தென்னாப்பிரிக்கா அணி வெற்றி
சுற்றுலா தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று (12) இந்தப்போட்டி நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 18 ஓவர்களில் அனைத்து டுக்களையும் இழந்து 103 ஓட்டங்கள் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா மற்றும் பானுக ராஜபக்ச முறையே 30 மற்றும் 20 ஓட்டங்கள் எடுத்தனர்.
ஷம்சி 03 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ரம் 03 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தென்னாபிரிக்காவுக்கு 120 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணி நல்ல தொடக்கத்தை பெற்று முதல் விக்கெட்டுக்கு 62 ஓட்டங்கள் சேர்த்தது.
9 வது ஓவரில், மழையால் ஆட்டம் தடைபட்டு, போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
போட்டியின் 14 வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து தங்கள் இலக்கை அடைந்தனர்.
குயின்டன் டி கோக் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்கள் எடுத்தார்.
அணியின் சார்பில் அதிகபடியாக க்வின்டன் டி கொக் 58 ஓட்டங்களைப் பெற்றார்.
3 போட்டிகளைக் கொண்ட இந்த இருபது 20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் தென் ஆபிரிக்க அணி கைப்பற்றியது.

கருத்துகள் இல்லை: