ஹிஷாலியின் விவகாரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் - இம்ரான் மஹ்ரூப்
சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இவ்விடயத்தில் அரசியல் நோக்குடன் செயற்படுவது முற்றிலும் தவறாகும். இப்பிரச்சினையை இனப்பிரச்சினை என இரு சமூகமும் கருத வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறுமி ஹிஷாலினியின் மரணம் விவகாரம் அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு நீதி வேண்டும். என்று வீதிக்கிறங்குவது . அநாவசியமானது. முறையான விசாரணைகள் இடம் பெறுமாயின் போராட வேண்டிய தேவை கிடையாது.
ஆகவே சிறுமியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளின் பிரகாரம் குற்றவாளி என நீதிமன்றினால் நிரூபிக்கப்படுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கபட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஹிஷாலியின் விவகாரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூகத்திற்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள் - இம்ரான் மஹ்ரூப்
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 05, 2021
Rating:

கருத்துகள் இல்லை: