காத்தான்குடி கர்பலா அல்-மனார் வித்தியாலயத்தில் திருடர்கள் அட்டகாசம்.
மட்டக்களப்பு மத்தி
கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி கர்பலா அல் மனார் வித்தியாலயத்தின் அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.பதுர்தீன் (நழீமி) தெரிவித்தார்.
அதிபர் மேலும் தெரிவிக்கையில் சனி, ஞாயிறு பாடசாலை விடுமுறை என்பதனால் திங்கட்கிழமை வழமை போன்று பாடசாலைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதனை அறிந்து கொண்டதாக அதிபர் தெரிவித்தார்.
களவாடப்பட்டுள்ள பொருட்களில் பெருமதியான
அம்புலி வயர் செட் , 5 ஸ்பீக்கர், கனணி , 2 KDK மின் விசிறி, 2 நீர்தாங்கி உட்பட மேலும் பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதனை அடுத்து காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற் கொண்டு வருவதாகவும் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.பதுர்தீன் (நழீமி) தெரிவித்தார்.
மேற்படி வித்தியாலம் மிகவும் பின்தங்கிய வறிய மாணவர்கள் கல்வி கற்று வரும் (Type III) பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி கர்பலா அல்-மனார் வித்தியாலயத்தில் திருடர்கள் அட்டகாசம்.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 20, 2018
Rating:

கருத்துகள் இல்லை: