்களது கதவுகளைத் தட்டலாம் என்ற அச்சத்தில், கடந்த கால சிறு மற்றும் பெரும் ஊழல்வாதிகள் முதல், இனவாதத்தையும் மதவாதத்தையும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியவர்கள் வரை, என்ன செய்வது என்று தெரியாமல் ஊடகங்களுக்கு முன்னால் புலம்பும் நிலையை இன்று காண முடிகின்றது.

ஆனால் இது யாரையும் பழிவாங்குவதற்கான அரசியல் அல்ல.
இது சட்டத்தை அதன் பாதையில் நடக்கச் செய்யும் அரசியலாகும். இது எதிர்க்கட்சியை ஒடுக்குவதற்கான அரசியலும் அல்ல. இது அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரத்தை இழந்தவர்களும் ஒரே சட்டத்தின் முன் நிற்க வேண்டும் என்ற ஜனநாயக அரசியல் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.


இதுவே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கிக் கொண்டு வரும் புதிய அரசியல் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அடையாளமாகும்.

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் இந்தப் புதிய அரசியல் கலாச்சாரம் படிப்படியாக வேரூன்றிக் கொண்டிருக்கின்றது. கடந்த கால ஊழல்வாதிகளுக்கும், பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தின் மூலம் இந்த நாட்டை அதலபாதாளத்திற்குள் தள்ளிய சுயநல அரசியல்வாதிகளுக்கும் இனியும் இந்த நாட்டில் இடமில்லை என்ற செய்தி மக்களுக்கு தெளிவாகச் சென்று கொண்டிருக்கின்றது.

அதிகாரம் என்பது சலுகை அல்ல. அதிகாரம் என்பது மக்களிடம் பெற்ற பொறுப்பாகும். அரசியல் பதவி என்பது சட்டத்திற்கு மேலான பாதுகாப்பு அல்ல.
அரசியல் பதவி என்பது மக்களுக்கு முன்னால் இன்னும் அதிகமான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகும்.

தேசிய மக்கள் சக்தி துணிச்சலோடு முன்னெடுத்து வரும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பான நடவடிக்கைகளால் இன்று சர்வதேசத்தின் கவனம் இலங்கை மீது திருப்பத் தொடங்கியுள்ளன.

ஒரு நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்ற நம்பிக்கை உருவாகும்போது, அந்த நாட்டின் ஜனநாயக நம்பகத்தன்மையும் வலுப்பெறும். சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படும் போது, முதலீட்டாளர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் புதிய நம்பிக்கை உருவாகும்.

இதனால் ஒரு புறம் சட்டமும் நீதியும் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு, இனவாதமும் மதவாதமும் இல்லாத இலங்கையில் சகல இன மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய அமைதியான சூழல் உருவாகி வருகின்றது.

மறுபுறம், ஊழலற்ற நிர்வாகமும், சட்டத்தின் ஆட்சியும் உறுதிப்படுத்தப்படும் போது, வெளிநாட்டு முதலீடுகளுக்கான நம்பிக்கையும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

வெறும் தேர்தல் வாக்குறுதிகளில், வெறும் மேடைப் பேச்சுகளில், வெறும் கோஷங்களில் ஒரு நாட்டை மாற்றும் உண்மையான அரசியல் என்பது தங்கியிருப்பதில்லை. அது, சட்டத்தை நடைமுறையில் நிலைநிறுத்துவதன் மூலமே ஒரு நாட்டின் அரசியல் கலாச்சாரம் மாற்றப்படுகின்றது.

பெரும்பான்மை மக்கள் பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதை எப்போது, எந்த இடத்தில், எந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத் வெறும் அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் தீர்மானிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் இயக்கம் அல்ல.

அதன் பின்னால் அறுபது வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வந்த “இந்த நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும்” என்ற நிலையான இடதுசாரி கொள்கையின் தூய இலக்கு உள்ளது.

அதன் பின்னால் பல உயிர்த்தியாகங்களும், 
சொல்லொண்ணா துயரங்களும் உள்ளன.
தோல்விகளையும் தாண்டி தொடர்ந்த போராட்டங்களும், மக்களுக்காக மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையில் விதைக்கப்பட்ட எண்ணற்ற வித்துக்களும் உள்ளன. அந்த வித்துக்கள் இன்று தேசிய மக்கள் சக்தி எனும் பேரியக்கமாக விருட்சமாகி நிற்கின்றன. அந்த விருட்சத்தின் நிழலில் இன்று ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகிக் கொண்டிருக்கின்றது.

சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை,
ஊழலுக்கு இனி பாதுகாப்பில்லை, அதிகார துஷ்பிரயோகத்திற்கு இனி இடமில்லை, 
இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் அரசியல் பாதுகாப்பில்லை, இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சட்டத்தின் முன் சம உரிமை உண்டு என்பதே  அந்த புதிய அரசியல் கலாச்சாரத்தின் பிரதான அடிப்படைச் செய்தியாக உள்ளது.

மக்களின் வாக்கால் பிறந்த ஆட்சி, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் ஆட்சி, ஊழலற்ற நாட்டை உருவாக்கும் ஆட்சி, அனைத்து இனங்களும் சம உரிமையுடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் ஆட்சி என்ற கொள்கை கோட்பாட்டுடடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டியெழுப்ப முயற்சிக்கும் புதிய இலங்கையாக உள்ளது.

பல தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்று வார்த்தைகளில் மட்டும் இல்லை; அது சட்டத்தின் நடைமுறையிலும், நீதியின் செயல்பாட்டிலும், புதிய அரசியல் கலாச்சாரத்தின் உருவாக்கத்திலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இதுவே தேசிய மக்கள் சக்தியின் வெற்றியாகவும், மக்கள் வழங்கிய ஆணையின் வெற்றியாயயவும் மாறியுள்ளது.இதுவே பல உயிர்த்தியாகங்களும் சொல்லொண்ணா துயரங்களும் விதைத்த ஜனநாயக சிந்தனைகளின் வெற்றியாக பரிணமித்துள்ளது. இதுவே ஒரு அரசாங்கத்தின் வெற்றி மட்டுமல்லாமல் — சட்டம் அனைவருக்கும் சமம் என்ற புதிய இலங்கைக்கான பிறப்பாகவும் மாறியுள்ளது.

 "பைல்கள் என்னாச்சு?” என்று பழைய எஜமானர்களின் பாசத்தில் சில தமிழ்த்தேசிய மற்றும் தனித்துவ முஸ்லிம் அரசியல்வாதிகள் நக்கலாகக் கேட்ட காலம் இருந்தது. ஆனால், அந்தப் பைல்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கத் தொடங்கியதும், அரசியல் நாட்டாமைகளாக வலம் வந்தவர்களின் புலம்பல்களும், கதறல்களும் இன்று மக்களின் காதுகளில் தெளிவாகக் கேட்கின்றன. 

அதிகாரத்தின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள் அரசியல் தலையீடுகள் அற்ற  சட்டத்தினால் வெளிச்சத்திற்கு வரும்போதும், பிடிக்கும் போதும் "கதற வேண்டாம்” என்பதே அரசாங்கத்திடமிருந்து வரும் ஒரே பதிலாக இருக்கிறது. கடந்த காலத்தில் சட்டத்தை வளைத்து தப்பித்தவர்களுக்கு, இன்று சட்டம் தனது வேலையைச் செய்ய ஆரம்பித்திருப்பது புதிய அரசியல் கலாச்சாரத்தின் அடையாளம் இதுதான் என்பதை தற்பொழுது புரிய வைத்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் பழிவாங்கும் அரசியல் அல்ல; பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி மக்களின் சொத்துக்களையும், நாட்டின் வளங்களையும் சுரண்டிய அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதேயாகும்.

ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் பொறுப்புக்கூறச் செய்து, தூய்மையான நிர்வாகத்தையும், நேர்மையான அரசியலையும் நிலைநாட்டி, “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நனவாக்கி, எதிர்கால தலைமுறைக்கு பெருமையுடன் கையளிக்கக்கூடிய தூய்மையான இலங்கையை உருவாக்குவதே இந்தப் பயணத்தின் உன்னத நோக்கமாக உள்ளது.

அஹமட் இர்ஷாட்.
12-10-2026.

නීතිය ඉදිරියේ සියල්ලෝම සමානයි!
දූෂිතයින්ට සහ බලය අවභාවිත කරන්නන්ට තවත් තැනක් නැත!

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය දූෂිතයින්ට එරෙහිව නීතිමය ක්‍රියාමාර්ග වේගවත් කරමින් "නීතිය සැමට සමාන" බව ප්‍රකාශ කරයි.

"මෙය පළිගැනීමේ දේශපාලනයක් නොව රට සූරා කා ඇති සංස්කෘතිය අවසන් කර පිරිසිදු පාලනයක් ලබාදීමේ ප්‍රජාතන්ත්‍රවාදී ගමනකි."

දූෂණයෙන් තොර ජාති භේදයකින් තොර රටක් බිහිකර අනාගත පරපුර වෙනුවෙන් සෞභාග්‍යමත් ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීමට නව දේශපාලන සංස්කෘතියක් ශ්‍රී ලංකාව තුළ උදාවීමට පටන් ගෙන තිබේ.
++++++++++++++++

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය බලයට පත් වූයේ දූෂිතයන්ට, තක්කඩියන්ට, දේශපාලන බලය අවභාවිත කරන්නන්ට එරෙහිව නීතිය ක්‍රියාත්මක කර ඔවුන් කළ අපරාධවලට දඬුවම් දෙන බවට පොරොන්දු වෙමිනි.

එහෙත් මාස හයක් වසරක් ගෙවී ගියද ආණ්ඩුව දුන් පොරොන්දු ඉටු නොකළ අතර විපක්ෂයේ මන්ත්‍රීවරුන් සහ සුළු පක්ෂ නායකයින් ජනතාව රවටා බොරු පොරොන්දු දුන් බවට පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතත් දිගින් දිගටම විවේචන එල්ල කළා.

නමුත් ඔවුන් අඳින ගිණුම් එකින් එක වැරදි බව කාලය ඔප්පු කරමින් තිබේ.

මහින්දානන්ද අලුත්කමකේ, හිටපු පොලිස්පති පූජිත ජයසුන්දර, හේමසිරි ප්‍රනාන්දු, සුරේෂ් සාලේ, පාස්කු ප්‍රහාරයට අදාළව නඩු විභාග, මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවන්, විදේශගතව සිටි පාතාල නායකයන් ශ්‍රී ලංකාවට ගෙන්වා නීතිය හමුවට පමුණුවා, පිල්ලෙයාන් අත්අඩංගුවට ගැනීම, නාමල් රාජපක්ෂ මහතාට අදාළ නඩු කටයුතු නාමල් රාජපක්ෂ, කලකෝසරා අධිකරණයට ඉදිරිපත් කළේය. ආදී වශයෙන් පිටස්තර යැයි සිතා සිටි බොහෝ දෙනෙකුට නීතියේ දොර විවර වී ඇත.

හිටපු ජනාධිපතිවරයාගේ බිරිඳ වන චිරන්ති රාජපක්ෂ මහත්මියට අදාළ නීතිමය කටයුතු ද අද සිදුකෙරෙනවා. මේ සියල්ලෙන් පැහැදිලි වන්නේ කොතරම් විශාල බලධාරියෙකු වුවද එය නීතියට වඩා උතුම් විය නොහැකි බවයි.

දේශපාලන බලය, නිලය, බලපෑම, පවුල් පසුබිම හෝ සමාජ තත්ත්වය නීතිය ඉදිරියේ පලිහක් ලෙස භාවිත කළ බව අතීතයේ මිනිසුන්ට හැඟී ගියේය. එහෙත් ඒ දේශපාලන සංස්කෘතිය ක්‍රමයෙන් වෙනස් වෙමින් පවතී.

22 වැනි ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය ගෙන ඒමත් සමඟ අධිකරණයේ සහ ව්‍යවස්ථාදායකයේ ස්වාධීනත්වය සඳහා අවශ්‍ය පරිසරය ශක්තිමත් වීමත් සමඟ පසුගිය රජයන් මෙන් දේශපාලන ඇඟිලි ගැසීම්වලට යටත්ව නීතියට රාජකාරි කිරීමට සිදුවන තත්ත්වයෙන් රට ඈත්වෙමින් තිබේ. මේ නිසා පසුගිය කාලයේ දේශපාලන බලය පාවිච්චි කළ අය තුළ භීතියක් මතුව තිබෙනවා.

ජාතිවාදය, ආගම්වාදය දේශපාලන අවි කරගත් අතීතයේ ලොකු ලොකු දූෂිතයන්ගේ සිට නීතිය හා යුක්තිය කොයි මොහොතක හෝ තමන්ගේ දොරට තට්ටු වේ යැයි බියෙන් අද අපට දකින්නට ලැබෙන්නේ කුමක් කළ යුතු දැයි නොදැන මාධ්‍ය ඉදිරියේ විලාප දෙන තත්ත්වයකි.

හැබැයි මේක කාගෙන්වත් පළිගන්න දේශපාලනය නෙවෙයි.
නීතිය එහි ගමනට සලස්වන්නේ දේශපාලනයයි. විපක්ෂය මර්ධනය කිරීම දේශපාලනයක් ද නොවේ. බලයේ සිටින අය සහ බලය අහිමි වූවන් එකම නීතියක් ඉදිරියේ පෙනී සිටිය යුතු ප්‍රජාතන්ත්‍රවාදී දේශපාලනය මෙයින් ඉස්මතු වේ.

ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගය රජය විසින් නිර්මාණය කරන නව දේශපාලන සංස්කෘතියේ විශාලතම සංකේතය මෙයයි.

දූෂණයෙන් තොර රටක් ගොඩනැගීමේ මෙම නව දේශපාලන සංස්කෘතිය ක්‍රමයෙන් මුල් බැස ගනිමින් තිබේ. සාම්ප්‍රදායික දේශපාලන සංස්කෘතිය හරහා මේ රට අගාධයට ඇද දැමූ අතීත දූෂිතයන්ට සහ ආත්මාර්ථකාමී දේශපාලනඥයන්ට තවත් ඉඩක් නොමැති බවට පණිවිඩය පැහැදිලිවම ජනතාව අතරට යනවා.

බලය යනු වරප්‍රසාදයක් නොවේ. බලය යනු ජනතාවට පැවරී ඇති වගකීමකි. දේශපාලන නිලතල නීතියට ඉහළින් ඇති ආරක්ෂාවක් නොවේ.
දේශපාලන තනතුර යනු ජනතාව ඉදිරියේ වැඩි වගකීමක් භාර ගැනීමයි.

නීතියේ ආධිපත්‍යය සහ අධිකරණයේ ස්වාධීනත්වය සම්බන්ධයෙන් ජාතික ජන බලවේගය ගන්නා ක්‍රියාමාර්ග හේතුවෙන් අද ශ්‍රී ලංකාව කෙරෙහි ජාත්‍යන්තර අවධානය යොමු වීමට පටන් ගෙන තිබේ.

රටක නීතිය සැමට එකසේ ක්‍රියාත්මක වන බවට විශ්වාසයක් ඇති වූ විට එම රටේ ප්‍රජාතන්ත්‍රවාදී විශ්වසනීයත්වය ද ශක්තිමත් වේ. නීතියේ ආධිපත්‍යය ස්ථාපිත වූ විට ආයෝජකයින්ට සහ රටේ ආර්ථිකයට නව විශ්වාසයක් ඇති වේ.

මේ නිසා එක පැත්තකින් නීතිය යුක්තිය නිසිලෙස ක්‍රියාත්මක වන අතර ජාතිවාදය ආගම්වාදය නැති ශ්‍රී ලංකාව තුළ සියලු ජාතීන්ට අයත් අයට සමාන අයිතිවාසිකම් ඇතිව ජීවත් විය හැකි සාමකාමී පරිසරයක් නිර්මාණය වෙමින් පවතී.

අනෙක් අතට දූෂණයෙන් තොර පාලනයක් සහ නීතියේ ආධිපත්‍යය ඇති වූ විට විදේශ ආයෝජන කෙරෙහි විශ්වාසය වැඩි වන අතර රටේ ආර්ථික වර්ධනය ඉහළ නැංවීමට නව අවස්ථා උදා වේ.

රටක් පරිවර්තනය කරන සැබෑ දේශපාලනය හුදු මැතිවරණ පොරොන්දු, හුදු වේදිකා කතා, හුදු සටන් පාඨ මත රඳා පවතින්නක් නොවේ. රටක දේශපාලන සංස්කෘතිය වෙනස් වන්නේ නීතිය ක්‍රියාත්මක කිරීම හරහාය.

බහුතර ජනතා ශක්තියෙන් බලයට පත්ව සිටින අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජනතා ශක්ති ආණ්ඩුව හුදු දේශපාලන ගණනය කිරීම් මත පදනම්ව කවදා, කොතැනක, කුමන ආකාරයෙන් ක්‍රියාත්මක කළ යුතුද යන්න තීරණය කරන අවස්ථාවාදී දේශපාලන ව්‍යාපාරයක් නොවේ.

ඒ පිටුපස ඇත්තේ වසර හැටක් තිස්සේ මහජන විමුක්ති පෙරමුණ ඉදිරියට ගෙන යන “සියලු දෙනාටම මේ රටේ එක හා සමානව ජීවත් විය යුතුයි” යන ස්ථාවර වාමාංශික ප්‍රතිපත්තියේ පිවිතුරු අරමුණයි.

ඉන් පසු බොහෝ කැපකිරීම්, 
කිව නොහැකි ඛේදවාචක ද තිබේ.
පරාජයෙන් ඔබ්බට ඉදිරියට යන අරගල සහ ජනතාව වෙනුවෙන් වෙනසක් අපේක්ෂාවෙන් රෝපණය කළ ගණන් කළ නොහැකි බීජ තිබේ. එම බීජ අද ජාතික ජන බලයේ ආශ්චර්යය දක්වා වර්ධනය වී ඇත. ඒ ගහ සෙවනේ අද අලුත් දේශපාලන සංස්කෘතියක් බිහිවෙමින් තිබෙනවා.

කිසිවෙක් නීතියට ඉහලින් නැත,
දූෂණයට තවදුරටත් මුක්තියක් නැත, බලය අනිසි ලෙස භාවිතා කිරීමට තවත් ඉඩක් නැත, 
එම නව දේශපාලන සංස්කෘතියේ මූලික යටි පණිවිඩය වන්නේ කුල භේදයට සහ ආගම්වාදයට දේශපාලන රැකවරණයක් නොමැති බවත්, මේ රටේ සෑම මනුෂ්‍යයෙකුටම නීතිය ඉදිරියේ සමාන අයිතිවාසිකම් ඇති බවත්ය.

ජනතා ඡන්දයෙන් උපන් ආණ්ඩුවක්, නීතියේ ආධිපත්‍යය තහවුරු කරන ආණ්ඩුවක්, දූෂණයෙන් තොර රටක් හදන ආණ්ඩුවක්, සියලු ජාතීන් සමාන අයිතිවාසිකම් ඇති රටක් ගොඩනඟන ආණ්ඩුවක් යන ප්‍රතිපත්තියෙන් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්‍රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුවක් ගොඩනැගීමට නව ශ්‍රී ලංකාව උත්සාහ කරයි.

දශක ගණනාවක් තිස්සේ ජනතාව බලා සිටි වෙනස අද වචන පමණක් නොවේ; එය නීතිය ක්‍රියාත්මක කිරීම, යුක්තිය පසිඳලීම සහ නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීම තුළින් ප්‍රකාශ වීමට පටන් ගෙන තිබේ.

මෙය ජාතික ජන බලයේ ජයග්‍රහණය සහ ජනතාව ලබාදුන් ජනවරමේ ජයග්‍රහණය බවට පත්වෙලා. මෙය බොහෝ කැපකිරීම් සහ කිව නොහැකි ඛේදවාචකයන් විසින් වපුරන ලද ප්‍රජාතන්ත්‍රවාදී අදහස්වල ජයග්‍රහණය දක්වා වර්ධනය වී ඇත. මෙය රජයක ජයග්‍රහණයක් පමණක් නොව නීතිය සැමට සමාන වන නව ශ්‍රී ලංකාවක උපත ද වේ.

 "ගොනු ගැන කුමක් කිව හැකිද?" සමහර දෙමළ සහ මුග්ධ මුස්ලිම් දේශපාලකයින් තම පැරණි ස්වාමිවරුන්ගේ සෙනෙහස නිසා අනුකරණය ඉල්ලා සිටි කාලයක් තිබුණි. නමුත් ඒ ගොඩවල් එකින් එක අරින්නට පටන් ගන්නා විට දේශපාලන විදේශිකයන් ලෙස බඩගාගත් අයගේ විලාප හඬවල් අද ජනතාවගේ කන්වලට හොඳින්ම ඇහෙනවා.

බලය පිටුපස සැඟවී ඇති සත්‍ය හෙළිදරව් වී දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොරව නීතියට හසු වූ විට ආණ්ඩුවෙන් ලැබෙන එකම ප්‍රතිචාරය "අඬන්න එපා" යන්නයි. පසුගිය කාලයේ නීතිය නැමීමෙන් ගැලවුණු අයට අද නීතිය සිය කාර්යය ඉටු කිරීමට පටන් ගෙන තිබීම නව දේශපාලන සංස්කෘතියක ලකුණකි.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ ජාතික ජන බලවේගයේ ආණ්ඩුවේ අරමුණ පළිගැනීමේ දේශපාලනයක් නොවේ; ඒ තනතුරු බලය පාවිච්චි කරමින් ජනතා දේපළ, රටේ සම්පත් සූරා කෑමේ දේශපාලන සංස්කෘතියට තිත තැබීමයි.

මේ ගමනේ උදාර පරමාර්ථය වන්නේ දූෂණ, වංචා, බලය අවභාවිතය කුමක් වුවද නීතිය ඉදිරියේ වගවීම, පිරිසිදු පාලනයක් හා අවංක දේශපාලනයක් ඇති කර "සෞභාග්‍යමත් රටක් - සුන්දර ජීවිතයක්" යන අරමුණ සැබෑ කර ගනිමින් අනාගත පරපුරට අභිමානයෙන් භාර දිය හැකි පිරිසිදු ශ්‍රී ලංකාවක් බිහිකිරීමයි.

අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
12-10-2026.
සිංහල පරිවර්තනය සමග) சட்டத்தின் முன் அனைவரும் சமம்! ஊழல்வாதிகளுக்கும் அதிகார துஷ்பிரயோகிகளுக்கும் இனி இடமில்லை! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.