Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2028ம் ஆண்டு வரும் போது காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 5 வீதமான ஆண் ஆசிரியர்களே ஆசிரியர் தொழிலில் இருப்பார்கள்.

2028ம் ஆண்டு வரும் போதுகாத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 5 வீதமான ஆண் ஆசிரியர்களே ஆசிரியர் தொழிலில் இருப்பார்கள் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹக்கீம்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 2028ம் ஆண்டாகிற போது 95 வீதம் பெண் ஆசிரியைகளும் 5 வீதமான ஆண் ஆசிரியர்களும் ஆசிரிய தொழிலில் இருப்பார்கள் என காத்தான்குடி கோட்டக் கல்விக் கணிப்பாளர்; AGM.ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திற்கு 1983ம் ஆண்டு தரம்1ல் கல்வி கற்ற அப் பாடசாலையின் பழைய மாணவர்களினால் வெள்ளிக்கிழமை மல்டி மீடியா உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் தற்போது நமது காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது.

தற்;போது 65 வீதம் பெண் ஆசிரியைகளும், 35 வீதம் ஆண் ஆசிரியைகளும் கடமையாற்றுகின்றனர்.

இது 2028ம் ஆண்டு ஆகிற போது 5 வீதமான ஆண் ஆசிரியர்களே ஆசிரியர தொழிலில் இருப்பார்கள். 95 வீதம் பெண்களே இந்த ஆசிரிய தொழிலில் இருப்பார்கள். இது நமது கல்வியில் கடும் தாக்கத்தை செலுத்தும்.

வர்த்தகத்தில் வியாபாரத்தில் கவனம் செலுத்தும் நாம் இந்த விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாண்டு நடைபெற்ற பாடசாலை தவணைப் பரீட்சையில் 6ம் ஆண்டு மாணவர்கள் 50க்கும் குறைவான புள்ளிகளை இஸ்லாம் பாடத்தில் பெற்றுள்ளனர்.

மாணவர்களின் ஒழுக்க விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மாணவர்கள் தலை முடியை வெட்டும் விடயத்தில் நமது பிரதேசத்திலுள்ள சலூன்களுக்கு காத்தான்குடி நகர சபை இறுக்கமான சில கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும்.

அதற்கு கட்டுப்படாத நமது பிரதேசத்திலுள்ள சலூன்களின் அனுமதியை ரத்துச் செய்ய காத்தான்குடி நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலைக்கு மாணவர்கள் வரும் போது தலை முடியை மிக மோசமான முறையில் வெட்டிக் கொண்டு வருகின்றனர் இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எதிர் காலத்தில் சகல ஆசிரியர்களும் கணனி அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும். கணணி அறிவில்லாமல் கடமையாற்றுவதென்பது கடினமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆசிரியருக்கும் கணனி அறிவு அவசியமாகும்.

இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களின் இவ்வாறான உதவி என்பது வரவேற்கத்தக்கது. இதற்காக இப் பழைய மாணவர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
2028ம் ஆண்டு வரும் போது காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 5 வீதமான ஆண் ஆசிரியர்களே ஆசிரியர் தொழிலில் இருப்பார்கள். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 11, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.