Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆசிய பசிபிக் பணச்சலவை தடுப்புக் குழுவினால் நடத்தப்படும்,பரஸ்பர மதிப்பீட்டின் ஆரம்பக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்.

ஆசிய பசிபிக் பணச்சலவை தடுப்புக் குழுவினால் நடத்தப்படும், பணச்சலவை எதிர்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல், ஆயுதப் பெருக்கத்திற்கு நிதியளித்தலைத் தடுத்தல் (AML/CFT/CPF) தொடர்பான இலங்கையின் மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டின் ஆரம்பக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஒரு நாட்டின் நிதி அமைப்பின் வலிமை, நிறுவப்பட்ட சட்டங்கள், நிறுவனங்களில் மட்டுமன்றி, நடைமுறையில் அவற்றின் செயற்றிறன், பொறுப்புக்கூறல், நேர்மைத்தன்மை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என வலியுறுத்தினார்.


நிதிசார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தப்பட வேண்டிய பகுதிகளை இனங்காணவும், சர்வதேச தரநிலைகளுடனான இணக்கப்பாட்டை வலுப்படுத்தவும் இலங்கையின் இந்த மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.


ஊழலும், அரசாங்க நிறுவனங்கள் மீதான, குறிப்பாக நிதி நிறுவனங்கள் மீதான, பொதுமக்களின் நம்பிக்கைச் சீர்குலைவும் பொருளாதார, அரசியல் உறுதிப்பாட்டுக்குக் கணிசமான சவால்களை ஏற்படுத்துகின்றன என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 


வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், வலுவான நிறுவன ஒருங்கிணைப்பு, பயனுள்ள சட்ட அமுலாக்கம் ஆகியவற்றின் மூலம் இச்சவால்களுக்குத் தீர்வு காண்பது, நிதி நேர்மையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் பொருளாதார மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கும் அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்தார்.


இலங்கையின் AML/CFT/CPF கட்டமைப்பை வலுப்படுத்தவும், புதிதாக உருவெடுக்கும் ஆபத்துகளுக்குத் தீர்வு காணவும், சர்வதேச பங்காளிகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும், மதிப்பீட்டுக் குழுவுடனும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் ஆக்கபூர்வமாக இணைந்து செயற்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.


இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நீதி, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், நிதிப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள், மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆசிய பசிபிக் பணச்சலவை தடுப்புக் குழுவினால் நடத்தப்படும்,பரஸ்பர மதிப்பீட்டின் ஆரம்பக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார். Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.