காணாமல்போனவர்களின் உறவுகளுக்கு ஒரு லட்சம் இழப்பீடு – அமைச்சரவை அமனுதி.....
காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (15.03.2022) நடைபெற்றது.
காணாமல்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு லட்சம் ரூபா இழப்பீடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று (15.03. 2022) நடைபெற்றது.
குடும்ப மீள்வாழ்வுக்காகவும், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்துள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு 25 விசாரணைக்குழுக்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.” – என்றார்.
கருத்துகள் இல்லை: