Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கத்தாரில் வாழுகின்ற இலங்கையர்களின் நலன்; தூதுவருடன் CWF கத்தார் சந்திப்பு! කටාර්හි වෙසෙන ශ්‍රී ලාංකිකයන්ගේ සුබසාධනය; CWF කටාර් තානාපතිවරයා හමුවෙයි!


தோஹா: கத்தார் மண்ணில் வாழும் இலங்கை சமூகத்தின் நலனையும், அவசரத் தேவைகளில் அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதையும் தனது சமூகப் பணியின் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் CWF கத்தார், இலங்கைத் தூதரகத்துடனான தனது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய சந்திப்பொன்றை முன்னெடுத்துள்ளது.

2013ஆம் ஆண்டு முதல் கத்தாரில் வாழும் இலங்கை சமூகத்திற்காக பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் CWF கத்தார், கத்தார் நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்ட சமூக அமைப்பாக செயற்பட்டு வருகிறது. மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு, இனம், மதம், பிரதேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, தேவையின் போது மக்களுக்கு துணை நிற்பதே தமது பணியின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளதாக CWF கத்தார் தெரிவிக்கிறது.

ஜனாஸா மற்றும் இறுதிச்சடங்கு உதவிகள், இரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், சமூக நலன்புரி நடவடிக்கைகள், அவசரகால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் CWF கத்தார், கத்தாரில் வாழும் இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.


இந்நிலையில், 2026 ஒக்டோபர் 4ஆம் திகதி, CWF கத்தார் நிர்வாகக் குழு, கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் மாண்புமிகு திருமதி ரோஷன் சித்தாரா கான் அசார்ட் அவர்களை இலங்கைத் தூதரகத்தில் மரியாதையுடன் சந்தித்து, கத்தாரில் வாழும் இலங்கை சமூகத்தின் நலன் மற்றும் எதிர்கால சமூகப் பணிகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டது.

இச்சந்திப்பின்போது, கத்தாரில் இலங்கைப் பிரஜைகள் உயிரிழக்கும் துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பங்களில் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள், ஜனாஸா மற்றும் சடலங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடைமுறைகள், அவசரநேரங்களில் சமூக அமைப்புகள் வழங்கக்கூடிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டது.

அத்துடன், SLBFE பதிவுடன் தொடர்புடைய சிக்கல்கள், வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சில நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான விழிப்புணர்வின் அவசியம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

ஒரு சமூகத்தின் வலிமை அதன் பொருளாதார வளத்தில் மாத்திரமல்ல; அந்த சமூகத்தில் ஒருவர் துன்பப்படும் போது மற்றொருவர் அவருக்காக கைகொடுப்பதிலேயே அதன் உண்மையான மனிதநேயம் வெளிப்படுகிறது. அந்த வகையில், கத்தாரில் வாழும் இலங்கை மக்களிடையே பரஸ்பர அக்கறை, ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வை மேலும் வளர்ப்பதன் அவசியமும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, கத்தாரின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள், விசா மற்றும் குடியிருப்பு நடைமுறைகள், தொழில் மற்றும் சமூக வாழ்வுடன் தொடர்புடைய முக்கியமான சட்டப்பூர்வ விடயங்கள் குறித்து சமூக உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இளம் தலைமுறையினர் சட்ட விழிப்புணர்வுடன் பொறுப்பான முறையில் வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவது காலத்தின் தேவையாக இருப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதேபோன்று, கத்தாரில் வாழும் இலங்கை குடும்பங்கள் தமது பிள்ளைகளை இலங்கைப் பாடசாலையில் சேர்ப்பது தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்கள், கல்வி மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமது தாய்நாட்டுடனான பிணைப்பையும் கல்வி மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் பாதுகாப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் இரத்ததானப் பணிகள் போன்ற மனிதநேய நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. “நோய் வந்த பின்னர் சிகிச்சை பெறுவதைவிட, நோய் வருவதற்கு முன்னரே விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது” என்ற அடிப்படையில் சமூக சுகாதாரப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பு வெறுமனே ஒரு சந்திப்பாக அமைந்துவிடாமல், தூதரகமும் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கை சமூகத்தின் நலனுக்காக இன்னும் பல அர்த்தமுள்ள பணிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதாக அமைந்தது.


சந்திப்பு சுமுகமானதும், பயனுள்ளதுமான முறையில் நிறைவடைந்ததுடன், கத்தாரில் வாழும் இலங்கை மக்களின் நலன், பாதுகாப்பு மற்றும் அவசரத் தேவைகளில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காக இலங்கைத் தூதரகத்துடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, தனது சமூகப் பணிகளை எதிர்காலத்திலும் அர்ப்பணிப்புடன் தொடர்வதற்கு CWF கத்தார் உறுதிபூண்டுள்ளது.

“மனிதநேயம் இருக்கும் இடத்தில் எல்லைகள் இல்லை;
ஒற்றுமை இருக்கும் இடத்தில் தடைகள் இல்லை;
ஒருவருக்கொருவர் துணை நிற்கும் சமூகமே உண்மையில் வலிமையான சமூகமாகும்.”

அந்த மனிதநேயப் பயணத்தில், கத்தாரில் வாழும் இலங்கை சமூகத்தின் நலனுக்காக CWF கத்தார் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கும் என அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அஹமட் இர்ஷாட்.
28-10-2026

The Executive Committee of the Sri Lankan Community Welfare Federation (CWF Qatar) paid a courtesy visit to H.E. Mrs. Roshan Sithara Khan Azard, Ambassador of Sri Lanka to the State of Qatar, at the Embassy of Sri Lanka in Doha on 4th of October 2026. The meeting aimed to strengthen cooperation and enhance humanitarian assistance and welfare initiatives for the Sri Lankan community residing in Qatar.*

During the meeting, particular attention was given to the practical challenges associated with JANAZA (funeral) arrangements, the difficulties faced by bereaved families in such circumstances, and the humanitarian assistance provided by CWF Qatar to support affected families during these challenging times.

The discussions also addressed several important matters concerning the welfare, safety, and well-being of the Sri Lankan community in Qatar, including workers’ welfare, legal awareness, education, healthcare, and long-term community development. The importance of strengthening cooperation and coordination between the Embassy of Sri Lanka and community organizations to address these challenges and improve community welfare services was also emphasized.

CWF Qatar, a community organisation registered with the Embassy of Sri Lanka, has been actively serving the Sri Lankan community in Qatar since 2013. The organization reaffirmed its longstanding commitment to providing humanitarian assistance, emergency support, and community welfare services to those in need, regardless of race, religion, or regional background.

The meeting concluded on a positive and constructive note, with CWF Qatar reaffirming its commitment to strengthening cooperation with the Embassy of Sri Lanka and continuing its dedicated efforts to support the welfare, safety, and emergency needs of Sri Lankans living in Qatar. H.E. Ms. Roshan Sithara Khan Azard, Ambassador of Sri Lanka to the State of Qatar, appreciated the services rendered by CWF Qatar to the community and provided valuable advice and guidance for its future initiatives.

ශ්‍රී ලාංකික ප්‍රජා සුබසාධන සම්මේලනය (CWF Qatar) හි විධායක කමිටුව, කටාර් රාජ්‍යයේ ශ්‍රී ලංකා තානාපතිනි ගරු රොෂාන් සිතාරා ඛාන් අzසාර්ඩ් (H/E ROSHAN SITHARA KHAN AZARD) මහත්මිය හමුවීම සඳහා 2026 ඔක්තෝබර් 4 වැනි දින දෝහාහි පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයට සුහද සංචාරයක නිරත විය. කටාර්හි වෙසෙන ශ්‍රී ලාංකික ප්‍රජාව වෙනුවෙන් සහයෝගීතාව ශක්තිමත් කිරීම, මානුෂීය ආධාර වැඩිදියුණු කිරීම සහ සුබසාධන වැඩසටහන් තවදුරටත් පුළුල් කිරීම මෙම හමුවේ ප්‍රධාන අරමුණු විය.*

මෙහිදී, ජනාසා සහ අවමංගල්‍ය කටයුතු සංවිධානය කිරීමේදී මතුවන ප්‍රායෝගික අභියෝග, එවැනි අවස්ථාවලදී ශෝකයට පත් පවුල් මුහුණ දෙන දුෂ්කරතා සහ එම පවුල්වලට සහාය වීම සඳහා CWF Qatar විසින් ලබාදෙන මානුෂීය ආධාර පිළිබඳව විශේෂ අවධානය යොමු කෙරිණි.

එමෙන්ම, කටාර්හි ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ සුබසාධනය, ආරක්ෂාව සහ යහපැවැත්ම සම්බන්ධයෙන් වැදගත් කරුණු රැසක් පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි. ඒ අතර සේවක සුබසාධනය, නීතිමය දැනුවත්භාවය, අධ්‍යාපනය, සෞඛ්‍ය සේවා සහ දිගුකාලීන ප්‍රජා සංවර්ධනය ඇතුළත් විය. මෙම අභියෝගවලට විසඳුම් සෙවීම සහ ප්‍රජා සුබසාධන සේවා වැඩිදියුණු කිරීම සඳහා ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය හා ප්‍රජා සංවිධාන අතර සහයෝගීතාව සහ සම්බන්ධීකරණය තවදුරටත් ශක්තිමත් කිරීමේ වැදගත්කමද අවධාරණය කෙරිණි.

CWF Qatar යනු ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයේ ලියාපදිංචි ප්‍රජා සංවිධානයක් වන අතර, 2013 වසරේ සිට කටාර්හි වෙසෙන ශ්‍රී ලාංකික ප්‍රජාව වෙනුවෙන් සක්‍රීයව සේවය කරමින් සිටී. ජාතිය, ආගම හෝ ප්‍රාදේශීය පසුබිම නොසලකා අවශ්‍යතාවයෙන් පෙළෙන සියලු දෙනාට මානුෂීය ආධාර, හදිසි සහාය සහ ප්‍රජා සුබසාධන සේවා සැපයීම සඳහා තම දිගුකාලීන කැපවීම සංවිධානය විසින් යළිත් තහවුරු කරන ලදී.

සුහදශීලී හා ඵලදායී අයුරින් පැවැති මෙම හමුව ධනාත්මක හා සාධනීය සටහනකින් අවසන් වූ අතර, කටාර්හි වෙසෙන ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ සුබසාධනය, ආරක්ෂාව සහ හදිසි අවශ්‍යතා වෙනුවෙන් අඛණ්ඩව කැපවී කටයුතු කිරීමටත්, ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සමඟ පවතින සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමටත් CWF Qatar යළිත් සිය කැපවීම තහවුරු කළේය. කටාර් රාජ්‍යයේ ශ්‍රී ලංකා තානාපතිනි ගරු රොෂාන් සිතාරා ඛාන් අසාඩ් මහත්මිය (H.E. Ms. Roshan Sithara Khan Azard), CWF Qatar විසින් ප්‍රජාව වෙනුවෙන් ඉටු කරනු ලබන සේවාවන් අගය කළ අතර, ඉදිරි කටයුතු සඳහා වටිනා උපදෙස් හා මඟපෙන්වීම් ද ලබා දුන්නාය.
கத்தாரில் வாழுகின்ற இலங்கையர்களின் நலன்; தூதுவருடன் CWF கத்தார் சந்திப்பு! කටාර්හි වෙසෙන ශ්‍රී ලාංකිකයන්ගේ සුබසාධනය; CWF කටාර් තානාපතිවරයා හමුවෙයි! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.