45 மத்திய நிலையங்களில் 3458 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 15000 பேர் சுய தனிமைப்படுத்தலில்
தற்பொழுது 45 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3458 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களுள் 31 பேர் 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் என்று ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை இந்நாட்டுக்கு வருகை தந்த சுமார் 15ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளாகாணப்பட்டோரில் 32 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் நாட்டின் பிற பகுதிகளில் அடையாளம்காணப்பட்டுள்ளனர்
இதேவேளை தற்போது கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 06 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரும், குருணாகல் , காலி, கேகாலை , மட்டக்களப்பு, பதுளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றில் தலா 01 வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்பொழுது கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.lnw

கருத்துகள் இல்லை: