பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 16 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணிக்கு சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
அல் - குர்ஆன் ஆய்வுக்கான அஷ்ரப் அகடமியின் ஏற்பாட்டிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா நிகழ்வில் சிறப்பு உரையாற்றவுள்ளார்.
இதன்போது அழகிய தொனியில் அல் - குர்ஆன் என்ற தொனிப்பொருளில் அல் - குர்ஆன் முறத்தல்களும் கஸீதாக்களும் இடம்பெறவுள்ளன.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 13, 2018
Rating:

கருத்துகள் இல்லை: