இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்
(எம்.ஐ.அப்துல் நஸார்)
அரசியலமைப்புச் சபையினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த வெற்றிடமானது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் ஏற்படவுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான முன் ஆயத்தமாக இப் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 41ஆ உறுப்புரை மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகள் மற்றும் திருத்தங்களுக்கு அமைவாகவே இந்த நியமன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் சட்டம், குற்றவியல் புலனாய்வு மற்றும் சட்ட அமுலாக்கம், கணக்காய்வு அல்லது சட்ட மருத்துவ கணக்கீட்டியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், பொறியியல், சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர சேவைகள், பொது விவகார முகாமைத்துவம் அல்லது பொது நிருவாகம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தது 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட உயர்மட்ட வல்லுநர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.parliament.lk க்குச் சென்று உரிய மாதிரி விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க முடியும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் அரசியலமைப்புச் சபையின் பதில் செயலாளருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும்.
பதிவுத் தபாலில் அனுப்புவதற்கு மாற்றீடாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை constitutionalcouncil@parliament.lk என்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 12, 2026
Rating:

கருத்துகள் இல்லை: