Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது...? வீரர்களின் ஏலம்.....?? யாருக்கு எவ்வளவு விலை.......?

 


இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பங்கெடுக்கும் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 18) நடைபெறவுள்ளது.


இந்த முறை 1இ087 வீரர்கள் ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். இதில் 814 பேர் இந்திய வீரர்கள்இ 283 பேர் வெளிநாட்டு வீரர்கள்.


ஒரு வகையில் இதை ஒரு மினி ஏலமாக அழைக்கலாம். காரணம்இ பெரும்பாலான அணிகள் ஏற்கெனவே தங்களுடைய அணியில் இருக்கும் வீரர்களை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளன.



ஆனாலும்இ கிங்ஸ் ஓஐ பஞ்சாபும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் தங்களுடைய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களை நீக்கியுள்ளன. எனவே இந்த அணிகள் புதிய வீரர்களுடன் களமாடவுள்ளன.

இதில் 207 வீரர்கள் தாங்கள் சார்ந்த தேசிய அணிகளுக்காக விளையாடுகின்றனர். 863 வீரர்கள் முதல் தர ஆட்டங்களிலும் உள்ளூர் ஆட்டங்களிலும் ஆடியவர்கள். 27 வீரர்கள் நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சரி.. இனி ஐபிஎல் ஏலம் எப்படி நடக்கிறது என பார்ப்போம்?

ஐபிஎல் ஏலத்தில் எட்டு அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஏலத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்துகிறது.


2008ஆம் ஆண்டில் முதலாவது ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது முதல் இந்த ஏலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்கலாம். அதில் 8 வெளிநாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படலாம்.


ஏல நடைமுறை என்ன?


ஒவ்வொரு வீரருக்கும் பேஸ் பிரைஸ் எனப்படும் அடிப்படை விலை உள்ளது. அந்த அடிப்படை விலையில் இருந்து தொடங்கும் ஏலத்தில் அதிக விலையைக் கோரும் எந்தவொரு அணிக்கும் அந்த வீரர் தேர்வாவார்.


குறிப்பிட்ட வீரரை ஒன்றுக்கும் மேற்பட்ட அணிகள் வைத்திருக்க விரும்பும்போது ஏலம் தொடங்கி சூடுபிடிக்கிறது. அதிக ஏலத்தை எந்தவொரு அணி எடுக்கத் தவறுகிறதோஇ அந்த வீரர் ஏலத்தை எடுக்கும் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.


அதுவேஇ ஒரு வீரரை யாருமே ஏலத்தில் கேட்காவிட்டால்இ அவர் ஏலமெடுக்காதவர் பட்டியலில் சேருகிறார். எல்லா வீரர்களும் ஏலத்தில் எடுத்து முடிக்கப்பட்டவுடன் ஏலம் எடுக்கப்படாத வீரர்களின் பெயர்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இரண்டாவது சுற்றில் அவர்கள் அணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.


எவ்வளவு பணம் தேவை?


ஐபிஎல் ஆட்டத்தைப் பொறுத்துவரைஇ ஒரு அணியை உருவாக்க அதன் உரிமையாளர் ரூ. 80 கோடியை கொண்டிருக்க வேண்டும். இந்த ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் அந்த உரிமையாளர் அணிக்காக செலவிட வேண்டிய அவசியமில்லை. எனினும்இ 75 சதவீத தொகை அதாவது ரூ. 60 கோடி வரை அவர் செலவிட வேண்டும் என புதிய ஐபிஎல் விதிகள் கூறுகின்றன.


ஒரு முகவர் அல்லது உரிமையாளர் 80 கோடி ரூபாய் செலவிடலாம் என்றிருக்கும் நிலையில்இ சிஎஸ்கே ரூ. 79.85 கோடியை தனது வீரர்களின் ஊதியத்துக்காக செலவிட்டுஇ வெறும் 15 லட்சம் ரூபாயை மட்டுமே கையிருப்பாக வைத்தது.


ஒவ்வொரு முகவர் அணி உரிமையாளரும் தங்களுடைய வீரர்களின் செயல்திறனுக்கான உத்தியை கொண்டிருப்பார்கள். தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வீரர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை அந்த முகவர் விரும்புகிறார். இதன் மூலம் சரியான நேரத்தில் பணத்தை சேமிக்க வீரர்களின் ஒத்துழைப்பு அந்த முகவர் உரிமையாளருக்கு அவசியமாகிறது.


ஐபிஎல் ஏலத்தில் எவ்வளவு வீரர்கள் உள்ளனர்?


ஒரு ஐபிஎல் அணியில் மூன்று வகை வீரர்கள் உள்ளனர். இந்தியாவின் சார்பில் டெஸ்ட் போட்டிஇ ஒரு நாள் போட்டிஇ டி20 என ஏதாவதொரு முக்கிய ஆட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கேப்ட் இந்திய வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இதில் இடம்பெறாத சிறிய அளவிலான அல்லது பிராந்திய அளவிலான ஆட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அன்கேப்ட் வீரர்கள் ஆக அழைக்கப்படுகிறார்கள். இந்திய அணிக்காக இல்லாமல் சிறிய அளவிலான ஆட்டத்தில் விளையாடுபவர்கள் இந்த வகை பட்டியலில் வருவார்கள்.


இந்த இரு வகையைத் தவிர பிற இந்தியர் அல்லாத வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் பட்டியலுக்குள் வருவார்கள்.


இதேபோல 19 வயதுக்கு குறைவான அண்டர் 19 வீரர்கள்இ முதல் தர கிரிக்கெட்டில் பங்கெடுக்காதவரைஇ அன்கேப்ட் பிரிவில் இடம்பெறுவார்கள்.


இந்த மூன்று வகை வீரர்களுக்கு இடையே மற்ற வித்தியாசம் பெரிதாக கிடையாது. ஒரே வேறுபாடுஇ எந்தவொரு ஐபிஎல் அணியாக இருந்தாலும்இ அது 8 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.


ஏலத்தில் எவ்வளவு வீரர்கள் பட்டியலிடப்படுவார்கள்?

இதில் வீரர்களின் எண்ணிக்கை என்பது அணிக்கு அணி மாறுபடும். இந்த எண்ணிக்கை கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்று ஏலத்தில் இடம்பெற விருப்பம் தெரிவிக்கும் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும்.


இந்த வீரர்களை பரிசீலிக்க பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உதாரணத்துக்கு அவர்களின் விக்கெட் கீப்பர் திறன்இ பெளலிங் திறன்இ பேட்டிங் திறன் போன்றவை அடிப்படையில் வீரர்கள் ஏலத்துக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

அது சரி... பேஸ் பிரைஸ் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

அடிப்படை விலை என்பது ஏலத்துக்கு முன்பாக நிர்ணயிக்கப்படும் தொகை. அந்த அடிப்படை விலையில் இருந்தே ஏலம் கேட்பு ஆரம்பமாகும். அந்த விலைக்கு குறைவாக எந்தவொரு வீரரையும் ஏலத்தில் வாங்க முடியாது.


வீரர்களுக்கான அடிப்படை விலையை நிர்ணயிப்பது பிசிசிஐ. ஆனால்இ சில தருணத்தில் வீரர்களே கூட தங்களுக்கான அடிப்படை விலையை நிர்ணயிக்கலாம். அந்த தொகை ரூ. 10 லட்சத்துக்கு குறைவானதாகவும் ரூ. 2 கோடிக்கு அதிகமானதாகவும் இருக்கக்கூடாது.


கேப்ட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் எப்போதும் தங்களுடைய அடிப்படை விலையை அதிகமாகவே நிர்ணயித்துக் கொண்டிருப்பார்கள். அன்கேப்ட் வீரர்கள்இ குறைந்தபட்ச அடிப்படை விலையை நிர்ணயித்துக் கொண்டிருப்பார்கள்.


இந்த விலையை நிர்ணயிக்கும்போதுஇ வீரர்கள் தங்களுடைய விளையாட்டு திறமை தொடர்பான வரலாறுஇ சமூக ஊடக பின்தொடரல்கள் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் ஏல தொகை குறைவாகவோ அதிகமாகவோ ஆகி விட்டாலும் அது அவர்களுக்கு பாதகமாக அமையலாம்.


வெளிநாட்டு வீரர்கள் சேராவிட்டால் என்னாகும்?

பொதுவாக 25 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் 17 பேர் இந்தியர்களாகவும் 8 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பார்கள். சில நேரத்தில் வெளிநாட்டு வீரர்கள் இல்லாத சூழலும் எழலாம். ஆனால்இ வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் பல சவாலான ஆட்டங்களில் பங்கெடுத்திருப்பார்கள் என்பதால் அவர்கள் தங்களுடைய அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அணி உரிமையாளர்கள் கருதுவார்கள். அதனால்இ இயன்றவரை வெளிநாட்டு வீரர்களை அவர்கள் தங்களுடைய அணிக்காக ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டுவார்கள்.


8 வெளிநாட்டு வீரரை ஏலத்தில் எடுத்தாலும் ஆட்டம் நடைபெறும் நாளில் 11 பேர் கொண்ட களத்தில் 4 வீரர்களை மட்டுமே அணியால் களமிறக்க வேண்டும் என்பது விதி.


ஏலத்தில் விடுபவர் யார்?

ஏல நடைமுறையை நிர்வகிப்பவரே ஏலத்தில் எடுப்பவர். ஏல நடைமுறை தொடங்கியதும் கிரிக்கெட் வீரரின் பெயரையும் அவருக்கான அடிப்படை விலையையும் அவர் அறிவிப்பார். ஏலத்தில் விடுபவரின் வேலைஇ அந்த நடைமுறை வெளிப்படையாகவும் சரியாகவும் விதிப்படி நடக்கிறதா என்பதை சரிபார்ப்பது.


ஏலத்தொகை கேட்பு முடிந்தவுடன்இ விற்கப்பட்டார் என அறிவிக்கும்வரை வீரரின் ஏல நடைமுறை இருக்கும்.


ஐபிஎல் ஏலத்தை நடத்தும் பணியை ரிச்சர்ட் மேட்லிதான் 10 ஆண்டுகளாக நிர்வகித்து வந்தார். 2018ஆம் ஆண்டில் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்த பிசிசிஐஇ பிரிட்டனின் ஹக் எட்மைட்ஸை அந்தப் பணிக்கு நியமித்தது. தன்னிச்சையான நவின் கலைஇ பாரம்பரிய கார்கள் மற்றும் அறத்தொண்டு அமைப்புக்கான ஏலம் கேட்கும் பணியில் வல்லுநராக ஹக் அறியப்பட்டு வருகிறார்.



இதுவரை நடந்த ஏலத்தில் யாருக்கு அதிக விலை?


ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வீரர்களின் விவரங்களை அறிவது சுவாரஸ்யமானது. அத்தகைய ஏலத்தொகைக்கு விற்கப்பட்ட வீரர்களின் பட்டியை இங்கே வழங்குகிறோம்.


2008 - தோனி (ரூ. 6 கோடி)


2009 - ஆன்ட்ரூ ஃபிளின்ட்டாஃப் மற்றும் கெவின் பீட்டர்சன் (ரூ. 7.35 மில்லியன்)


2010 - கிரண் பொல்லார்ட் மற்றும் ஷேன் பாண்ட் (ரூ. 3.4 மில்லியன்)


2011 - கெளதம் காம்பீர் (ரூ. 11.4 கோடி)


2012 - ரவீந்திரா ஜடேஜா (ரூ. 9.72 கோடி)


2013 - கிளென் மேக்ஸ்வெல் (ரூ. 53 மில்லியன்)


2014 - யுவராஜ் சிங் (ரூ. 14 கோடி)


2015 - யுவராஜ் சிங் (ரூ. 16 கோடி)


2016 - ஷேன் வாட்சன் (ரூ. 9.5 கோடி)


2017 - பென் ஸ்டோக்ஸ் (ரூ. 14.5 கோடி)


2018 - பென் ஸ்டோக்ஸ் (ரூ. 12.50 கோடி)


2019 - ஜெயதேவ் உனாட்கத் மற்றும் வருண் சக்ரவர்த்தி (ரூ. 8.4 கோடி)


2020 - பேட் கம்மின்ஸ் (ரூ. 1.5 கோடி)

பி.பி.சி.தமிழ்

ஐபிஎல் 2021: எப்படி நடக்கிறது...? வீரர்களின் ஏலம்.....?? யாருக்கு எவ்வளவு விலை.......? Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 18, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.