மாவட்டங்கள் முழுவதும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு திட்டம்
இன்று முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு நோயின் தாக்கம் மற்றும் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்
மாவட்டங்கள் முழுவதும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு திட்டம்
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 26, 2018
Rating:

கருத்துகள் இல்லை: