ஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் "தனியாக சந்தித்துப் பேச நேரம்" தராத பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்?........
பிரதமர் மகிந்த அலரி மாளிகைக்கு அழைத்தார்; போனோம்.
போனீர்கள்; என்னதான் நடந்தது? என்னதான் பேசினீர்கள்?
கேள்விக்கு பதிலில்லை.
"ஊமையன் கண்ட கனவு போல" - போனவர்களுக்கு ஏன் போனோம் என்றும் சொல்லத் தெரியவில்லை; என்ன நடந்தது என்றும் கூற முடியவில்லை.
பாட்டி தூங்க வைக்க சொன்ன கதை போல;
அம்மா உணவு ஊட்ட காட்டிய நிலவு போல;
தந்தை வேப்பையில் காட்டிய பேய் போல - அங்கு பிரதமர் பேசினார்; கேட்டுவிட்டு வந்தனர்.
👉🏿 முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில்; "தனியாக சந்தித்துப் பேச நேரம்" தருமாறு முஸ்லிம் தலைமைகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தும் - கொடுக்காத பிரதமர் மகிந்தவின் கூட்டத்திற்கு எதற்காக நாங்கள் போக வேண்டும்?
👉🏿 எங்கள் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தை விட - என்னதான் பெரிய விடயம் இருக்கிறது எங்களுக்கு அவரோடு பேச?
👉🏿 ஜனாசாக்கள் எரிக்கப்படதற்காக நாங்கள் அழுத கண்ணீரின் ஈரம் காயும் முன்னே; அவர்கள் அழைத்தால் ஓடிப்போய் காலடியில் விழுமளவு - ரோசம், சூடு, சொரணையற்ற சமூகமா நாங்கள்?
போனவர்களுக்கு;
பிரதமர் எங்களையும் அழைத்தார் என்ற பெருமையா?
நாங்களும் கட்சி என்ற அந்தஷ்தா?
முன் வரியில் அமர்ந்திருந்தோம் என்ற தம்பட்டமா?
அலறி மாளிகை போனோம் என்ற அலட்டலா; மிஞ்சியது?
பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான கோரிக்கையை திசைதிருப்பவே / மழுங்கடிக்கவே; இந்தக் கூட்டம் என்று தெரிந்தும் - போகாமல் விட்டு ஜனநாயக எதிர்ப்பைக் காட்டுவதற்கு கூட துப்பில்லாதவர்கள் போகட்டும் - முஸ்லிம் காங்கிரஸ் போகாது.
சரி போனவர்கள் எதை பேசி இருக்க வேண்டும்;
பிரதமர் ஐயா அவர்களே!
✔️முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியமை தவறு
✔️ஒரு முஸ்லிம் கூட அமைச்சரவையில் சேர்க்கப்படாமை தவறு
✔️விவாக விவாகரத்து சட்டத்தை நீக்க பிரேரணை சமர்ப்பித்தமை தவறு
✔️பாராளுமன்ற வெட்டுப்புள்ளியை 12.5% ஆக உயர்த்த முயற்சிக்கின்றமை தவறு
✔️பெரும்பான்மை விரும்பாத தீர்வை சிறுபான்மைக்கு வழங்க முடியாதென்ற நிலைப்பாடு தவறு
✔️பெரும்பான்மை விரும்பிய வண்ணமே முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற சிந்தனை தவறு
✔️ஒட்டு மொத்த மத்ரசாக்களையும் இழுத்து மூடும் கருத்து தவறு
✔️முஸ்லிம்களின் ஏற்றுமதி பொருளாதாரம் நசுக்கப்படுகின்றமை தவறு
✔️ஒரே ஒரு முஸ்லிம் GA (வவுனியா) பறிக்கப்பட்டமை தவறு
✔️ராகமை - மகர பள்ளிவாசலில் சிலை வைத்து - விடுதியும் அமைக்கப்பட்டமை தவறு
✔️கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தவறு
✔️முஸ்லிம்கள்தான் இந்த நாட்டிற்கு கொரோனாவை கொண்டு வந்ததை போன்ற மாயையை ஏற்படுத்தப்படுகின்றமை தவறு
✔️முஸ்லிம்கள்தான் ஊரடங்கை அதிகம் மீறும் தேசப்பற்றற்றவர்கள் என்பது தவறு
✔️கொரோனாவால் முஸ்லிம் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் - அக்கிராமத்தையே மூடுகின்றமை தவறு
✔️அரசினால் நியமிக்கப்பட்ட "கொரோனா நடவடிக்கை குழுவில்" ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படாமை தவறு
✔️தொடர்ச்சியாக முஸ்லிம் தலைமைகள் ஏதோ ஒரு வகையில் குறிவைக்கப்படுகின்றமை தவறு
✔️முஸ்லிம் பெரும்பான்மை கிராமங்களை Lockdown செய்யப்பட்ட நிலையில் தேர்தலை நடாத்த முயற்சிக்கின்றமை தவறு - என இவற்றை பேசி இருக்க வேண்டாமா?
இவை எல்லாவற்றையும் பேசாதுவிட்டாலும்;
ஒன்றிரண்டையாவது பேசி இருக்க கூடாதா?
பேசத்தான் முடியுமா?
பேசத்தான் விட்டிருப்பார்களா?
எதிர்த்துப் பேச தில்லுதான் இருக்கிறதா?
அட்ட வேஸ்ட்டு.
இதுக்கு வீட்டிலிருந்து 02 சூறாக்களை ஓதி இருந்தாலும்; நண்மையாவது கிடைத்திருக்கும்
அவர்களுக்கு தேவை பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை திசைதிருப்புவதே. அதை செய்யவே இந்தக் கூட்டமே தவிர; அங்கு வேறு எந்த நிகழ்ச்சி நிரலும் (Agenda) இருக்கவில்லை. இருந்ததாக அறியக்கிடைக்கவும் இல்லை.
இதற்கு துணை போக நாங்கள் தயாரில்லை!
பாரதியாரின் பாணியில்....
இது மோதி மிதிக்க முடியாவிடினும்;
முகத்தில் உமிழும் முஸ்லிம் காங்கிரஸ்
- ஏ.எல். தவம் -
ஜனாசாக்கள் எரிக்கப்பட்டது தொடர்பில் "தனியாக சந்தித்துப் பேச நேரம்" தராத பிரதமரின் கூட்டத்திற்கு; அப்படி ஏன் போக வேண்டும்?........
Reviewed by www.lankanvoice.lk
on
மே 05, 2020
Rating:

கருத்துகள் இல்லை: