அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
”மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர் குழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றதும் தடுப்பூசி திட்டம் ஆரம்பமாகும்.
அத்துடன் விசேட தேவையுடைய மற்றும் நோயினால் பீடிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை கிடைத்துள்ளது. அடுத்தவாரம் முதல் அதற்கான திட்டம் ஆரம்பமாகும்.” – எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2021
Rating:

கருத்துகள் இல்லை: