க.பொ.த சாதாரணப் பரீட்சை இடம்பெறுமா......?.
மே மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண பரீட்சை திட்டமிட்டவாறு இடம்பெறுமா என சந்தேகிக்கப்படுகின்றது.
சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 லட்சம் மாணவர்கள் தோற்றவுள்ளனர். 7 லட்சம் மாணவர்களிற்கும் 9 பாடங்களிற்கான வினாத்தாள் மற்றும் விடைத்தாள் என்பன பரீட்சைத் திணைக்களத்தினால் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு வினாத்தாள் அச்சிடுவதற்கான பேப்பர் மட்டும் சுமார் ஒரு லட்சம் றீம் பேப்பர்கள் தேவைப்படு உள்ளது.
இவற்றை கொள்வனவு செய்வதானால் அதற்கான பணத்தை பெறுவதே பெரும் நெருக்கடி நிலமை காணப்படுகின்றது. இருந்தபோதும் பரீட்சைத் திணைக்களம் நேற்றைய தினம் தமக்கான தேவை விபரத்தினை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விபரத்திற்கான பேப்பர்கள ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கிடைத்தால் வினாத்தாள் அச்சிட முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.
TL
க.பொ.த சாதாரணப் பரீட்சை இடம்பெறுமா......?.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 15, 2022
Rating:
கருத்துகள் இல்லை: