Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்: சைக்கிளோட்ட விளையாட்டுக்காக இடைக்கால மாற்றுக் குழு நியமனம்

 

சைக்கிளோட்ட விளையாட்டுக்குப் பொறுப்பான தேசிய விளையாட்டுச் சங்கத்தின் பதிவைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதுடன், இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இடைக்கால மாற்றுக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.


1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் திருத்தப்பட்ட 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாற்றுக் குழுவுக்கு, சைக்கிளோட்ட சம்மேளனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல், சம்மேளனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடிகள், ஊழல்கள் மற்றும் ஏனைய முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுதல், விளையாட்டுச் சட்டத்திற்கு அமைவான புதிய யாப்பொன்றைத் தயாரித்தல் மற்றும் தகைமை பெற்ற உறுப்பினர்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதிய யாப்பிற்கு அமைவாக விசேட பொதுச் சபைக் கூட்டம் மற்றும் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தி, புதிய நிர்வாகக் குழுவொன்றைத் தெரிவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் இக்குழுவின் பொறுப்பாகும்.

புதிய யாப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் 90 நாட்களுக்குள் புதிய aநிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கும் குறித்த உத்தரவுகள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்: சைக்கிளோட்ட விளையாட்டுக்காக இடைக்கால மாற்றுக் குழு நியமனம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 27, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.