விமல் அணியினர் தானாக விலகும் முன்பே விரட்டி அடிக்கப்படுவர் - உதயங்க வீரதுங்க எச்சரிக்கை!
அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்கும் விமல் வீரவன்சவின் அணியினரை அவர்களாக விலகுவதற்கு முன்னர் விரட்டி அடிக்கப்படுவர் என ராஜபக்ஷ குடும்பத்தின் முக்கியஸ்தரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூலில் விமல் அணியை எழும்புத் துண்டுக்கு அழையும் விலங்கிற்கு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்
.
ஆப்பிரிக்க காட்டில் உள்ள ஹைனா என்ற விலங்கு சிங்கத்திற்கு பின்னால் சென்று சிங்கம் வேட்டையாடி முடித்த பின் இருக்கும் மிச்சத்தை உண்ணும் விலங்கு எனவும் ஆனால் தான் வேட்டையாடி உண்பதாக அதற்கு நினைப்பு எனவும் ஒருநாள் சிங்கம் இந்த ஹைனாவையும் வேட்டையாடி உண்ணும் எனவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.
அத்துடன் அரசாங்கத்திற்குள் இருந்து சுவர் உடைத்துக் கொண்டு வௌியில் சென்று ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்களை அரசாங்கம் முன்கூட்டியே விரட்டி அடிக்கும் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். Sor/lnw
விமல் அணியினர் தானாக விலகும் முன்பே விரட்டி அடிக்கப்படுவர் - உதயங்க வீரதுங்க எச்சரிக்கை!
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: