ஊரடங்கு உத்தரவிலும் திறக்கப்படும் மருந்தகம்
நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் மக்களின் தேவைக்காக மருந்தகங்கள் (Pharmacy) திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நோயாளர்களின் நோய் தொடர்பான அட்டை மருந்துச் சீட்டு என்பனவற்றை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதிகளில் அனுமதிப் பத்திரங்களாக பயன்படுத்த முடியும்.lnw
ஊரடங்கு உத்தரவிலும் திறக்கப்படும் மருந்தகம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 24, 2020
Rating:

கருத்துகள் இல்லை: