ஊரடங்குச் சட்டம் காரணமாக வன்னி மாவட்டத்தில் நிர்க்கதியானோர் தத்தமது சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை.
ஊரடங்குச் சட்டம் காரணமாக வன்னி மாவட்டத்தில் நிர்க்கதியானோர் தத்தமது சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை. பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த அனுமதி வழங்கப்பட்டது
நாடெங்கிலும் அசாதாரண நிலையைத் தொற்றுவித்த கொடிய தொற்று நோயான
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட காலவரையின்றிய தொடர் ஊரடங்குச் சட்டம் காரணமாக மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நிர்க்கதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு திருப்பியனுப்ப உரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவி செய்யுமாறு (04) பிரதமருடான சந்திப்பின் பொழுது முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் விடுத்த கோரிக்கைக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
அதன்படி மேற்படி தங்கியிருப்பவர்கள் குறித்த கிராமசேவகர்களுடன் தொடர்பு கொண்டு உரிய பத்திரங்களை பூர்த்தி செய்து குறித்த பிரதேசச் செயலாளரின் அனுமதி கடிதத்துடன் மருத்துவ சான்றிதழ்களைப் பெற்று உரிய இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகப்பிரிவு.
ஊரடங்குச் சட்டம் காரணமாக வன்னி மாவட்டத்தில் நிர்க்கதியானோர் தத்தமது சொந்த ஊர்களுக்கு செல்ல நடவடிக்கை.
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:

கருத்துகள் இல்லை: