தேரரின் இனவாத கருத்துக்கு எதிராக முறைப்பாடு செய்தும் தேரர் மீது யாரும் எந்த நடவடிக்கையும எடுக்கப்போவதில்லை.
தேரர் மீது யாரும் எந்த நடவடிக்கையும எடுக்கப்போவதில்லை. என்றாலும் முறைப்பாட்டை பதிந்து வைப்பது மிக முக்கியம் தேரர் விடையத்தில் இதற்குமேல் எதுவுமே செய்ய முடியாது.
'ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்திலும் ஐ எஸ் சிந்தனை இருக்கலாம், எந்த வேளையிலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடலாம்' என்ற கருத்துப்பட நாட்டின் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பிரகடனம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லீம்கள்மீது ஏற்பட்டு வரும் நல்லெண்ணத்தையும் அடியோடு தகர்தெறிந்து எல்லா முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சந்தேகிக்க தூண்டும்படியான கருத்தை விதைத்த பொலீஸுக்கு பொறுப்பான அமைச்சருக்கு எதிராக எங்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.
அவர் பேசிய இடம் பாராளுமன்றம். சிறப்புரிமை கிடைக்குமிடமது.ஆனால் அவரின் கருத்தை பாராளுமன்றத்துக்குள்ளேயே கேள்விக்கு உள்ளாக்கலாம்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின்படி பாராளுமன்றத்தில் பேசப்பட்ட தவறான கருத்தை சுட்டிக்காட்டி வாபஸ் வாங்குமாறு கோரவும் ஹன்ஸாட்டிலிருந்து நீக்குமாறு கோரவும், அதற்குமப்பால் விவாதத்துக்கு நேரம் ஒதுக்குமாறு கோரவும் இடம்பாடுகள் நிட்சயம் இருக்கும்.
தேடிப்பாருங்கள்.
முஸ்லிம் சமூகத்துக்கு இப்போது தேவைப்படுவது வரலாற்று பதிவுகளே.
முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாத சிந்தனையுடையோராக சித்தரித்த கூற்றை அதே பாராளுமன்றத்திலேயே மறுதலிக்க வேண்டும்.
அதைவிடுத்து அவரிடமே போய் தேரரை கைது செய்ய உதவுங்கள் என்று கூறுவது கோமாளித்தனத்தின் உச்சம். பாராளுமன்றம் பேசும் இடம். பேசுவதே அங்கு செல்வதன் நோக்கம்.
பேசி என்ன நடக்கப் போகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை.
ஒவ்வொரு வார்த்தையும் ஹன்சாட்டில் இருக்கும்
முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாத மனநிலை உடையவர்கள் என்ற விஷமக்கூற்றை மறுதலித்த பதிவுகள் வரலாற்றுத் தேவை.
பொலீஸ் அமைச்சரின் கூற்று தேரரின் கூற்றைவிட ஆபத்தானது.
அவரின் உரையை அக்கு வேறு ஆணி வேறாக ஆதாரஙகளுடன் மறுதலிக்க வேண்டும். மிக நுன்னியமான இந்த இந்த காரியத்தை செய்யக்கூடிய ஆற்றல் நம்மவர்களிடம் இருக்குமா என்பது சந்தேகமே.
தேரர் எந்த குர்ஆன் வசனத்தை தான் விரும்வியவாறு வியாக்கியானம் செய்து அழ்ழாஹ்தான் மகா மூளக்காரயா என்று சொன்னாரோ அதே குர்ஆன் வசனமே ஐ.எஸ் மனநிலையின் காரணி என்றும் ஆதலால் அனைத்து முஸ்லிம்களுக்குள்ளும் பயங்கரவாத மனமுண்டு என்ற கருத்துப்பட பொலீஸ் அமைச்சரினால் கூறப்பட்ட குற்றச்சாட்டை முழு முஸ்லிம் சமூகம் சார்பாக மறுதலிக்க வேண்டும்.
மட்டுமல்ல, பொலீஸ் அமைச்சர் தனது வியாக்கியானத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்.
பாராளுமன்ற உரைகளின் ஹன்ஸாட் பதிவுகள வரலாற்று ஆய்வுகளின் முக்கிய ஆதாரங்கள். தேரரை யாரும் கைது செய்ய போவதில்லை.
சிலவேளை அப்படி நிகழ்ந்தால் அதற்கு வேறு அரசியல் காரணங்களேயிருக்கும்.
பாராளுமன்றத்தில் பேசுவதாலும் எதுவும் நடக்கபோவதில்லை
ஆனால் எல்லாமே பதிவுகளாகின்றன. சரவதேசத்துக்கு பரிமாற்றப்படுகின்றன.
இன்னொரு நாட்டு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்படலாம்.
அதையும் தாண்டி பிச்சை கேட்டு இஸ்லாமிய நாடுகளிடம் செல்லும்போது தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கலாம். நிந்தனை தவிர்ப்பை நிபந்தனையாக்கலாம்.
எத்தனையோ வகையான நிர்ப்பந்தஙகளை ஒரு பாராளுமன்ற நிகழ்வினூடாக கொண்டு வரலாம் ஆனால் எம்மவர்களுக்கு அதற்குரிய துணிவும் ஆற்றலும் இருப்பதாக நான் அறியவில்லை.
கௌரவர ஊப் ஹகீமால் முடியும் செய்வாரா?
பொறுத்திருந்து பார்போம்.
-அரசியன்-
தேரரின் இனவாத கருத்துக்கு எதிராக முறைப்பாடு செய்தும் தேரர் மீது யாரும் எந்த நடவடிக்கையும எடுக்கப்போவதில்லை.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 26, 2021
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 26, 2021
Rating:

கருத்துகள் இல்லை: