சட்டத்தை மதிப்பதில் இளைஞர்கள் சிலர் தவறிவிடுகின்றனர்.
நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை மதிப்பதில் காத்தான்குடி இளைஞர்கள் சிலர் தவறி விடுகின்றனர் என காத்தான்குடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
நேற்று (21) சனிக்கிழமை மாலை ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதிகளுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொன்டிருந்தோம். சகல பகுதிகளிலும் ஆங்கங்கே பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்ததினைக் காணக்கூடியதாக இருந்தது.
சட்டம் அமுலிலுள்ள நேரங்களில் அனுமதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் பிரயாணம் மற்றும் கடமைகளுக்குச் சென்று வருவதனைக் அவதானிக்க முடிந்தது.
நேற்று (21) சனிக்கிழமை இரவு 8.30 மணி அளவில் காத்தான்குடியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவ வீரர்களை சந்தித்தோம். நாங்கள் ஊடகவியலாளர்கள் என்ற துமே அவர்கள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்தனர், குறிப்பாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நேரங்களில் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள்களில் வலம் வருவதும், சிலர் தலைகவசம் போடாது அதனை கைகளில் வைத்துக் கொண்டு பயணிப்பதும், அதேபோன்று துவிச்சக்கர வண்டிகளிலும் வலம் வருவதும், இராணுவம் மற்றும் பொலீஸார் ரோந்து நடவடிக்கைகளுக்காக வரும் போது பாதுகாப்பு தரப்பினரைக்கண்டு குறுக்கு வீதிகளினுள் ஓடி ஒழிந்து கொள்வதும், இன்னும் சிலர் மிக தொலைவில் நின்று கொண்டு நடனமாடுபவர்களாகவும் இருக்கின்றனர் என்று கவலையோடு தெரிவித்தனர்.
பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறியோர்கள் என்ற அடிப்படையில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த படையினர். பிடிபட்டிருந்தால் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
இது விடயமாக பொறுப்பு வாய்ந்தவர்களிடம் தெரிவிப்பது அவசியம் என்று படையினர் தெரிவித்த தற்கமைய நாம் அந்த இடத்தில் இருந்தவாறே காத்தான்குடி நகர முதல்வர் SHM.அஸ்பர் JP அவர்களுக்கு தொலைபேசி மூலம் லிடயங்களை தெரியப் படுத்தினோம்.
ஆகவே இவ்வாறான விடயங்கள் நடைபெறா திருக்க பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் நாட்டின் சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்குவது மாத்திரமின்றி இளைஞர்கள், சிறுவர்களை வீடுகளை விட்டு வெளியே செல்லாது பாதுகாத்துக் கொள்வதும் பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையுமாகும்..
ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்
சட்டத்தை மதிப்பதில் இளைஞர்கள் சிலர் தவறிவிடுகின்றனர்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 22, 2020
Rating:

கருத்துகள் இல்லை: