கொரோனாவிளிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பது எமது_கைகளிலையே உள்ளது.
கொரோனாவிளிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பது எமது_கைகளிலையே உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றுப் தெரிவித்தார்.
தற்போது உலகில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளது.
தேவையின்றி வெளியில் சுற்றுவதையும் கூட்டமாக ஒன்று சேர்வதையும் தேர்தல் காலமென்பதால் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இயன்றளவு குறைப்போம்.
குறைத்து வீட்டில் தங்கி இருந்தால் இந்த தொற்றை நாம் இலகுமாக தடுத்திடலாம்.
அதன்பின் இதை முழுமையாக கட்டுபடுத்தும் நடவடிக்கையை அரசாங்கமும் அரச அதிகாரிகளும் இலகுவாக மேற்கொள்வார்கள்.
எனவே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நாட்களில் அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்கி எமது சூழலை கொரோனாவில் இருந்து பாதுகாப்போம்.
அத்துடன் இந்த தொற்றை கட்டுப்படுத்த இரவு பகலாக தமது உயிரை பணயம் வைத்து தமது கடமைகளை முன்னெடுத்துவரும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் முப்படையினருக்கு எமது பங்களிப்பை வழங்குவதோடு அவர்களையும் எமது பிராத்தனையில் இணைத்துக் கொள்வோம்.
கொரோனாவிளிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பது எமது_கைகளிலையே உள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 20, 2020
Rating:

கருத்துகள் இல்லை: