ஊடக தர்மத்தை பேணி நடக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கடிதம்

M.F.M.சிப்லி
(பொறியியலாளர்)
முன்னாள் மாகாணசபை உறுப்பினர்(கிழக்கு மாகாணம்)
காத்தான்குடி
தயாரிப்பாளர்
சக்தி டீ.வி.
பத்தரமுல்ல
பன்னிபிட்டிய.
செய்தி தொடர்பான முறைப்பாடு
..............................................................
இன்று (01.04.2020 புதன்) பகல் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிய சக்தி மதிய நேரச்செய்தியில் கொரோனா வைரஸினால் தாக்கத்திற்குட்பட்ட பெண்ணொருவரை அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றுவது போன்ற ஒரு காட்சி ஒளிபரப்பப்பு செய்யப் பட்டிருந்தது.
குறிப்பாக இக்காட்சியில், நோயாளியினுடைய முகம் வெளிக்காட்டப் பட்டிருந்ததுடன் அவரது உடை, கலாச்சாரம் என்பனவும் அடையாளம் காணும் அளவிற்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் குறித்த நோயாளியையும் ஏனைய நோயாளர்களையும் உழவியல் ரீதியாக பாதிப்படையச் செய்யும் செயலாக மாறிவிடும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
கொரோனா தொற்று ஒர் ஆட்கொல்லி நோயென்பதால் எதிர்காலத்தில் நோயுற்றவர்கள் தங்களுக்கேற்பட்டிருக்கும் நோய் வெளியில் யாராவது அறிந்தால் ஊடகங்களில் தாங்கள் காட்சிப்படுத்தப் படலாம் அல்லது விமர்சிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தங்களது நோயை வெளிக்காட்டாமல் மறைத்துக்கொண்டு மற்றவர்களுக்கும் தொற்றினை ஏற்படுத்தி பாரிய விழைவுகளை ஏற்படுத்துவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் வாய்ப்பளிக்கலாம்.
உண்மையில் வைத்தியத் துறையிலோ அல்லது ஊடகத்துறையிலோ இவ்வாறான செயற்பாடுகள் அனுமதிக்க முடியாத விடயமாக இருக்கயில்
சக்தி தொலைக்காட்சியில் இவ்வாறான ஓர் காட்சி ஒளிபரப்பப்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
ஆகவே, இவ்வாறான விடயங்களை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யும்போது ஊடக தர்மத்தை பேணியும் பொதுமக்களின் மனோநிலையை அறிந்தும் செயற்படுவது மிக அவசியமானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நன்றி.
இப்படிக்கு
பொறியியலாளர்
M. சிப்லி பாறூக்
ஊடக தர்மத்தை பேணி நடக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கடிதம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 01, 2020
Rating:

கருத்துகள் இல்லை: