Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்து நானே சொல்கின்றேன் ; மனோ கணேசன்



“நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருக்கும் இனவாதத்தைத் தூண்டிவிடுவதில், “அரசுக்கு ஆதரவாக” எழுதுகின்றோம் என நினைத்து, தமிழ் மொழியில் பொதுவெளியில் எழுதும் “எழுத்தாளர்கள்”, பேசும் “பேச்சாளர்கள்”, அதை அப்படியே கொண்டு செல்லும் யூ-டியூப் ஊடகர்கள், இன்று நாட்டிலே கொஞ்சம் வித்தியாசமாக ஆட்சி செய்ய முயலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அவஸ்தைக்கு உள்ளாக்குகின்றார்கள்.


இவர்கள் பொறுப்பற்றத்தனமாகப் பொதுவெளியில் வந்து போடும் கோஷம், “ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ்” (ஏ.ஐ.) மூலம் உடனடியாகச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்படுகின்றன. அவை “சிங்கள – பௌத்த மத அரசியல்” மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன. 

ஆகவே, “அந்தாளை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்கப்பா!” என எதிர்க்கட்சியில் இருந்தே நான் சொல்கின்றேன்.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இப்போது யாரும், குற்றம் புரிந்த ஞானசாரரைச் சிறையில் போட்டது தவறு எனச் சொல்லவில்லை. அவரது சீருடைதான் பிரச்சினை. அதை ஜனாதிபதி அநுர தீர்க்கட்டும். இப்போது, ஜனாதிபதி உடனடியாக ஞானசாரரின் தேருடை தொடர்பில் பௌத்த தலைமைகளைக் கண்டு பேசி, இரண்டு வாரங்களில் தீர்வு தருவதாக உறுதி அளித்துள்ளார். இது அவர் மீதான பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தம். அதற்கு அவர் பதில் கூறியுள்ளார்.

நீறுபூத்த நெருப்பாக இருக்கும் “இனவாதம்” முழுமையாக மாறக் காலம் எடுக்கும். அதைத் தற்காலிகமாகத் தரைக்கு அடியில் போட்டது, “அரகலய” என்ற கிளர்ச்சியாகும். இது தொடர்பில், சமூக ஊடகங்களில் கூவித் திரியும், தமிழ் பேசும் “எழுத்தாளர்களுக்கும்”, “பேச்சாளர்களுக்கும்” கூறுகின்றேன், 

பௌத்த மதத் தேரர்கள் தொடர்பில், ஜனாதிபதி அநுரவுக்கு உதவி செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், மீண்டும் மத அரசியல் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்றால், தயவுசெய்து அமைதியாக இருங்கள். 

நீங்கள் பொதுவெளியில் வந்து போடும் “அரோகரா” அல்லது “சபாஷ்” அல்லது “ஜயமேவா” கோஷங்கள் எல்லாம், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் உடன் “இன்ஸ்டன்ட்டாக”ச் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்களப் பொதுவெளிகளில் உலாவிடப்பட்டு, “சிங்கள – பௌத்த மத அரசியல்” மீண்டும் தலைதூக்கக் காரணங்களாக அமைகின்றன.

ஆகவே, தமிழ் பேசும் மக்கள், இது பற்றி அதிகம் பேசாமல், “அதே மாதிரி நமது பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுங்கள் ஜனாதிபதி அவர்களே!”, என கோரிக்கை விடுத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டும். 

அதாவது, ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்து நானே சொல்கின்றேன்.” – என்றுள்ளது.

ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்து நானே சொல்கின்றேன் ; மனோ கணேசன் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.