Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்களுக்காக விசேட அழைப்பு இலக்கங்கள்

பொலிஸாருக்கு பொதுமக்கள் இலகுவான முறையில் தகவல்களை வழங்குவதற்காக விசேட இலக்கங்கள் பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கம் என்பனவற்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

'1997' மற்றும் '1917' ஆகிய இரண்டு துரித அழைப்பு தொலைபேசி இலக்கங்கள், இலக்கங்களுடன் இணைந்த மின்னஞ்சல் முகவரிகள் இரண்டு மற்றும் ஒரு தொலைநகல் இலக்கம் என்பன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

போதைப் பொருள் கடத்தல்,

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சம்பவங்கள்,

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்,

பாரிய ஊழல்கள்,

புலமைச் சொத்து விவகாரங்கள்,

மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தெரிவிப்பதற்கு 1997 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமும் 1997Spolice.lk எனும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சட்டவிரோத வருமானம்,

வங்கிக் கணக்குகள், 

போதைப்பொருள் கடத்தல், 

மோசடிகள், 

திட்டமிடப்பட்ட குற்றங்கள்,
ஆகியவற்றின் மூலம் கொள்வனவு செய்யட்ட வாகனங்கள்,மற்றும் காணிகள் போன்ற சொத்துக்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்கு 1917 எனும் துரித அழைப்பு தொலைபேசி இலக்கமும் 1917Spolice.lk எனும் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிடப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் எழுத்து மூலமாக தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர்

தொலைநகல் இலக்கமான 011-2440440 யிற்கோ அல்லது பொலிஸ் மா அதிபர், பொலிஸ் தலைமையகம், கொழும்பு 01
எனும் முகவரிக்கோ தபால் மூலம் தெரிவிக்க முடியும்.

இதேவேளை, முறைப்பாடுகளை தெரிவிப்போரின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் எனவும் பொலிசார் உறுதியளித்துள்ளனர்.sor.lnw

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்களுக்காக விசேட அழைப்பு இலக்கங்கள் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 29, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.