Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

"எமது அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் அனைத்துப் பாடசாலைகளிலுமுள்ள பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாகும்." — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதே அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் ஆகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


2026.10.10 அன்று வடமத்திய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி தொடர்பான அவதானிப்பு விஜயத்தின் போது, கெகிராவ மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்ட போதே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.


இதன்போது, குறித்த பாடசாலைக்காக ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் விடுதிகள், வகுப்பறைகள் மற்றும் ஏனைய கட்டிடங்களின் முன்னேற்றத்தைப் பிரதமர் பார்வையிட்டதுடன், பாடசாலையின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதற்காக கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கேட்டறியும் கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார்.


அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்.........

பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிக்கும் போது, காணப்படக்கூடிய பொருளாதார வசதிகள் மற்றும் வளங்களின் அளவுக்கு ஏற்ப, முன்னுரிமைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். 


பாடசாலை ஒன்றின் அமைவிடம், வரலாறு மற்றும் தனித்துவத்தை அடையாளம் கண்டு பரந்த தொலைநோக்குடன் கெகிராவ மத்திய மகா வித்தியாலயம் உட்பட நாட்டின் ஏனைய அனைத்துப் பாடசாலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.


இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, நாட்டின் நீண்டகால அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்திற்காக அரசாங்கம் கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.


குறிப்பாக கெகிராவ மத்திய மகா வித்தியாலயம் உட்பட நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நவீனமயப்படுத்தி, அவற்றுக்குத் தேவையான நடைமுறை மற்றும் பௌதிக வசதிகளை வழங்குவதற்கான பரந்த திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இந்த விஜயத்தில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

"எமது அரசின் அடிப்படைப் கொள்கையும் பொறுப்பும் அனைத்துப் பாடசாலைகளிலுமுள்ள பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாகும்." — பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.