சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!
சிகை அலங்கரிப்பு நிலையங்கள், மற்றும் அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.அந்த நிலையில், சுகாதார துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி அறிவுறுத்தியுள்ளார்.அத்துடன் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களின் சேவைகள் தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊடாகக் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அழகுத் துறையினருடன் கலந்துரையாடியபோது துறை வல்லுநர்கள் கோரியதற்கு இணங்க , சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன் நிலையங்களிற்கு வருகை தருபவர்களுக்கு, குறிப்பாக சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்கவேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி அறிவுறுத்தியுள்ளார்.lnw
சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!!
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:

கருத்துகள் இல்லை: