தாய் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த அஷ்ஷெய்க் அமீர் அஜ்வத் இன்று சட்ட முதுமாணிப் (LL.M) பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.
ஏ.எல்.டீன் பைரூஸ்
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைப் பிரதிநிதியாக கடமையாற்றினார். ஐ.நா. சபையின் மனித உரிமை மன்றத்தின் பிரதித் தலைமையை (Vice-President) இலங்கை வகித்த போதுஇ ஐ. நா. மனித உரிமை மன்றத்தில் பல உரைகளை ஆற்றி உள்ளார். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை மன்றம் ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் பொறிமுறைக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் ஆசிய பிராந்திய நாடுகளின் (Asian Group) மனித உரிமை விவகாரத்துக்குப் பொறுப்பான இராஜதந்திரிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் அவர்களின் பேச்சாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய மாநாடுகளில் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்தியுள்ள இவர், சவூதி அரேபியா, சுவிஸ்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கையின் இராஜதந்திரியாகப் பணியாற்றியுள்ளார். அண்மையில் இலங்கை வெளி விவகார அமைச்சில் கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக இவர் பணியாற்றி பல வெளிநாட்டு இராஜரீதியான விஜயங்களை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.ஜாமியா நழீமிய்யாவின் பட்டதாரியான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டமும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமாணிப் பட்டமும் பெற்றுள்ள இவர் உயர் நீதிமன்ற சட்டத்தரணியுமாவார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் இளைஞர் இதயம்’ என்ற சஞ்சிகை நிகழ்ச்சியை நீண்டகாலம் நடாத்தி வந்த இவர் 1988 ஆம் ஆண்டில் சிறந்த பேச்சாளர் மற்றும் கட்டுரையாளருக்கான ஜனாதிபதி “இளைஞர் விருது”
இவருக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தாய் மண்ணுக்கு பெருமை தேடித்தந்த அஷ்ஷெய்க் அமீர் அஜ்வத் இன்று சட்ட முதுமாணிப் (LL.M) பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 14, 2018
Rating:

கருத்துகள் இல்லை: