மக்பூல் (மாஸ்டர்) அவர்களின் மறைவு கட்சிக்கும் சமூகத்திற்கும், குறிப்பாக வடபுல நல்நெஞ்சங்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் ரவூப் ஹக்கீம்
வன்னி பெருநிலப் பரப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து அரும் பணியாற்றிய நண்பர் மக்பூல் அவர்களின் மறைவு குறித்து பெரிதும் கவலையடைவதோடு, அல்லாஹ் அன்னாருக்கு மேலான ஜென்னதுல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவன பாக்கியத்தை வழங்கியருள்வானாக என்றும் பிரார்த்திக்கிறேன்.
கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் தனது மண்ணின் மைந்தன் மர்ஹூம் நூர்தீன் மஷுர் ஆகியோருக்கும், எனக்கும், கட்சிப் போராளிகளுக்கும் பக்கபலமாக இருந்து சமூக மேம்பாட்டிற்கு பாரிய பங்களிப்பைச் செய்த அவரை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், தேர்தல் காலமென்று வந்துவிட்டால், களத்தில் இறங்கி கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மன்னார் மாவட்டத்தில் தாராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், எருக்கலம்பிட்டி மக்கள் உட்பட, அந்த மாவட்டத்தின் ஏனைய கிராமத்தவர்களுடனும், வன்னியின் ஏனைய மாவட்டங்களானவவுனியா, முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனும், தில்லையடியில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு கிராம மக்களுடனும் அவர் நெருங்கிப் பழகினார்.
நண்பர் மக்பூல் (மாஸ்டர்) அவர்களின் மறைவு
எமது கட்சிக்கும் சமூகத்திற்கும், குறிப்பாக வடபுல நல்நெஞ்சங்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ரவூப் ஹக்கீம், பா.உ
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மக்பூல் (மாஸ்டர்) அவர்களின் மறைவு கட்சிக்கும் சமூகத்திற்கும், குறிப்பாக வடபுல நல்நெஞ்சங்களுக்கும் ஒரு பேரிழப்பாகும் ரவூப் ஹக்கீம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 20, 2021
Rating:

கருத்துகள் இல்லை: