வெளிநாட்டிலுள்ள இலங்கையர் வாக்களிப்பதற்கு உதவ 45 நாடுகள் தயார்
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் தேர்தலில் வாக்களிப்பதற்கான செய்து கொடுப்பதற்கு 45 நாடுகள் தயாராக இருப்பதாக இது தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விஷேட குழு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதாக குழுவின் அங்கத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு முடியாமல் போகலாம். ஆனால் பொதுத் தேர்தலில் இவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் மொத்த சனத்தொகையில் 10 வீதமான இலங்கையர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். நாட்டின் தேசிய வருமானத்தில் 35 வீதம் இவர்கள் பங்களிப்புச் செய்கிறார்கள். நாட்டின் தலைமையைத் தீர்மானிப்பதில் இவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.sor/mp
வெளிநாட்டிலுள்ள இலங்கையர் வாக்களிப்பதற்கு உதவ 45 நாடுகள் தயார்
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 06, 2019
Rating:

கருத்துகள் இல்லை: