සිංහල පරිවර්තනය සමග)நீதித்துறை சுயாதீனமும் பொறுக்கூறலும்; இலங்கை அரசியல் சசூழலில் எழும் புதிய விவவாதங்கள்!
பழைய அரசியல் நடைமுறைகள் தொடர்பாகன குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக விசாரிக்கப்பட்டுள்ளது.
அவற்றை அரசியல் பழிவாங்கள் என சித்தரிப்பதன் மூலம் பொது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு.
அரசியல் ரீதியாக தங்களை பலப்படுத்திக்கொள்ள முடியாத சில சக்திகள், இனவாதத்தையும் மதவாதத்தையும், மீண்டும் அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்த முயற்சிக்கலாம் என்பதே இன்றைய அரசியல் சூழலில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அரச வாகனத்தைத் தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி நீதிமன்றத் தீர்ப்பின்படி பகிரங்க மன்னிப்புக் கோரியமையானது, நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்க நிருவாக.தில் சட்டத்தின் ஆட்சி மாற்றம் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எளிமையான அரசியல் கலாச்சாரத்தையும், மக்களுக்காக சேவையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் முன்னெடுப்பதில் கவனம் செலுத்திவருகின்றது. கவனம் செலுத்தி வருகிறது.
அரசியல் அதிகாரத்தைச் சுகபோகங்களுக்கான கருவியாகப் பயன்படுத்திய பழைய அணுகுமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்களின் வரிப்பணத்திற்குப் பொறுப்புக்கூறும் அரசியல் நிர்வாகத்தை உருவாக்குவதே இந்த மாற்றத்தின் அடிப்படை நோக்கமாகும். குறிப்பாக, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல், நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாத்தல், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற விடயங்கள் இலங்கையின் ஜனநாயக எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானவை.
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் சாதாரண குடிமக்களுக்கும் ஒரே சட்டம் என்ற கொள்கை நடைமுறையில் உறுதிப்படுத்தப்படும்போதுதான், ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும், சர்வதேச மதிப்பும் வலுப்பெறும்.
இவற்றுக்கெல்லாம் சிறந்த உதாரணமாக,
அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்ட SC/FR 275/2024 வழக்கின் தீர்ப்பிற்கு அமைவாக:
கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தை, இலக்கம் 408 இல் வசிக்கும் அப்துல் ஹமீத் மொஹமட் பௌஸி ஆகிய நான், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் கடமையாற்றிய காலத்தில், அரசாங்கத்தின் பொதுத் தொகுதிக்குச் சொந்தமான WP KI-4666 இலக்கமுடைய 'Toyota Land Cruiser' வாகனத்தை எனது தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியமை தொடர்பில்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மதிப்பிற்குரிய பொதுமக்களிடம் எனது பகிரங்க மன்னிப்பைக் கோருவதோடு, இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நிகழாது என்ற உறுதிமொழியையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன் என்ற மண்ணிப்பு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் அரச வாகனங்களும் அரச சொத்துக்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், நீதிமன்ற தீர்ப்பினூடாக இடம்பெற்ற இத்தகைய பகிரங்க மன்னிப்பு கோரல், நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதையும், அரசியல் தலையீடுகள் அற்ற சுயாதீனமான சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுவதையும் உணர்த்தும் ஒரு நிகழ்வாக அவதானிகைளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது வொரு சிறிய உதாரணமாகும். இதுபோன்ற கணக்கிலடங்கா, குற்றச்சாட்டுகளும், அதிகாரத் துஷ்பிரயோக நடவடிக்கைகளும் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பிரதேசங்களிலும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் "சட்டம் அனைவருக்கும் சமம்" என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் பெறப்பட்ட ஒரு ரூபாய் கூட மக்களுக்கே திரும்பச் சென்றடைய வேண்டும். தற்போது இங்கு நடைமுறையிலிருப்பது, அரசியல் தலையீடுகளற்ற சுயாதீனமான சட்டத்தின் ஆட்சியாகும்.
இதற்குத்தான் எதிர்க்கட்சிகள் அச்சப்படுகின்றன. இத்தகைய புதிய அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்கவே கடந்தகால ஊழல்வாதிகளும், சுயநல அரசியல் தலைமைகளும் முயற்சித்து வருகின்றன. இதற்காகவே மீண்டும் மதவாத, இனவாதக் கருத்துக்களை மக்களிடையே திணித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மக்கள் மனங்களிலிருந்து ஓரங்கட்டிவிடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.
இந்த மாற்றங்கள் ஏன் சில எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் சவாலாகத் தோன்றுகின்றன? பல தசாப்தங்களாக அதிகாரத்தைப் பயன்படுத்திப் பழகிய அரசியல் அணிகளுக்கு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சுயாதீன விசாரணைகள் போன்ற கொள்கைகள் தமது எதிர்கால அரசியல் செல்வாக்கைக் குறைக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக, பழைய அரசியல் நடைமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக விசாரிக்கப்படும்போது, அவற்றை அரசியல் பழிவாங்கல் எனச் சித்தரிப்பதன் மூலம் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் கையிலெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு எதிர்க்கட்சியினதும் விமர்சனத்தையும் ஒரே விதமாகப் பார்க்க முடியாது.
அரசாங்கத்தை விமர்சிப்பதும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாகும். ஆனால், உண்மையான ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும், மக்களிடையே அச்சத்தையும், பிரிவினையையும் உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் பிரசாரங்களுக்கும் இடையில் மக்கள் தெளிவான வேறுபாட்டைக் காண வேண்டும்.
அரசியல் ரீதியாகத் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள முடியாத சில சக்திகள், இனவாதத்தையும் மதவாதத்தையும் மீண்டும் அரசியல் ஆயுதங்களாகப் பயன்படுத்த முயற்சிக்கலாம் என்பதே இன்றைய அரசியல் சூழலில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும். சிங்கள மக்களின் மத உணர்வுகள், தமிழ் மக்களின் இன உரிமைகள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் அடையாளம் ஆகியவற்றை அரசியல் பேரம் பேசுவதற்கான கருவிகளாக மாற்றுவது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு ஆபத்தானது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான ஆதரவைப் பலவீனப்படுத்துவதற்காக இத்தகைய உணர்வுகள் தூண்டப்படுமானால், அதன் பாதிப்பு ஓர் அரசாங்கத்துடன் மட்டும் முடிவடையாது; சாதாரண மக்களுக்கிடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். அதேவேளை, அரசாங்கம் தனது கொள்கைகள் மூலம் இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் சமமான பாதுகாப்பையும், நீதியையும் வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார நிவாரணம் ஆகியவற்றில் கிடைக்கும் நடைமுறை முன்னேற்றங்களே எந்தவொரு அரசியல் பிரசாரத்திற்கும் வலுவான பதிலாக அமையும்.
இதற்கிடையில், சில சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்ப்பதற்குப் பின்னால் தேர்தல் கணக்குகள், அதிகாரப் பகிர்வு தொடர்பான எதிர்பார்ப்புகள், தமது கட்சி ஆதரவுத் தளத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், சிறுபான்மை மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, இனவாத அல்லது மதவாத அரசியலை முன்னெடுக்கும் அணிகளுடன் இணைந்து செயற்படுவது அந்த மக்களின் நீண்டகால நலன்களுக்கு உதவுமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களின் காணி உரிமைகள், மொழி உரிமைகள், பிரதேச அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களில் உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே சிறுபான்மைத் தலைவர்களின் முதன்மைப் பொறுப்பாகும்.
அதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமா, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டுமா என்பதை அவர்கள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். அரசியல் கூட்டணிகள் ஜனநாயக உரிமையாக இருந்தாலும், அவற்றின் உண்மையான பெறுபேறுகளை மதிப்பிடும் உரிமை மக்களுக்கே உரியது.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் நிலை எவ்வாறு அமையும் என்பது அவர்களின் அரசியல் அணுகுமுறையிலேயே தங்கியுள்ளது. அரசாங்கத்தை விமர்சிப்பதுடன் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடைமுறைத் திட்டங்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தில் தமது இடத்தை வலுப்படுத்த முடியும்.
மாறாக, பழைய அரசியல் முறைகளைப் பாதுகாப்பதற்காகவோ, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலமாகவோ மக்களின் ஆதரவைப் பெற முயற்சித்தால், அவர்கள் மீதான நம்பிக்கை மேலும் குறையக்கூடும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் விமர்சனங்களிலிருந்து விலகி நிற்காமல், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றுவதிலும், ஊழல் ஒழிப்பை நடை முறைப்படுத்துவதிலும், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதிலும், அனைத்து மக்களுக்கும் சமமான சேவைகளை வழங்குவதிலும் தனது வெற்றியை நிரூத்து வருகின்றது.
ஜனநாயகத்தில் அரசாங்கத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் மக்களே; அந்தத் தீர்மானம் உணர்ச்சிகளால் அல்ல, அனுபவங்களாலும் நடைமுறைப் பெறுபேறுகளாலும் வழிநடத்தப்பட வேண்டும்.
இறுதியாக, இலங்கைக்கு இன்று தேவைப்படுவது எதிரிகளை உருவாக்கும் அரசியல் அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை உருவாக்கும் அரசியலாகும். பதவி என்பது சலுகை அல்ல, அது பொறுப்பாகும். அதிகாரம் என்பது பரம்பரைச் சொத்தும் அல்ல; மக்களால் வழங்கப்படும் நம்பிக்கை என்ற உண்மையை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உண்மையான பலம் அதன் அரசியல் எதிர்ப்பாளர்களின் பலவீனத்தில் அல்ல, மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நேர்மறையான மாற்றங்களிலேயே தங்கியுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கொள்கை நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டு, ஊழலற்ற நிர்வாகம் உருவாக்கப்பட்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களும் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழக்கூடிய சூழல் கட்டியெழுப்பப்படுமானால், அது ஓர் அரசாங்கத்தின் வெற்றியாக மட்டுமல்ல, முழு இலங்கையின் வெற்றியாகவும் அமையும்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் தாண்டி, நீதியையும், நேர்மையையும், மனித நேயத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்ல; அரசியல் கட்சிகள், ஊடகங்கள் மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியதாகும்.
அஹமட் இர்ஷாட்.
தினகரன் பத்திரிகைக்காக,
30-10-2026
අධිකරණ ස්වාධීනත්වය සහ වගවීම; ලාංකීය දේශපාලන පරිසරයේ මතුවන අලුත් වාද විවාද!
පැරණි දේශපාලන භාවිතයන් පිළිබඳ චෝදනා නීත්යානුකූලව විමර්ශනය කර තිබෙනවා. ඒවා දේශපාලන පළිගැනීම් ලෙස හුවා දක්වමින් මහජන අවධානය වෙනතකට යොමු කිරීමට උත්සාහ දරන බවට ද විවේචන එල්ල වෙමින් තිබේ.
අද පවතින දේශපාලන වටපිටාව තුළ සඳහන් කළ යුතු වැදගත්ම කරුණ නම් දේශපාලන වශයෙන් ශක්තිමත් කරගත නොහැකි ඇතැම් බලවේග නැවතත් කුලවාදය සහ කල්ලිවාදය දේශපාලන අවියක් කර ගැනීමට උත්සාහ කළ හැකි බවයි.
තම පෞද්ගලික අවශ්යතා සඳහා ආපදා කළමනාකරණ මධ්යස්ථානයේ නිල රථය භාවිත කිරීම සම්බන්ධයෙන් හිටපු අමාත්ය ඒ.එච්.එම්.ෆවුෂි. බවුසි අධිකරණ තීන්දුවෙන් පසු ප්රසිද්ධියේ සමාව අයැදීමෙන් රටේ නීතිය සමාන බව ඔප්පු වී ඇත.
++++++++++++++++++
ශ්රී ලංකාවේ වත්මන් දේශපාලන වටපිටාව තුළ ආණ්ඩු පාලනය තුළ නීතියේ ආධිපත්යය වෙනස් කිරීමට විරුද්ධ පාර්ශ්වයේ ප්රවේශයන් පිළිබඳව පුළුල් සංවාදයක් ඇති වී තිබේ. සරල දේශපාලන සංස්කෘතියක්, ජනතාවට සේවය කරන පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් සහ විනිවිදභාවයෙන් යුත් පාලනයක් ප්රවර්ධනය කිරීම කෙරෙහි අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය අවධානය යොමු කර තිබේ. අවධානය යොමු කරයි.
මේ වෙනසේ මූලික පරමාර්ථය වන්නේ දේශපාලන බලය වාසි සඳහා මෙවලමක් කර ගැනීමේ පැරණි ආකල්පවලට තිත තබා ජනතාවගේ බදු මුදලට වගකියන දේශපාලන පාලනයක් ඇති කිරීමය. විශේෂයෙන්ම නීතියේ ආධිපත්යය ශක්තිමත් කිරීම, අධිකරණයේ ස්වාධීනත්වය ආරක්ෂා කිරීම, දූෂණයට සහ බලය අනිසි ලෙස භාවිතා කිරීමට එරෙහිව ක්රියාමාර්ග ගැනීම ශ්රී ලංකාවේ ප්රජාතන්ත්රවාදී අනාගතය සඳහා අත්යවශ්ය වේ.
බලයේ සිටින අයට සහ සාමාන්ය පුරවැසියන්ට එකම නීතියක් යන ප්රතිපත්තිය ප්රායෝගිකව තහවුරු වූ විට පමණක් රටක ප්රජාතන්ත්රවාදය සහ ජාත්යන්තර වටිනාකම පිළිබඳ ජනතාවගේ විශ්වාසය ශක්තිමත් වනු ඇත.
මේ සියල්ලටම හොඳ උදාහරණයක් නම්,
මෑතකදී තීරණය කරන ලද නඩුව SC/FR 275/2024 අනුව:
කොළඹ 07, භෞදාලෝක මාවතේ, අංක 408 හි පදිංචි අබ්දුල් හමීඩ් මොහොමඩ් බූසි, මම, ආපදා කළමනාකරණ මධ්යස්ථානයේ රාජකාරී අතරතුර රජයේ සාමාන්ය කොටසට අයත් අංක WP KI-4666 දරන 'Toyota Land Cruiser' වාහනය පෞද්ගලික පරිහරණය සම්බන්ධයෙන්,
ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ ගෞරවනීය මහජනතාවගෙන් ප්රසිද්ධියේ සමාව අයැදීමට කැමති බවත් මින් ඉදිරියට මෙවැනි ක්රියා සිදු නොවන බවට සහතිකයක් ලබා දෙන බවත් සඳහන් කර තිබුණා.
පසුගිය කාලයේ රජයේ වාහන සහ රජයේ දේපළ අවභාවිතය පිළිබඳ විවිධ චෝදනා මධ්යයේ අධිකරණ තීන්දුව හරහා මෙවැනි ප්රසිද්ධියේ සමාව අයැදීම රටේ නීතිය සැමට සමාන බවත් දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව නීතියේ ආධිපත්යය ස්වාධීනව ක්රියාත්මක වන බවත් පෙන්නුම් කරන සිදුවීමක් ලෙස නිරීක්ෂකයා පෙන්වා දෙයි.
මෙය කුඩා උදාහරණයක් පමණි. මෙවැනි චෝදනා සහ බලය අයුතු ලෙස භාවිත කිරීම පිළිබඳ අසංඛ්යාත සිද්ධීන් රටේ සෑම දිස්ත්රික්කයකම හා බලප්රදේශයකම අවසන් වී ඇත.
ජාතික ජන බලය රජය යටතේ "නීතිය සැමට සමාන" බව නැවත වරක් ඔප්පු කර ඇත. ජනතාවගේ බදු මුදලින් ලැබෙන රුපියලක්වත් නැවත ජනතාව අතරට යා යුතුයි. දැනට මෙහි ක්රියාත්මක වන්නේ දේශපාලන ඇඟිලි ගැසීම්වලින් තොර ස්වාධීන නීතියේ පාලනයකි.
විරුද්ධ පක්ෂ බිය වන්නේ මෙයයි. අතීතයේ සිටි දූෂිත ආත්මාර්ථකාමී දේශපාලන නායකයන් මේ නව දේශපාලන සංස්කෘතිය වෙනස් කිරීමට උත්සාහ කරනවා. මේ හේතුව නිසා නැවතත් ආගමික හා වාර්ගික අදහස් ජනතාව අතරට පටවා ජාතික ජන බල ආණ්ඩුව ජනතා මනසින් ඈත් කළ හැකි යැයි ඔවුහු සිතති.
මෙම වෙනස්කම් සමහර විරුද්ධ පක්ෂවලට දේශපාලනික වශයෙන් අභියෝගාත්මක ලෙස පෙනෙන්නේ ඇයි? දශක ගණනාවක් තිස්සේ බලය පාවිච්චි කිරීමට පුරුදු වී සිටින දේශපාලන කණ්ඩායම්වලට, වගවීම, විනිවිදභාවය, ස්වාධීන පරීක්ෂණ වැනි ප්රතිපත්ති නිසා තම අනාගත දේශපාලන බලපෑම හීන වේ යැයි බියක් ඇති විය හැකිය.
විශේෂයෙන්ම පැරණි දේශපාලන භාවිතයන් පිළිබඳ චෝදනා නීත්යානුකූලව විමර්ශනය කරන විට ඒවා දේශපාලන පළිගැනීම් ලෙස හුවා දක්වමින් මහජන අවධානය වෙනතකට යොමු කිරීමට උත්සාහ දරා ඇත. කෙසේ වෙතත්, සෑම විරුද්ධ පක්ෂයකම විවේචන එකම ආකාරයකින් බැලිය නොහැක.
රජය විවේචනය කිරීම සහ එහි වැරදි පෙන්වා දීම ප්රජාතන්ත්රවාදයේ වැදගත් අංගයන්ය. නමුත් මිනිසුන් අතර භීතියක් සහ භේදයක් ඇති කිරීම සඳහා සැබෑ සාක්ෂි සහ දේශපාලන ප්රචාර මත පදනම් වූ විවේචන අතර පැහැදිලි වෙනසක් ජනතාව විසින් හඳුනාගත යුතුය.
අද පවතින දේශපාලන වාතාවරණය තුළ සඳහන් කළ යුතු වැදගත් කරුණක් වන්නේ දේශපාලන වශයෙන් ශක්තිමත් කරගත නොහැකි ඇතැම් බලවේග නැවතත් කුලවාදය සහ කල්ලිවාදය දේශපාලන අවියක් කර ගැනීමට උත්සාහ කළ හැකි බවයි. සිංහල ජනතාවගේ ආගමික හැඟීම්, දෙමළ ජනතාවගේ වාර්ගික අයිතිවාසිකම්, මුස්ලිම් ජනතාවගේ ආරක්ෂාව සහ අනන්යතාව දේශපාලන කේවල් කිරීමේ මෙවලම් බවට පත් කිරීම රටේ දිගුකාලීන ඒකීයභාවයට භයානකයි.
ජාතික ජනබල ආණ්ඩුවකට සහයෝගය දුර්වල කිරීමට එවැනි හැඟීම් අවුස්සන්නේ නම්, එහි බලපෑම ආණ්ඩුවකින් අවසන් නොවේ; සාමාන්ය ජනතාව අතර විශ්වාසය හා සමගියට බලපායි. එමෙන්ම වාර්ගික සහ ආගම් භේදයන් අභිබවා තම ප්රතිපත්ති තුළින් සැමට සමාන ආරක්ෂාවක් සහ යුක්තියක් ලබාදීමට රජය කැපවී සිටිය යුතුය.
මිනිසුන්ගේ ජීවනෝපාය, රැකියා, අධ්යාපනය, සෞඛ්ය සහ ආර්ථික සහන ප්රායෝගිකව වැඩිදියුණු කිරීම ඕනෑම දේශපාලන ව්යාපාරයකට ප්රබලම ප්රතිචාරයයි.
මේ අතර, සමහර සුළු ජාතික පක්ෂ නායකයින් මැතිවරණ ගණනය කිරීම්, බලය බෙදාගැනීමේ අපේක්ෂාවන් සහ තම පක්ෂයේ ආධාර පදනම ආරක්ෂා කර ගැනීමට උත්සාහ කිරීම ඇතුළු හේතු කිහිපයක් නිසා විපක්ෂය සමඟ එකතු වේ.
එහෙත් සුළුතර ජනතාවගේ සැබෑ ප්රශ්නවලට විසඳුම් සෙවීමට වඩා වාර්ගික හෝ නිකායවාදී දේශපාලනය ප්රවර්ධනය කරන කණ්ඩායම් සමඟ කටයුතු කිරීම සුළුතර ජනතාවගේ දිගුකාලීන අවශ්යතා ඉටු කරයිද යන ප්රශ්නය පැන නගී.
එහෙත් සුළුතර ජනතාවගේ සැබෑ ප්රශ්නවලට විසඳුම් සෙවීමට වඩා වාර්ගික හෝ නිකායවාදී දේශපාලනය ප්රවර්ධනය කරන කණ්ඩායම් සමඟ කටයුතු කිරීම සුළුතර ජනතාවගේ දිගුකාලීන අවශ්යතා ඉටු කරයිද යන ප්රශ්නය පැන නගී.
සුළු ජාතික නායකයින්ගේ මූලික වගකීම වන්නේ ඉඩම් අයිතිය, භාෂා අයිතිය, භෞමික සංවර්ධනය, රැකියා, ආරක්ෂාව සහ දෙමළ සහ මුස්ලිම් ජනතාවගේ දේශපාලන නියෝජනය වැනි කාරණා සම්බන්ධයෙන් ස්ථිර විසඳුම් ලබා ගැනීමයි.
ඒ සඳහා ඔවුන් තීරණය කළ යුත්තේ ජනතා අවශ්යතා මත ආණ්ඩුව සමඟ කටයුතු කරනවාද විපක්ෂයේ පක්ෂ සමඟ බලපෑම් කරනවාද යන්නයි. දේශපාලන සන්ධාන ප්රජාතන්ත්රවාදී අයිතියක් වුවද ඒවායේ සැබෑ ප්රතිඵල විනිශ්චය කිරීම ජනතාවට ඇති අයිතියකි.
විරුද්ධ පක්ෂ අනාගතයේ කටයුතු කරන ආකාරය ඔවුන්ගේ දේශපාලන ප්රවේශය මත රඳා පවතී. රජය විවේචනය කිරීම සහ විකල්ප ප්රතිපත්ති ඉදිරිපත් කිරීම, ආර්ථික ගැටලුවලට විසඳුම් ලබා දීම සහ ජනතාවගේ දෛනික ජීවිතය යහපත් කිරීමට ප්රායෝගික සැලසුම් ඉදිරිපත් කිරීම තුළින් විරුද්ධ පක්ෂවලට ප්රජාතන්ත්රවාදය තුළ තම ස්ථානය ශක්තිමත් කළ හැකිය.
ඊට පටහැනිව, පැරණි දේශපාලන ක්රම ආරක්ෂා කරමින් හෝ වාර්ගික හා ආගමික හැඟීම් අවුස්සමින් මහජන සහයෝගය දිනා ගැනීමට උත්සාහ කරන්නේ නම්, ඔවුන් කෙරෙහි ඇති විශ්වාසය තවදුරටත් ඛාදනය විය හැකිය.
ජාතික ජන බලවේගය රජය ද විවේචනවලින් නිදහස් නොවන අතර මැතිවරණ පොරොන්දු ඉටු කිරීම, දූෂණය තුරන් කිරීම ක්රියාත්මක කිරීම, පරිපාලන කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීම සහ සියලු ජනතාවට සමාන සේවාවන් සැපයීමේ සාර්ථකත්වය සනාථ කරයි.
ප්රජාතන්ත්රවාදී රටක ආණ්ඩුවේ අනාගතය තීරණය කරන්නේ ජනතාවයි. එම තීරණය මෙහෙයවිය යුත්තේ හැඟීම්වලින් නොව අත්දැකීම් සහ ප්රායෝගික ප්රතිවිපාක මගිනි.
අවසාන වශයෙන් ශ්රී ලංකාවට අද අවශ්යව ඇත්තේ සතුරන් නිර්මාණය කිරීමේ දේශපාලනය නොවේ; ජනතාවගේ ප්රශ්නවලට විසඳුම් නිර්මාණය කරන්නේ දේශපාලනයයි. තනතුර වරප්රසාදයක් නොව වගකීමකි. බලය උරුම වූ දේපළක් ද නොවේ; ජනතාව විශ්වාසය ලබා දෙන බව සියලු දේශපාලන නායකයන් පිළිගත යුතුයි.
ජාතික ජන බලය ආණ්ඩුවේ සැබෑ ශක්තිය රැඳී ඇත්තේ එහි දේශපාලන විරුද්ධවාදීන්ගේ දුර්වලතා තුළ නොව, එය ජන ජීවිතය තුළ ඇති කරන ධනාත්මක වෙනස්කම් තුළ ය.
නීතිය සැමට සමානය යන ප්රතිපත්තිය ප්රායෝගිකව තහවුරු වී දූෂණයෙන් තොර පාලනයක් නිර්මාණය වී සිංහල, දෙමළ, මුස්ලිම් ඇතුළු සියලු ජනතාවට සමානාත්මතාවයෙන් හා ගෞරවයෙන් ජීවත් විය හැකි පරිසරයක් ගොඩනැඟෙන්නේ නම් එය රජයක පමණක් නොව මුළු මහත් ශ්රී ලංකාවේම ජයග්රහණයකි.
කුල භේදයෙන් සහ කල්ලිවාදයෙන් ඔබ්බට යුක්තිය, සාධාරණත්වය සහ මනුෂ්යත්වය පදනම් කරගත් නව දේශපාලන සංස්කෘතියක් නිර්මාණය කිරීම රජයේ වගකීම පමණක් නොවේ; දේශපාලන පක්ෂ, මාධ්ය සහ සෑම පුරවැසියෙකුටම අයත් වේ.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් සඟරාව සඳහා,
30-10-2026
සිංහල පරිවර්තනය සමග)நீதித்துறை சுயாதீனமும் பொறுக்கூறலும்; இலங்கை அரசியல் சசூழலில் எழும் புதிய விவவாதங்கள்!
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 30, 2026
Rating:


கருத்துகள் இல்லை: