தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளார்
எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பின் சதவீதத்தை மீளாய்வு செய்து, தேவை ஏற்படுமாயின், மேலதிக தினம் ஒன்றை வாக்களிப்பதற்காக வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும் என்று ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
அரச ஊழியர்களை தேர்தல் கடமைகளில் இணைந்து கொள்வது கட்டாயமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வர்களுக்கான வாக்களிப்பு தபால் மூல வாக்களிப்பை போன்று இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இவர்களுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
வாக்காளர்களின் இரகசிய வாக்களிப்பிற்கான உரிமை எந்த வகையிலும் நீக்கப்பட மாட்டாது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.sornlk
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளார்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 23, 2020
Rating:

கருத்துகள் இல்லை: