டோக்கியோ ஒலிம்பிக்: ஜப்பானில் திடீர் அவசரநிலை - பார்வையாளர்களுக்கு தடை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 12-ஆம் தேதியன்று தொடங்கும் இந்த அவசரநிலை ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.
இந்தத் தேதிகளில் உணவகங்களிலும் மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்த கடினமான முடிவை எடுக்க அரசு அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். bbc

கருத்துகள் இல்லை: