Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொரோனாவிற்கு பரிதாபமாகப் பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!


பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.  பாகிஸ்தானில் இதுவரை கொரோனா வைரஸால் 100ற்க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.

1988 இல் தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ், கொரோனா வைரஸ் தொற்றால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 50 வயது சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆவார்.இடக்கை ஆட்டக்காரரான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994 இல் ஓய்வு பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார். இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.sor.nl
கொரோனாவிற்கு பரிதாபமாகப் பலியான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!! Reviewed by www.lankanvoice.lk on மே 18, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.