Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

Subject: இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக்குழுவின் பணிகள் பாராட்த்தக்கவை- தேசிய சமாதானப் பேரவை தெரிவிப்பு

எம்.எல்.எஸ்.முஹம்மத் 

ஜனநாயகப் பண்புகளை பாதுகாப்பதன் மூலம் இனங்களுக்கு மத்தியில் நல்லுறவையும்,சமாதானத்தையும் கட்டியெழுப்பும் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக் குழுவின் பணிகள் அனைத்தும் பாராட்டத்தக்கவைகள் என தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்சித் திட்ட புணிப்பாளர் சமன் செனவிரத்ன தெரிவித்தார்.

மோதல் தவிர்ப்புக்கான வழிமுறைகள் தொடர்பில்  நிகழ்நிலை ஊடாக இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக் குழுவினருடன் அண்மையில்  இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிகையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் 

தனிமனிதர்கள் சமூகமாக இணைந்து வாழ்கின்ற போது மோதல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.ஆனால் முறையான திட்டமிடல்கள் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக மோதல்களை தவிர்க்கவும்,அவற்றிற்காAன உரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவும் முடிகிறது.

இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக் குழு இந்த விடயத்தில் மிக நிதானமாக செயற்படுகிறது.இரத்தினபுரி மாவட்ட சர்வ மதத் தலைவர்கள் சமூகத் தலைவர்கள்  மற்றும்  பிரதேச அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கும், மோதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.இது ஜனநாயகத்திற்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய  வெற்றியாகும்.எமது தேசிய சமாதனப் பேரவை தொடர்ந்தும் உங்களுக்கு இயன்ற ஒத்துழைப்புக்களையும், உதவிகளையும் வழங்க காத்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரிமாவட்ட சர்வ மதக்குழுவின் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்குடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹஸித இந்திக வீரவர்தனவின் தலைமையில்  ஏழு பேர் கொண்ட மாவட்ட  செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி குழு அதன் முதற்பணியாக இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கா.பொ.த.சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள      50  வறிய மாணவர்களுக்கு பரீட்சைக்கு அவசியமான கற்றல் உபரகணங்களை வழகுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

 

Subject: இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக்குழுவின் பணிகள் பாராட்த்தக்கவை- தேசிய சமாதானப் பேரவை தெரிவிப்பு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 05, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.