காத்தான்குடி மண் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் போதை விடயமாகும். பாரிய சவாலிருந்து எதிர்கால சந்ததியினரை மீட்டெடுக்க வருமாறு காத்தான்குடி நகரசபை அழைப்பு
ஏ.எல்.டீன் பைரூஸ்
வேகமாக பரவி வரும் போதை பாவனையிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் உயரிய நோக்குடன் போதையற்ற காத்தான்குடி என்ற இலக்கை நோக்கி நகரும் காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் தலைமையிலான
நகரசபை உறுப்பினர்களின் முயற்சி பாராட்டத்தக்கது என புத்திஜீவிகள் தெரிவிப்பு.
காத்தான்குடியிலுள்ள துறை சார்ந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று காத்தான்குடியை போதையற்ற பிரதேசமாக மாற்றும் திட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக பெறுமதிமிக்க கலந்துரையாடல் ஒன்று (16.09.2018 ஞாயிறு) இரவு 08.30 முதல் 10.15 மணி வரை காத்தான்குடி அல்மனார் அர் ராசித் மண்டபத்தில் நகர முதல்வர் SHM.அஸ்பர் தலைமையில் இடம் பெற்றது.
காத்தான்குடியில் போதை விற்பனை மற்றும் போதை பாவனை தொடர்பிலான விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பன போன்ற விடயங்கள் விரிவாக பேசப்பட்டதுடன் முக்கியமான பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
இறுதியாக சில தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், சகலரையும் உள்ளடக்கியதாக ஒரு பலமான குழு ஒன்றினையமைத்து அக்குழுவின் ஊடாக எதிர்காலத்தில் போதை விடயத்தை கையாள்வது எனவும் காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் தெரிவித்தார்.
நிகழ்விற்காக குறிப்பட்ட 150 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் அதில் 140 பேர் கலந்து கொண்டமை எமது இலக்ககை அடைவதற்கான முதற்படி எனவும் நகர முதல்வர் தெரிவித்தார்.
நிகழ்விற்காக குறிப்பட்ட 150 பேர் அழைக்கப்பட்டிருந்த போதும் அதில் 140 பேர் கலந்து கொண்டமை எமது இலக்ககை அடைவதற்கான முதற்படி எனவும் நகர முதல்வர் தெரிவித்தார்.
காத்தான்குடி மண் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் போதை விடயமாகும். பாரிய சவாலிருந்து எதிர்கால சந்ததியினரை மீட்டெடுக்க வருமாறு காத்தான்குடி நகரசபை அழைப்பு
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 17, 2018
Rating:

கருத்துகள் இல்லை: