ஜனாதிபதி தலைமையில் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர் தினம்
போர் வெற்றியின் 11ஆவது ஆண்டை முன்னிட்டு உயிர்நீத்த இராணுவத்தினரை நினைவுகூரும் "தேசிய இராணுவ வீரர் நினைவுதின" நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் (19.05.2020 செவ்வாய்) மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு முன்னால் நடைபெறும் இதற்கான நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் அதிகளவுகூடும் வகையில் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி குறைந்தளவானோரின் பங்குபற்றலுடனேயே நடைபெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நிகழ்வில் உயிர்நீத்த இராணுவத்தினர் சார்பில் சுமார் 20 பேரே பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.
ரணவிரு சேவா அதிகார சபையே 11 ஆவது வருடமாகவும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வு அனைத்து தொலைக்காட்சிகளிலும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.sor.k
ஜனாதிபதி தலைமையில் 19 ஆம் திகதி தேசிய இராணுவ வீரர் தினம்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 18, 2020
Rating:

கருத்துகள் இல்லை: