கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு...
அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர்....
புனிதமான ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும், எனது உடன் பிறப்புக்களுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்.
புனிதமான தியாகத்தை நமக்கு உணர்த்துகின்ற இந்த புனிதமான ஹஜ்ஜூப் பெருநாளில் பல்வேறுபட்ட தியாகங்களை அனுபவித்த நிலையிலேயே கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நமது பிரதேசமும், முழுநாடும், முழு உலகமும் (covid19) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு இன்று சற்று விடுவிக்கப்பட்ட நிலையிலேயே நாம் இந்த பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
நமது மார்க்கக் கடமைகளை பள்ளிவாயலுக்குச் சென்று செய்ய முடியாதிருந்த நிலையிலேயே இன்று
மீன்டும் பள்ளிவாயல்கள் திறக்கப்பட்ட நிலையிலேயே நாம் இந்த பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ்
பல சகோதரிகள், பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையோடு, கஷ்டத்தோடு இந்த பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நமது பொருளாதாரத்தை
அதிகளவு செலவு செய்ய வேண்டும் பசியோடு, பட்டினியோடு, வறுமையோடு இருக்கின்ற அந்த குடும்பங்களுக்கு எங்களால் முடிந்தளவு உதவிகளைச் செய்ய வேண்டும் பசியை போக்க வேண்டும் அவர்களுக்காக பிராத்திக்க வேண்டும்.
மீண்டும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டும், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நமக்கு மத்தியில் இருக்கின்ற இந்த கொடிய கொரோனா நோயிலிருந்து இந்த நாடு மீளப்பெற வேண்டும், நமது மண் பாதுகாக்கப்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போமாக....
புனிதமான இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எல்லோருக்கும் சந்தோஷமாக நிறைவு பெற வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகவும் கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் கலாநிதி MLAM.ஹிஸ்புல்லா
எமது lankanvoice செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகான முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 20, 2021
Rating:

கருத்துகள் இல்லை: