சர்வதேச விமான நிலையத்திற்கு விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுப்பதற்கான விசேட சலுகை ஏற்பாடுகள்
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுப்பதற்கான விசேட சலுகை ஏற்பாடுகள்.
சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட நேர அட்டவணைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச வாடகை விமானப் பயண நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் இறக்கம் மற்றும் விமானங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலிருந்து விடுவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த சலுகைக் காலத்தை மேலும் 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 திகதி வரை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச விமான நிலையத்திற்கு விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுப்பதற்கான விசேட சலுகை ஏற்பாடுகள்
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 19, 2021
Rating:

கருத்துகள் இல்லை: