04 மணிக்கு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரவி உள்ளிட்டோருக்கு உத்தரவு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று மாலை 04 மணிக்கு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேலுமொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.இதற்கமைய குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்று மாலை 04மணிக்கு முதல் மேன்முறையீட்டு நீதிமன்த்தில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கடந்த 06ம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் இதுவரை கைது செய்யப்பட்டது ஒரே ஒரு சந்தேகநபர் மாத்திரமே.
ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்காக ரகசிய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் அவரது இல்லத்திற்கு சென்றிருந்த போதும் அவரை கைது செய்வதற்கு இயலவில்லை.lnw
04 மணிக்கு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரவி உள்ளிட்டோருக்கு உத்தரவு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 13, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 13, 2020
Rating:
கருத்துகள் இல்லை: